பார்த்துக்கொண்டு, பொறி வரி வண்டின் ஈட்டம்-உடற்புள்ளிகளையும் இசைப்பாட்டையுமுடைய வண்டுகளின் கூட்டங்கள், புறத்து சுற்றுஉம் இருந்து இரங்க-வெளியிலே சுற்றிலும் இருந்து ஆரவாரிக்க,-வண்டு ஒன்று -ஒருவண்டானது, இறகரால் வீசி உள்புக்கு-(தன்) சிறகுகளால் (அத்தாமரையரும்பின் இதழ்களை) நெகிழ்த்தி அதனுள்ளே புகுந்து, இன் மது நுகர்தல் - இனிய தேனையுண்ணுதலை, கண்டு-(பாண்டவர்கள்) பார்த்து,-நெறியில் நல் நிமித்தம் ஆக நெஞ்சு உற நினைத்து சென்றார்-(அதனைத் தமக்கு) வழியிலே நேர்ந்த நற்குறியாக மனத்திற்பொருந்த நினைத்து வழிச்சென்றார்கள்; (எ-று.) திரௌபதியைக் கருதி வந்த பலர் வாளாசூழ்ந்துநிற்கத்தாம் தடையறச் சென்றுஅவளைப் பெறுதல் கூடு மென்பதற்கு, வண்டின்செயலை ஓர் அறிகுறியாக எண்ணிச்சென்றனரென்க. (487) 13. | வண்டுறைமருங்கினாங்கோர் மாங்கனிவீழ்தல்கண்டே தண்டுறைமீன்களெல்லாந் தத்தமக்கிரையென்றெய்த விண்டுறைகிழியவோடி வென்றொருவாளைதன்வாய்க் கொண்டுறைவலிமைநோக்கிக் குறிப்பினாலுவகைகூர்ந்தார். |
(இ - ள்.) ஆங்கு-அவ்வழியிலே வண் துறை மருங்கின்-செழிப்பான ஒரு நீர்த்துறையின் ஓரத்திலே, ஓர் மாங்கினி வீழ்தல் -ஒரு மாம்பழம் விழுந்ததை, கண்டு-,தண் துறை மீன்கள் எல்லாம்-குளிர்ச்சியான அந்நீர்த்துறையிலுள்ள மீன்கள்யாவும்,தம் தமக்கு இரை என்று எய்த-(அதனைத்) தங்கள் தங்களுக்கு இரையாகக்கடவதென்று எண்ணி(க் கவர்தற்கு) வர, ஒரு வாளை - ஒரு வாளைமீன், உறைவிண்டு கிழிய ஓடி - நீர் கிழிந்துபிரியும்படி ஓடிவந்து, வென்று- (அம்மீன்களையெல்லாம்) பயன் பெறாதொழியச்செய்து, தன் வாய் கொண்டு உறை- (அம்மாங்கனியைத்) தன் வாயினாற் கவர்ந்துகொண்டிருந்த, வலிமை-வல்லமையை, நோக்கி-(பாண்டவர்கள்) பார்த்து,-குறிப்பினால் - அந்தக்குறிப்பினால், உவகை கூர்ந்தார்-; (எ-று,) திரௌபதியைக்குறித்துத் தம் தமக்கு உரியளாகக்கடவளென்ற விருப்பத்தோடு பற்பல அரசர்வந்து சூழ்ந்துநிற்கத் தாம் தடையறச்சென்று அவர்களைப் பயன்பெறாதொழிபவராக்கி அவனைக் கைக்கொண்டு கவலையற நுகர்ந்து வாழலா மென்பதற்கு, மாங்கனியை மீன்களுக்குஇல்லாமல் வாளைமீன் கவர்ந்த இச்செயலைச் சூசகமாகக்கண்டு மிகமகிழ்ந்தனர். (488) 14. | மாக்குரலளகவல்லி வதுவையினழகுகாணத் தாக்குரலடிகொள்யானைத் தரணிபரெவரும்வந்தார் வீக்குநன்மிளிர்பொற்பூணீர் விரைவுடன்வம்மினென்று கூக்குரல்விளிப்பபோலுங் கோகிலக்குரலுங்கேட்டார். |
(இ-ள்.) 'மா-கருநிறமான, குரல் அளகம் - கூந்தலையுடைய, வல்லி- பூங்கொடிபோன்ற திரௌபதியினது, வதுவையின் அழகு-கலியாணக்காட்சியை, காண - காணுதற்கு, தாக்கு உரல் அடி கொள் யானை தரணிபர் எவர்உம் வந்தார் - (பகைவரைத் தாக்கு |