எனக் காணுங் கருத்தோடு ஏற்படுத்திக் கூறிய தென்பதும் விளங்கும். த்ருஷ்டத்யும்நனென்றபெயர் - காம்பீரியமும் பாதுகாத்தல்தொழில்வன்மையு முடையனாய் ஆற்றல் முதலியவற்றோடு சிறப்பாகப்பிறந்தவனென்னுங் காரணம் பற்றியதென்று வியாச பாரதம் கூறுகின்றது, 'களிற்றினான்' என்றும் பாடம். (505) 31.- 'குறியைத்தவறாது எய்தாற்குத் திரௌபதி உரியள்' எனல். சிலையிது சிலீமு கங்க ளிவைகடுந் திரிகை வேகத்து இலைமுகத் துழலு கின்ற வெந்திரத் திகிரி நாப்பண் நிலையிலா விலக்கு மஃதே நெஞ்சுற யாவ னெய்தான் கலைவலீ ரவற்கே யிந்தக் கன்னியு முரியு ளென்றான். |
(இ - ள்.) 'கலை வலீர்-கலைஞானங்களில் வல்லவர்களே! சிலை இதுவில் இதோஇருக்கிறது; சிலீமுகங்கள் இவை - அம்புகள் இதோ இருக்கின்றன; கடுந் திரிகைவேகத்து - முறுக்கிவிட்டவிசையையுடைய (குயவனது) சக்கரத்தின் வேகம்போன்றவேகத்தோடு, இலைமுகத்து உழலுகின்ற-ஆர்களின் நுனியமைந்த விளிம்பிற்சூட்டையுடையதாய்ச் சுழலுகின்ற, எந்திரம் திகிரி - சக்கரவடிவமான யந்திரத்தினது,நாப்பண்-நடுவிலே, நிலைஇலா - நிலைப்படாமலிருக்கிற, இலக்குஉம் -குறியும்,-அஃதுஏ - இதோகாணப்படுகிறது; (அந்த இலக்கை), நெஞ்சுஉற யாவன்எய்தான் - மனம்அமைய (உங்களில்) எவன் எய்துவீழ்த்துவனோ, அவற்குஏ - அவனுக்கே இந்தகன்னிஉம் உரியள்-கன்னிகையான இத்திரௌபதியும் உரியவளாவள், ' என்றான்-; (எ-று.) பதினெட்டு வித்தைகளுள்ளும், அறுபத்து நான்கு கலைகளுள்ளும் வில்வித்தைஒன்றாதலால், அதில் தேர்ந்தவர்களேயென்று உயர்த்திவிளிப்பான் 'கலைவலீர் 'என்றான். வில்லேற்றினான் இவளை எய்துமென்றஇது, எண்வகை மணத்துள்ஆசுரமாம். சிலீமுகம் - வடசொல்; கூர்மையுள்ள நுனியை யுடையதென்பது பொருள்,திரிகை-திரியுந்தன்மையது. 'எய்தான்' -இயல்பினால்வந்த காலவழுமைதி 'வேகத்திலையமொத்து' என்று பாடம். (506) வேறு. 32.-இரண்டுகவிகள்-அதுகேட்டு அரசர்கள் கலங்கினும் ஆசையொழியாமை கூறும். இச்சொற் பழனப் பாஞ்சாலர்க் கிறைவன் புதல்வனியம் புதல்கேட்டு அச்சொற் றத்தஞ் செவிக்குருமே றாகக் கலங்கு மரவன்னார் கச்சைப் பொருது புடைபரந்து கதித்துப் பணைக்குங் கதிராரப் பச்சைக் குரும்பை யிளமுலைமேற் பரிவா னாணம் பிரிவுற்றார். |
(இ - ள்.) இ சொல் - இந்தவார்த்தையை, பழனம் பாஞ்சாலர்க்கு இறைவன் புதல்வன்- கழனிகள் சூழ்ந்த பாஞ்சாலதேசத்திலுள்ளார்க்கு அரசனான துருபதனது குமாரனாகிய திட்டத்துய்மன், இயம்புதல் - சொல்லியதை, கேட்டு-செவியுற்று, அச்சொல்தம் தம் செவிக்கு உரும் ஏறு ஆக கலங்கும் -அந்த வார்த்தை தம் தம்காதுகளுக்குப் பேரிடிபோலாக (அதனாற்) கலங்கிய, அரவு |