கிற நுனியையுடைய கொடிய அம்பினால், பவரின் செறிய நிரைத்து உருளும் பல் வாய் திகிரி பயில் இலக்கை - ஆர்களால் நெருங்க நிரைக்கப்பட்டு உருளுகின்ற பலநுனிகளையுடைய யந்திரசக்கரத்திற் பொருந்திய இலட்சியத்தை, கவரின் - எய்துதள்ளினால், செழு தார் புனைந்து - செழிப்பான மணமாலையை (அவனுக்கு)ச் சூட்டி, அவனை நீ கடிது கைக்கொண்டிடு - அவனை நீ விரைந்து (கணவனாகக்) கைக்கொள்வாய், என்றார்-என்று (செவிலித்தாயர்) சொன்னார்கள்; (எ-று.) (552) வேறு. 48.-சில அரசர்கள் சோர்வுறச் சில அரசர்கள் ஊக்கங்கொண்டு எழுதல். முத்தநகைப் பவளவிதழ்க் குளிர்வெண் டிங்கண் முகத்தாளைக் கைத்தாயர் மொழிந்தகாலைச், சித்திரமொத் துணர்வழிந்து தத்தம்பைம்பொற் றிகழரியாசனத்திருந்தார்சிற்சில்வேந்தர், அத்தனுவின்பெருமையையு மிலக்கத்துள்ள வருமையையுங் கருதாம லாண்மைகூறி, எத்தனையெத் தனைவேந்தராசைகூர யான்யானென் றெழுந் திருந்தார் யானைபோல்வார். |
(இ-ள்.) முத்தம் நகை - முத்துப்போன்ற பற்களையும், பவளம் இதழ் - பவழம்போன்ற வாயிதழையும், குளிர் வெள் திங்கள் முகத்தாளை - குளிர்ந்த வெண்ணிறமான பூர்ணசந்திரன் போன்ற முகத்தையுமுடைய திரௌபதியைநோக்கி, கைத்தாயர் - செவிலித் தாய்மார், மொழிந்த காலை - (இவ்வாறு) சொன்னபொழுது,- சிற் சில் வேந்தர் - (அந்தச்சுயம்வரசபையிலிருந்த) சில சில அரசர்கள், (அவ்வில்லின்வலிமையையும் இலக்கின் அருமையையும் ஆலோசித்து), உணர்வு அழிந்து -அறிவுஒடுங்கி, சித்திரம் ஒத்து- சித்திரப்பதுமை போன்றவர்களாய் (செயலற்று), தம்தம் பைம் பொன் திகழ் அரி ஆசனத்து இருந்தார் - பசும்பொன்னாற் செய்யப்பட்டுவிளங்குகிற தங்கள் தங்கள் சிங்காசனங்களில் இருந்தபடியே இருந்தார்கள்; (இதுநிற்க); யானைபோல்வார்-யானைபோலக் கொழுத்தவர்களாகிய, எத்தனைஎத்தனை வேந்தர்-எத்தனை எத்தனை அரசர்கள், ஆசை கூர -(திரொபதியின்மேல்) ஆசை மிகுதலால், அ தனுவின் பெருமையைஉம் இலக்கத்துஉள்ள அருமையைஉம் கருதாமல் - அந்த வில்லின் பெருமையையும்அக்குறியிலுள்ள எய்தலில் அருமையையும் ஆலோசியாமல், ஆண்மை கூறி -வீரவார்த்தை சொல்லிக்கொண்டு, யான் யான் என்று எழுந்திருந்தார் - யான் யான்என்று சொல்லி (ஒருவர்முன் ஒருவர்) எழுந்திருந்தார்கள்! (மிகப்பலர் எழுந்தனர்); (எ -று.) மதயானை களிப்புமிகுதியால் செய்வது தவிர்வது அறியாது அடக்கமின்றி ஒன்றைச்செய்யத்தொடங்கி அழிவதுபோல, இவர்களும் வேட்கை விஞ்சுதலால் ஆலோசியாமல் துணிந்தெழுந்து விற்றிறங்காட்டத்தொடங்கிப் பங்கப்படுதலால்; 'யானைபோல்வார்' எனப்பட்டார். இதுமுதற் பதினைந்து கவிகள்-பெரும்பாலும் ஒன்றுஇரண்டு ஐந்து ஆறாஞ்சீர்கள் காய்ச்சீர்களும், மற்றையநான்கும் மாச்சீர்களுமாகியகழிநெடிலடி நான்குகொண்ட எண்சீராசிரியவிருத்தங்கள். |