அன்னார் - பாம்புபோன்றவர்களாகிய அரசர்கள்,-கச்சைபொருது-கஞ்சுகத்தை மொதி, புடை பரந்து - பக்கங்களிற் பரந்து, கதித்து - வளர்ந்து, பணைக்கும் - பருத்துள்ள, கதிர் ஆரம் பச்சைகுரும்பை இள முலைமேல் - ஒளியையுடைய முத்தாரங்களை யணிந்த பசிய தென்னங்குரும்பைபோன்ற இளைய தனங்களையுடையதிரௌபதியினிடத்துக் கொண்ட, பரிவால் - ஆசையினால், நாணம்பிரிவுற்றார் -வெட்கம்நீங்கினார்கள்; (எ-று.) இடியோசையைக் கேட்டவளவில் நாகம் அஞ்சுதல் இயல்பு; அதுபோல அவன்கம்பீரமாக உரத்தகுரலோடுசொன்ன இச்சொல்லைக் கேட்டு அரசர்கள் அஞ்சினர்.அங்ஙன் அஞ்சினும் 'ஆசை வெட்கமறியாது' என்றவாறு அரியகுறியைஎய்யத்தமக்கு இயலாதாயின் மானக்கேடு நேருமே யென்பதைச் சிறிதும் ஆலோசியாமலேதிரௌபதியினுடங் கொண்ட காதல்மிகுதியால் அரசர்களெல்லோரும் அந்தஇலக்கைஎய்ய முயலுங் கருத்தின ராயின் ரென்பதாம். த்ருஷ்டத்யும்நன்அங்ஙன்சொல்லிவிட்டுத் திரௌபதிக்கு ஆங்குவந்திருந்தத மன்னரைக்காட்டினானென்று பாரதங்களிற் காண்கின்றது. இதுமுதற்பதினாறு கவிகள் - பெரும்பாலும் மூன்று ஆறாஞ்சீர்கள் காய்ச்சீர்களும், மற்றையவைமாச்சீர்களுமாகிய அறுசீராசிரியவிருத்தங்கள். (507) 33. | கண்போலம்புநுதல்போலுங் கடுங்கார்முகமுங்காண்டொறுமத் திண்போர்வேந்தர்மனக்கலக்கஞ்செப்புந்தகைத்தன்றானாலும் விண்போயுழன்றுசுழலிலக்கை மெய்யேயெய்துவீழ்த்திமலர்ப் பெண்போல்வாளைக்கைப்பிடிக்கும்பேராசையினாற்பேதுற்றார். |
(இ-ள்.) கண் போல் - (திரௌபதியின்) கண்பார்வை போன்ற, அம்புஉம் - அம்புகளையும், நுதல் போலும் - (அவளுடைய) புருவம் போன்ற, கடு கார்முகம்உம் - வலியவில்லையும், காண்தொறும்-பார்க்குந்தோறுஉம். அ திண் போர் வேந்தர்- வலிய போர் செய்யவல்ல அவ்வரசர்களுக்கு உண்டான. மனக்கலக்கம்-, செப்பும் தகைத்து அன்று - (எவராலும்) சொல்லுந்தன்மையுடைத்தன்று (மிக அதிகமானது என்றபடி); ஆனால் உம் - அங்ஙனமிருக்கவும், (அவர்கள்), விண் போய் உழுன்று சுழல் இலக்கை -மிக்கவுயரத்திற்பொருந்தி விரைவாகக் சழல்கிற அக்குறியை, எய்து மெய்ஏ வீழ்த்தி - (அம்பு) எய்து தவறாது வீழ்த்தி, மலர்ப்பெண் போல்வாளை கை பிடிக்கும் -தாமரைமலரில் வாழுந் திருமகள்போன்ற அத்திரௌபதியை மணஞ்செய்து கொள்ளவேண்டுமென்ற, பேர் ஆசையினால்,- பேது உற்றார் - மதிமயங்கி அம்முயற்சியை மேற்கொண்டார்கள்; (எ-று.) இங்கே பேதுறுதல் - இயலாதகாரியத்தை ஆலோசியாது செய்யத்தொடங்குதல். சுயம்வரத்தில் தன்னடைவிலே மணஞ்செய்து கொள்ளலாமென்றுகருதி வந்த அரசர்கட்கு அக்கருத்து நிறைவேறுதற்கு இடையூறாய் நிற்றலால், அம்பும்வில்லும் வருத்தஞ்செய்தலே யன்றி, அவை பாஞ்சாலியின் கண்போலவும் |