பக்கம் எண் :

திரௌபதி மாலையிட்ட சருக்கம்283

சமயத்தில் துவாரகையினின்று கோகுலத்துக்கு எழுந்தருளி, தன்னிடங் காதல்
கொண்டகோபஸ்திரீகளுடன் விளையாடுபவனாகி யமுநாநதிக்குச் சமீபத்திலுள்ள
ஒருசோலையைச் சேர்ந்து, வருணனால் அனுப்பப்பட்ட வாருணியென்னும்
மதுவைப்பானஞ்செய்து களித்தவனாய், ஜலக்கிரீடை செய்யக்கருதி,
பக்கத்திலோடுகின்றயமுநாநதியைநோக்கி 'ஓ யமுனாய்! நீ இங்கே வா, என்று
அழைக்க, அவ்யமுனை 'இவன்மதுபானவெறியால் இப்படிச்சொல்லுகின்றான்'  என்று
அக்கட்டளையைப்பொருள்செய்யாது அங்கேவாராதொழிய, இவன் வெகுண்டு தனது
கலப்பையின் நுனியால் அந்நதியை இழுக்க, அந்த ஆறு மீறிப்போகும்
ஆற்றலில்லாமையால் தான் செல்லும் வழியை விட்டு அவன் எழுந்தருளியிருக்கும்
வனத்தில் வந்துபெருகியதன்றித் தன்னுடைய தெய்வவடிவத்தோடு அவனெதிரில்
வந்து தன்பிழையைப் பொறுக்கும்படி மிகவும்பிராத்தித்துத் திவ்வியமான
ஒருமாலையையும் இரண்டு நீலவஸ்திரங்களையுங் சமர்ப்பிக்க, பின்பு இவன்
கோபந்தணிந்து நீராடியபின் அந்நதியை விட்டிட்டன னென்பது, வரலாறு. 
இங்ஙனம்பலராமனால் வெல்லப்பட்ட யமுனாநதி தன்னைவென்ற அவனைத்
தான்வென்றுபழிதீர்த்துக்கொள்ளக் கருதி இரண்டுபிரிவாகப் பிரிந்து
அவனுடம்பை வளைந்துகொண்டாற் போன்றது, அவன் அரையிலும் மேலும்
சாத்திய நீல ஆடைகளெனவருணித்தவாறு;  யமுநாநதியின்நீர் கருநிறமுடைய
தாதலால், இங்ஙனம்கற்பிக்கப்பட்டது; தற்குறிப்பேற்றவணி,

     சலம்=ஜலம்; சலம் என்ற வடசொல்லின் திரிபுஎனக்கொண்டால், கோபமாம்.
வசுதேவன்-யதுகுலத்தில் சூரனென்பவனது குமாரன். வசுதேவன் என்பது -
ஐசுவரியங்களால் விளங்குபவனென்று பொருள்படும்.                 (515)

41.-இது, கண்ணபிரானைக் குறித்தது.

இந்தக்குரிசில்யதுகுலத்துக் கெல்லாந்திலகமெனுமாறு
வந்துற்பவித்துப்பொதுவருடன் வளருங்கள்ளமாமாயன்
முந்தக்கஞ்சமாமனுயிர் முடித்தானிவற்குமுகிலூர்தி
அந்தப்புரத்திலாராம மந்தப்புரத்திலாராமம்.

     (இ-ள்.)  இந்த குரிசில்-இந்த உத்தமபுருஷன், யது குலத்துக்கு எல்லாம்
திலகம்எனும் ஆறு வந்து உற்பவித்து - யதுவமிசமுழுவதுக்கும் ஒரு திலகமென்று
சொல்லும்படி அலங்காரமாய் அக்குலத்தில் வந்து திருவவதரித்து, பொதுவருடன்
வளரும் - இடையர்களுடனே வளர்ந்த, கள்ளம் மா மாயன்-(எவரும்)
அறியவொண்ணாத பெரிய மாயையையுடைய கண்ணபிரான்; முந்த முன்னமே
(இளம்பருவத்திலேயே), கஞ்சன் மாமன் உயிர் முடித்தான் இவற்கு - கம்சனாகிய
மாமனுடைய உயிரை யொழித்தவனாகிய இவனுக்கு, முகில் ஊர்தி அந்த புரத்தில்
ஆராமம்-மேகங்களை வாகனமாகவுடையவனான இந்திரனது அந்த
அமராவதிநகரத்திலுள்ள கற்பகச்சோலை, அந்தப்புரத்தில் ஆராமம் - (தனது
மனையாள்வசிக்கும்) அந்தப்புரத்திலிருக்குஞ் சோலையாம்.