49.-கண்ணன் பலராமனுடன்சொல்லித் தன்குலத்தாரைத் தடுத்தல். தனுவெடுத்து நாண்பிணிப்பான்கிளராநின்றதன்குலத்திலவனி பரைத்தடுத்துவேதப், பனுவலுக்குந்தவத்தினுக்குமுரியவேள்விப் பார்ப்பனமாக்களினிடையே பாண்டுமைந்தர், அனுவுருக்கொண்டுருமாறியிருந்ததன்மையறிந்தருளியலாயு தனோடருளிச்செய்தான், மனுமுறைக்குவரம்பாகிவருத்தம்வீடமாநிலமீதவதரித்தவாசுதேவன். |
(இ-ள்.) மனு முறைக்கு வரம்பு ஆகி - மனுதர்மசாஸ்திரத்திற் கூறப்பட்ட நீதிநெறிக்கு எல்லையாகி, மா நிலம்மீது - பெரிய பூமியின்மேல், வருத்தம் வீட- (அப்பூமிதேவியின்) துன்பம் நீங்க, அவதரித்த-தோன்றியருளிய, வாசுதேவன் - வசுதேவகுமாரனான கண்ணபிரான்,-வேதம் பனுவலுக்குஉம் தவத்தினுக்குஉம் உரிய- வேதங்களாகிய, நூல்களுக்கும் தவத்துக்கும்உரிய, வேள்வி - யாகங்களையுடைய, பார்ப்பன மாக்களின் இடையே - அந்தணர்களின் நடுவே, பாண்டு மைந்தர் - பாண்டவர்கள், அனு உரு கொண்டு-(அந்த அந்தணர்களுக்கு) ஒத்த உருவத்தைக்கொண்டு, உரு மாறி இருந்த தன்மை - தம்வடிவம்மாறி வீற்றிருந்த தன்மையை, அறிந்து அருளி-, தனு எடுத்து நாண் பிணிப்பான் கிளராநின்ற தன் குலத்தில் அவனிபரை தடுத்து - வில்லையெடுத்து நாணியைப்பூட்டுதற்கு ஊக்கங்கொண்டெழுகிற தனது (யது) குலத்து அரசர்களை (நீங்கள் எழவேண்டாவென்று) தடுத்து, அலாயுதனோடு அருளிச்செய்தான்- (பாண்டவர்கள்மாறுவேடங்கொண்டு வந்திருக்கிற தன்மையைப்) பலராமனுடன் கூறினார்; (எ-று.) கூறுதலென்ற பொருளில் அருளிச்செய்தல் என்றல், ஒரு வகை மரபு. துஷ்டர்கள் மிக்கதனால் உண்டான பூமிபாரத்தைநிவிருத்திசெய்யும்பொருட்டும், அவர்களால் உலகத்தில் வரம் பழிந்த தருமத்தை நிலைநிறுத்தற்பொருட்டும், திருமால்வசுதேவகுமாரனாய்க் கண்ணனாகத் திருவவதரித்தானாதலறிக. அநு ரூபம்என்றவடமொழி, அனுவுரு எனச் சிதைந்துவந்தது; ஒத்த வடிவமென்பது பொருள். ஹலாயுதன் - கலப்பையை ஆயுத மாகயுடையவன், (524) 50.-பல அரசர்கள் விற்றிறங்காட்டமுயன்று மாட்டா தொழிதலை, இது முதல் நான்குகவிகளிற் கூறுகிறார். பலருமுடனகங்கரித்துமேருசாரப்பாரவரிசிலையினிலைபார்த்து மீண்டார். பலருமொருகையிற்பிடிக்கவடங்காவில்லின் பருமை தனைக்குறித்துமனம் பதைக்கப்போனார், பலருமலர்க்கைப்படுத்திப்பெயர்க்கமாட்டார்பணைத்தோணொந்தமையு மெனப்பயந்துநின்றார், பலருமெடுத்தணிமணிநாண்பூட்டவாராப் பரிசொடுமற்றதன் வலிமைபகர்ந்தேவிட்டார். |
(இ-ள்.) பலர்உம் - பல அரசர்கள், உடன் - ஒருசேர, அகங்கரித்து- செருக்குக்கொண்டு, (அருகில் வந்து), மேரு சார் பாரம்வரி அ சிலையின் நிலை பார்த்து மீண்டார்-மகாமேருகிரியையொத்த பாரமான கட்டமைந்த அந்தவில்லின் தன்மையைப் பார்த்து (அஞ்சி)த்திரும்பினார்கள்; பலரும் - பல அரசர்கள், ஒரு கையின் |