பக்கம் எண் :

திரௌபதி மாலையிட்ட சருக்கம்275

கந்தனுமுவமையாற்றாக் காவலர்காமத்தீயில்
இந்தனமிடுவதேய்ப்ப வேத்தவையேற்றினாரே.

     (இ - ள்.) தாயின்உம் பரிவு கூர்ந்தோர்- (அவளிடத்துப்) பெற்றதாயினும்
அன்புமிக்கவர்களான செவிலியர்,-சந்து அணிமுலையினாளை -
சந்தனக்குழம்பையணிந்த தனங்களையுடைய அத்திரௌபதியை,-குமரர் யார்உம்
வந்தனர் வருக' என மகிழ்ந்து போற்றி - 'இராசகுமாரரெல்லோரும்
(சுயம்வரமண்டபத்திற்கு) வந்துசேர்ந்தார்கள்: - (நீயும்) வருவாயாக' என்று
மகிழ்ச்சியோடு உபசாரமாகக்கூறி,-கந்தன்உம் உவமை ஆற்றா காவலர் காமம் தீயில்
இந்தனம் இடுவது ஏய்ப்ப - முருகக்கடவுளும் ஒப்பாகாத (மிக்க அழகையும்
ஆற்றலையுமுடைய) அரசர்களுடையகாமாக்கினியில் விறகிடுதலைப்போல, வேந்து
அவை ஏற்றினார் - (அவளை) இராசசபையில் அழைத்துக்கொண்டு வந்து
சேர்ந்தார்கள்; (எ-று.)

     பாஞ்சாலியின் அழகுமிகுதியைக் கேள்வியுற்றதனாலேயே மிக்க காதல்
கொண்டுள்ளஅரசர்கள் அவ்வழகை நேரே கண்டு பின்னும் மிக்கமோகத்தை
யடையும்படிசெவிலியர் அவர்களெதிரிற் கொணர்ந்தன ரென்பார்,
'காவலர்காமத்தீயில் இந்தனமிடுவதேய்ப்ப வேத்தவை யேற்றினார் என்றார். (502)

28.-திரௌபதியைக் கண்டவளவிலே அரசர்கள்
மோகித்தல்.

வெங்கழற்படைக்கைவேந்தர் விழிகளால்விளங்குமேனிப்
பொங்கழற்பிறந்தபாவை பொற்பினைப்பொலியநோக்கிப்
பைங்கழைத்தனுவோன்செங்கைப் பகழியாற்பாவமெய்தி
அங்கழற்பட்டநெய்போ லனைவருமுருகினாரே.

     (இ - ள்.) வெம் கழல்-(பகைவர்க்கு) அச்சந்தருகிற வீரக்கழலையும், படை
கை - ஆயுதங்களையேந்திய கையையுமுடைய, வேந்தர் அனைவர்உம் -
அரசர்களெல்லோரும்,-விளங்கும் மேனி- ஒளி வீசிவிளங்குகிற வடிவத்தையுடைய,
பொங்கு அழல் பிறந்தபாவை-சொலிக்கிற யாகாக்கினியில் தோன்றிய
சித்திதரப்பதுமைபோன்ற திரௌபதியினது, பொற்பினை - அழகை, விழிகளால்
பொலிய நோக்கி-(தங்கள்) கண்களால் நன்றாகப் பார்த்து, அங்கு - அப்பொழுது-
பைங் கழை தனுவோன் செம் கை பகழியால் பாவம் எய்தி - பசிய கரும்பை
வில்லாகவுடைய மன்மதனது சிவந்த கையினாலெய்யப்பட்ட அம்புகளினால்
நிலைவேறுபாட்டை யடைந்து, அழல் பட்ட நெய்போல்-தீப்பட்டநெய்போல
(நேகிழ்ந்து), உருகினார்-;(எ-று.)

     பாவம்-பாவம்:  வடசொல்; அதாவது மெய்ப்பாட்டுக்குறிப்பு; இங்கு சிந்தனை,
அசைவின்றி நிற்றல், தோள்மெலிதல், ஒடுங்கல், நெஞ்சழிதல், மயிர்சிலிர்த்தல்,
உடல்வியர்த்தல், நிறம்வேறுபடுதல், நெடுமூச்செறிதல், மொழிபலபிதற்றல், கலக்கம்
முதலிய காமவிகாரத்தாலாகுஞ் செய்கைகள். மன்மதனுக்குக் கரும்பு வில்லென்றும்,
தாமரை முதலிய மலர்கள் அம்புகளென்றும் கூறுப. வேந்தர்களுடைய வெம்மையைக்
கழலின்மெலேற்றி 'வெங்கழல்' என்றார்; இது; ஒருவகை உபசாரவழக்கு,
அழலிற்பிறந்தபாவை