பக்கம் எண் :

திரௌபதி மாலையிட்ட சருக்கம்271

ஸ்திதி சங்காரங்கள் பிரவாகம் போல அவிச்சிந்நமாக நடந்து வருதலும், உயிர்கள்
மாறிமாறிப் பலபிறப்பும் பிறந்து இருந்து இறத்தலும், முன் இரண்டு அடிகளில்
விளங்கும். முகுந்தன்- முத்தியுலகவின்பத்தையும் இவ்வுலகவின்பத்தையும் (தன்
அடியார்க்குத்) தருபவ னென்று பொருள்படும்.                     (494)

20.- அந்நகரத்து வீதிகளில் நாட்டிய துவசங்களின்
வருணனை.

குழைப்புறங்கடந்தசெங்கட் குறுநகைக்கொவ்வைச்செவ்வாய்
இழைப்பொலிமுலையினாளுக் கிற்றைநாள்வதுவையென்று
மழைப்புறமாடமேறி வருநரைமலர்க்கைகாட்டி
அழைப்பனபோன்றவீதி யணிகொடியாடையெல்லாம்.

     (இ - ள்.) வீதி அணி கொடி ஆடைஎல்லாம் - அந்நகரத்து வீதிகளின்
அலங்காரமாக நாட்டப்பட்ட துவசங்களின் சீலைகளெல்லாம்,-குழை புறம் கடந்த -
காதின்புறத்தைக் கடந்து சென்ற [மிகநீணட,]. செம் கண் - சிவந்தகண்களையும்,
குறுநகை - புன்சிரிப்பையும், கொவ்வை செம்வாய் - கொவ்வைப் பழம்போலச்
சிவந்த வாயையும், இழை பொலி முலையினாளுக்கு -(தம்மிடத்து அணிந்த)
ஆபரணங்கள் விளங்குதற்குக் காரணமான தனங்களையுமுடைய திரௌபதிக்கு,
இற்றை நாள் வதுவை என்று-இன்றைத்தினம்  சுயம்வரமென்று தெரிவித்து, மழை
புறம் மாடம் ஏறி - மேகங்களைத் தம்மேலுடையனவான [மிகவுயர்ந்த]
மேல்மாளிகைகளின்மீது ஏறி, வருநரை மலர் கை காட்டி அழைப்பன போன்ற-
(அவ்விவாகத்தின்பொருட்டு) வருகின்றபாண்டவர்களை (விரைந்து வருமாறு)
மலர்போன்ற கைகளைக்காட்டியழைப்பன போன்றன;

     இங்கு ஆடைகளைக் கைகளாகவும், கொடிகளை அக்கைகளையுடையராகவும்
கொள்க. தற்குறிப்பேற்றவணி. திரௌபதியின் கண்கள் மிக நீண்டுள்ளன என்ற
கருத்தை விளக்க, 'குழைப்புறங் கடந்த செங்கண்' என்றார். குழை-ஒருவகைக்
காதணி; இலக்கணையாய், காதை யுணர்த்திற்று.                      (495)

21.- பாண்டவர் அவ்வூரில் ஒருகுயவன்வீட்டில்
இடங்கொள்ளுதல்.

விண்டலம்புதைத்தபைம்பொற் றுகிலிடுவிதானநீழல்
மண்டகிற்புகையின்மூழ்கி யாவணமறுகிற்செல்வம்
கண்டுகண்டரியேறானின் கவினுடைநெடுந்தோல்போர்த்துக்
கொண்டனசெயலாராங்கோர் குலாலனதிருக்கைசேர்ந்தார்.

     (இ - ள்.) அரி ஏறு - ஆண்சிங்கம், ஆனின் கவின் உடை நெடு தோல்
போர்த்துக்கொண்டு அன-பசுவினுடைய அழகுள்ள நெடியதோலைப்
போர்த்துக்கொண்டாற் போன்ற, செயலார்-செய்கையையுடையவர்களாகிய
பாண்டவர்கள்,- விண்தலம்புதைத்த- ஆகாயத்தினிடம்முழுதையும் மூடிய, பைம்
பொன் துகில் - பசும்போன்சீலையினால், இடு - இடப்பட்ட,விதானம் மேற்கட்டியின்
நீழல்-நிழலிலே (கடந்துசென்ற), மண்டு அகில் புகையில் மூழ்கி- (அங்கு)
நெருங்கியஅகிற்புகையிலே, முழுகி, ஆவணம் மறுகில் செல்வம் கண்டு கண்டு -
கடைவீதியிலுள்ள செல்வங்களைப் பார்த்