துக்கொண்டே, ஆங்கு ஓர் குலாலனது இருக்கை சேர்ந்தார் - அந்நகரில் (பார்க்கவனென்னும்) ஒரு குயவனுடைய வீட்டிற் சேர்ந்தார்கள்; (எ-று.) 'அந்தணர் குயவர்மனையில் தங்கலாம்' என்பது, நூற்கொள்கை. பராக்கிரமம்மிகுந்த பாண்டவர் அத்திறத்தை வெளிக்காட்டாது நீறுபூத்தநெருப்புப்போல உள்ளடக்கிச் சாந்தகுணமுடைய அந்தணர்களின் வடிவத்தைமேற்கொண்டுள்ளாராதலின், சிங்கம் பசுவின்தோலைப் போர்த்தாற் போன்றசெய்கையரென்றார். (496) 22.-பாண்டவர் சுயம்வரமண்டபஞ் சேர்தல். ஆங்கணற்றவத்தான்மிக்க வன்னையையிருத்திமைந்தர் தாங்கண்முற்றுணையாய்வந்த தாபதன் தன்னோடெய்தித் தூங்கணங்குரீஇயின்மஞ்சத் தலந்தொறுந்தூங்குகின்ற தேங்கண்மாத்தெரியல்வேந்தர் சேர்ந்தபேரவையிலானார். |
(இ-ள்.) மைந்தர் - புதல்வர்களாகிய பாண்டவர்கள், நல் தவத்தால் மிக்க அன்னையை - சிறந்த தவத்தினால் மேம்பட்ட தங்கள் தாயான குந்திதேவியை, ஆங்கண் இருத்தி-அவ்விடத்திலே (அக்குயவன்வீட்டிலே) இருக்கச்செய்து,- தாங்கள்-,துணை ஆய் முன் வந்த தாபதன்தன்னோடு எய்தி - (தங்களுக்குத்) துணையாய் முன்னேவந்ததௌமியமுனிவனுடனேகூடி,- தூங்கணங்குரீஇயின் மஞ்சம் தலம்தொறும் தூங்குகின்ற தேம் கள் மா தெரியல்வேந்தர் சேர்ந்த பேர் அவையில் ஆனார் - தூக்கணங்குருவி (ஒடுங்கியிருத்தல்) போலச் சிங்காசனங்களில் (வேட்கைமிகுதியாற்) சோர்வுற்றிருக்கிற இனியதேனையுடைய சிறந்தமாலையைத் தரித்த அரசர்கள் கூடிய பெரிய சுயம்வரசபையிற் சென்று சேர்ந்தார்கள்; தாபதர் தம்மோடெய்தி என்ற பாடத்துக்கு-முன்னமேதொடங்கித் தமக்குத் துணையாய்வந்த வேத்திரகீயநகரத்து அநதணர்களோடு கூடி யென்று உரைக்க. (497) 23.-பாண்டவர்க்காக இரங்குகிற திரௌபதி, தாதியரால் தேறுதல். ஆதியிற்குந்திமைந்த ரைவர்க்குமுரியளாமென்று ஓதியவிதியினானெஞ்சுலப்புறாவுவகைகூர்வாள் சோதிடம்பொய்யாதென்றுந் தோன்றுவருரியோரென்றுந் தாதியர்தேற்றத்தேற்றத் தன்மனத்தளர்வுதீர்வாள். |
நான்குகவிகள்-ஒருதொடர். (இ - ள்.) ஆதியில் - முன்பு, குந்திமைந்தர் ஐவர்க்குஉம்உரியள் ஆம் என்று ஓதிய - குந்தியின் குமாரர்களான பாண்டவரைவர்க்கும் (இவள்) உரியவளாவளென்று (தன்னைக்குறித்துச் சோதிடர்) கூறிய, விதியினால் - அச்சாஸ்திரப்பயனைத் தான் கேட்டதனால், நெஞ்சுஉலப்புறா உவகை கூர்வாள்-(அதுமுதல்) மனத்தில் நீக்கமில்லாதமகிழ்ச்சி மிகுபவளும்,-சோதிடம் பொய்யாது என்றுஉம்-(பாண்டவர் அரக்குமாளிகையில் இறந்தில ரென்று ஆய்ந்து கூறிய) சோதிடசாஸ்திரக்கொள்கை பிழைபடா தென்றும், உரியோர் தோன்றுவர் என்றுஉம் - (உனக்கு) உரிய கொழுநராகிய அவர் வந்து தோன்றுவ ரென்றும், தாதியர் தேற்ற தேற்ற- |