பக்கம் எண் :

திரௌபதி மாலையிட்ட சருக்கம்281

தேடிக் கொணர்ந்தளித்தல் முதலிய) உதவிசெய்கிற, குலம் கலை - உயர்ந்த சாதி
ஆண்குரங்கு, நிலம் கீண்டு - தரையைத்தோண்டி, வல் பலவின் சுளை கீறி - வலிய
பலாப்பழத்தைக் கீண்டு (அதன்) சுளையையெடுத்து, களிப்போடு அளிக்கும்-
களிப்போடு கொடுக்கிற,  காந்தாரம் - காந்தாரதேசத்துக்கு, தலைவன் - அரசனாகிய,
சகுனி -  சகுனியென்றும் பெயருடையான், இவன்-, கண்டாய் - அறிவாய்; தக்கோர்
ஆடா சூதுக்குஉம்-பெரியோர் ஆடாத சூதாட்டத்திலும், நிலை வஞ்சனைக்குஉம்-
நிலையான வஞ்சனைசெய்வதிலும், தரணிபரில் இவற்கு யார்ஏ நிகர் - அரசர்களுள்
இவனுக்கு எவர்தாம் ஒப்பாவர், என்றார்-; (எ - று.)

     முன்னிரண்டடிகளிற் கூறிய நாட்டின் வருணனையால், காந்தாரநாட்டரசனான
இவன் தனக்குரிய மகளிர்பால் மிக்கஅன்புடையா னெனத் தொனிப்பித்தவாறாம்.
ஆயினும் அவன் தீக்குணங்களின் மிக்கா னென்றது, இறுதிவாக்கியம். இங்கு, பலா-
வேர்ப்பலா. நிலைவஞ்சனை- எவராலும் மாற்றமுடிகளாத வஞ்சனை      (512)

38.-இது, அசுவத்தாமனைக் குறித்தது.

பேசாதொடுங்கும்பேரறிவாற் பெரும்போர்வலியாற்பிறப்பான்மெய்த்
தேசாலியற்றும்பலபடையாற் றிண்டோள் வலியாற்செஞ்சிலைக்கை
யாசான்மைந்தனிவன்றனக்கிங் காரேயுவமையமரரிலும்
ஈசானனைமற்றொருசிறிதொப் பெனலாமல்லதிலையென்றார்.

     (இ-ள்.) பேசாது - (பயனில்லாதபலவார்த்தைகளைப்) பேசாமல், ஒடுங்கும் -
அடங்கியிருக்கிற, பேர் அறிவால் - மிக்க அறிவினாலும், பெரு போர்வலியால்-
பெரியபோரைச் செய்யும் வல்லமையினாலும், பிறப்பால்-பிறப்பின் சிறப்பினாலும்,
மெய்தேசால்-உடம்பின் ஒளியாலும், இயற்றும் பல படையால் - செய்யும் பல
படைக்கலத்தொழிலினாலும், திண் தோள் வலியால் - உறுதியுள்ள தோள்களின்
வலிமையினாலும்,செம் சிலை கை ஆசான் மைந்தன் இவன்  தனக்கு இங்கு
ஆர்ஏ உவமை -சிறந்தவில்லையேந்திய கையையுடைய துரோணாசாரியனது
குமாரனாகிய இந்தஅசுவத்தாமனுக்கு இவ்வுலகில் எவர்தாம் ஒப்பாவர்?
அமரில்உம் -(அவ்வுலகத்திலுள்ள) தேவர்களுள்ளும், ஈசானனை ஒரு சிறிது ஒப்பு
எனல் ஆம்அல்லது - சிவபிரானை (இவனுக்கு) ஒருசிறிது ஒப்பாவனென்று
கூறலாமே யல்லாமல்,மற்றுஇலை-வெறுஒப்பவர் இல்லை, என்றார் - என்று
சொன்னார்கள்; (எ-று.)

     இவன் பிராமண சாதியனாயினும், இவன் தந்தையான துரோணன்
அரசன்போலஒழுகியதனாலும், தன்மாணாக்கனாகிய அருச்சுனனைக்கொண்டு
வெல்லப்பட்டதுருபதனுடைய இராச்சியத்திற்பாதியைக் கைக்கொண்டு அதற்குத்
தலைமைபூண்டதனாலும், அரசரிடை இவனைக் கூறினார்.              (513)

39.-இது, கர்ணனைக் குறித்தது.

பெண்மைக்கிரதியெனவந்த பெண்ணாரமுதேபேருலகில்
உண்மைக்கிவனேவலிக்கிவனே யுறவுக்கிவனேயுரைக்கிவனே