பக்கம் எண் :

திரௌபதி மாலையிட்ட சருக்கம்269

போல்வார் - அம்புத்தொழில்களை யெல்லாம்பழகியவில்லையேந்துங்கையையுடைய,
இளமையான ஆண்சிங்கத்தைப்போன்ற பாண்டவர்கள்,- கண்டு-(அவற்றைப்) பார்த்து,
-கண் களித்து நின்றார்- (சுபசூசகமாகக் கருதியதால்) கண்கள்  களிப்படையப்பெற்று
நின்றார்கள்; (எ-று.)

     வண்டு மலரில்மொய்த்துத்தேனையுண்ணுதலையும், பறவைகள் நீரிற் குடைந்து
விளையாடுதலையும்,விலங்குகள் துணையோடு மேவுதலையும், மரங்களைக் கொடிகள்
தழுவுதலையும், தாம் திரௌபதியைப்பெற்றுக்  கூடிக்கலந்து இன்பமனுபவித்தலை
முந்தித்தெரிவிக்கும் நன்னிமித்தமாகக்கொண்டனர், 'ஏவெலாம்' -பெயர்ச்சொல்
ஏகாரத்தின்முன் வகரவுடம்படுமெய் தோன்றிற்று. பாண்டவர் ஐவராதற் கேற்ப
நன்னிமித்தங்கூறும் பாடல்களும் (செ.12-16) ஐந்தாக அமைத்தார்போலும். (491)

17.-பாண்டவர் பாஞ்சாலநகரத்தின் மதிலைக் காணுதல்.

வாரணமாயைசூழ்ந்த மாயவன்றோற்றம்போலப்
பேரொளிபம்பியார்க்கும் பேசருஞ்சிறப்பிற்றாகிப்
பூரணகும்பம்பொற்கோ புரங்களாற்பொலிந்துதோன்றும்
ஆரவமிகுந்தபல்புள் ளகழிசூழ்புரிசைகண்டார்.

     (இ - ள்.) வாரணம் மாயை சூழ்ந்த - (பொருள்களை) விளங்கவொட்டாது)
மறைக்குந்தன்மையுள்ள மாயையாற்சூழப்பட்ட, மாயவன் தோற்றம்போல-
திருமாலினதுசொரூபம்போல, போ ஒளிபம்பி-மிக்கஒளிசிறந்து, யார்க்குஉம் பேசு
அரு சிறப்பிற்றுஆகி-எத்துணைவல்லோர்க்கும் சொல்லுதற்கரியசிறப்பையுடையதாய்,
பூரண கும்பம்பொன் கோபுரங்களால் பொலிந்து தோன்றும் - பூர்ண
கும்பங்களினாலும் அழகியகோபுரங்களினாலும் விளக்கமுற்றுத் தோன்றுகிற,
ஆரவம் மிகுந்து பல் புள்அகழி சூழ் புரிசை-ஆரவாரம் மிக்க பல
நீர்ப்பறவைகளையுடைய அகழியினாற்சூழப்பட்டதான் (அந்நாகரத்தின்) மதிலை,
கண்டார்-(பாண்டவர்கள்)பார்த்தார்கள்;

     ஒளிமயமாய் மனமொழிமெய்களுக்கு எட்டாததாய் எங்கும் வியாபகமாயிருப்பது,
பரப்பிரமமென்கிற திருமாலினுடைய சொரூபம், மூலப்பிரகிருதியும் சீவனும் காலமும்
பிரபஞ்சமும் சராசரங்களும், அந்தப்பகவானுடைய உருவங்களாம்.
தத்துவங்களையெல்லாம் தனக்குள் அடக்கிக்கொண்டிருக்கிற அந்தப்பரமாத்மாவினது
பிரபஞ்சவடிவமான சொரூபத்தை, மாயையென்றும் அவ்யக்தமென்றும்
பிரதானமென்றும் மறுபெயர்களையுடையபிரகிருதிசூழ்ந்திருக்கின்றதென்ப. இங்கு,
சர்வவியாபகமான  பகவானது சொரூபத்தை- மிகவுயர்ந்த மதிலுக்கு உவமையாகவும்,
வியக்தமான பிரபஞ்சசொருபத்தைச் சூழந்த அவ்யக்தமான பிரகிருதி சொரூபத்தை-
அம்மதிலை அடிப்புறத்திலேசூழ்ந்துள்ள அகழிக்குஉவமையாகவும் கூறினார்.
அன்றியும், எம்பெருமானது திவ்வியசொரூபத்தை அனைவரும் எளிதில்
அடையவொண்ணாதபடி சூக்ஷ்மரூபமான மாயை இடைநின்று
தடைசெய்கின்றதுபோல, மதிலை அனைவரும் எளிதிற் சேரவொண்ணாதபடி
தடைசெய்கின்றது அகழி