யைக் கண்டவுடனே அழற்பட்டநெய்போ லாயின ரெனச் சமத் காரந்தோன்றக் கூறியவாறு.- (503) 29.- திரௌபதி அச்சபையில் பாண்டவர்வரவை எதிர்பார்த்தல். மங்குலின்மங்குன்மூடி வயங்கொளிமறைந்துதோன்றாச் செங்கதிர்ச்செல்வன்போலச் சீர்கெழுவடிவமாறி அங்கவரிருந்ததன்மை யறிந்ததோசெறிந்தபொய்கைப் பங்கயம்போன்றதாலப் பரிவுறுபாவைபார்வை. |
(இ-ள்.) மங்குலின் - வானத்தில், மங்குல் - மேகம், மூடி - மூடுதலால், வயங்குஒளி மறைந்து-விளங்குகிற (தனது) ஒளி மறைபட்டு, தோன்றா- வெளித்தோன்றாத,செம் கதிர் செல்வன் போல- சிவந்தகிரணங்களின் வளத்தையுடைய சூரியன்போல,அவர்-அப்பாண்டவர்கள், சீர் கெழு வடிவம் மாறி - சிறப்புமிக்க (தங்கள்)உருவம்மாறி, அங்கு இருந்த தன்மை-அச்சபையில் வந்து வீற்றிருந்த தன்மையை, அபரிவு உறு பாவை பார்வை - (அவர்களிடம்) அன்புமிக்க அந்தத்திரௌபதியினுடைய கண், அறிந்ததுஓ-தெரிந்துகொண்டதோ? செறிந்த பொய்கைபங்கயம் போன்றது - நீர்நிறைந்த தடாகத்திலுள்ள தாமரைமலரை யொத்திருந்தது;(எ-று.)-ஆல்-ஈற்றசை.வானத்தில் மேகம் படர்ந்து மறைத்தலால் விளங்காமல் மறைந்து நின்றாலும், தாமரைஅச்சூரியன் உதயமாகித்தோன்று தலையே எதிர்பார்த்திருக்கும்; அவ்வாறேதிரௌபதியின் பார்வை தனக்குஉரிய கணவராகிய பாண்டவர் உண்மைவடிவத்துடன் அங்கு வெளிப்படுதலை எதிர்நோக்கியிருந்த தென்க. (504) 30.- அப்பொழுது திருஷ்டத்யும்நன் ஒன்றுகூறுத் தொடங்குதல். மனக்கடுங்காதல்விம்ம மாலைதாழ்புயங்கள்வாட எனக்கெனக்கென்றென்றேமாந் திருத்தகாவலரைநோக்கிச் சினக்கடமொழுகுங்கன்னக் களிறனான்றிட்டத்துய்மன் நினைக்கவுமரியதொன்றை நினைவினோடுரைசெய்வானே. |
(இ-ள்.) மனம் கடு காதல் விம்ம - மனத்திற் பேராசை மிக, மாலை தாழ் புயங்கள் வாட-(அதனால்) மலர்மாலைதொங்கும் தோள்கள் மெலிய, எனக்கு எனக்கு என்று என்று ஏமாந்து இருந்த - '(திரௌபதி) எனக்கு (உரியளாக்கடவள்) எனக்கு (உரியளாகக்கடவள்)' என்று தனித்தனி (கருதி) மிகுகளிப்புக்கொண்டிருந்த, காவலரை நோக்கி - (சுயம்வரத்துக்குவந்த) அரசர்களைப்பார்த்து, சினம் கடம் ஒழுகும் கன்னம் களிறு அனான் திட்டத்துய்மன்- சீற்றத்தையும் மதசலம்ஒழுகுங் கன்னங்களையுமுடைய ஆண்யானையைப் போன்றவனான திருஷ்டத்யும்நன், நினைக்கஉம் அரியது ஒன்றை நினைவினோடு உரைசெய்வான் - நினைத்தற்கும் அரிய ஒரு வார்த்தையைக் கருத்தோடு சொல்பவனானான்; (எ-று.)-அதனை அடுத்த கவியிற் காண்க. இவன் கூறிய வார்த்தை சுயம்வரத்திற்குவந்த அரசர்கள் சிறிதும் எதிர்பாராத தென்பதும், பாண்டவரை உளரோ இலரோ |