நிறுத்தி, மற்றை கையால் தொல்வலி நாணிஉம் எடுத்து- மற்றொருகையினால்முதிர்ந்தவலிமையையுடைய நாணியையும்எடுத்து, தோள்உம் சோர்ந்தான்-(அவ்வளவில்) கைசோர்ந்து விட்டிட்டான்; சல்லியன் தன்வலிமையைக்கொண்டு இரண்டுகைகளாலும் அவ்வில்லைத் தழுவியெடுத்து எதிர்நிறுத்தியிட்டன னாயினும் அதன்பின் ஒருகையில் விற்பிடித்து மற்றொருகையால் நாணியை எடுத்து ஏற்ற இயலாமல் அதற்கு உரிய முயற்சி செய்தவளவிலே வில்லோடு வீழ்தலால் தன் உடம்பு நன்கு நொருங்கும்படி சாய்ந்திட்டா னென்றும். பின்பு பகதத்தன் ஒருகையால் வில்லை யெடுத்து நிறுத்தி மற்றொருகையால் நாணியையும் எடுத்து அவ்வளவில் தோள்சோர்ந்தான் என்றும் மேன்மேலுயர்ச்சியணி காண்க. தனுர் வேதமாவது -ஆயுதங்களிற்பயிலும் வகைகளையும், பகை வெல்லுதற்கு உரிய மந்திரம்முதலியவற்றின் பிரயோகங்களையும் தெரிவிக்கிற சாஸ்திரம். தனு - வில்என்றபொருளில் தநுஸ் என்ற வட சொல்லின் விகாரமும், உடம்பைக்குறிக்கும்போது தநு என்ற வடசொல்லின் விகாரமுமாம். 'வேந்தடுபோர்ச்சராசந்தன்' என்ற பாடம் பொருந்தாது, அடுத்தசெய்யுளில் 'மாகதன்' எனப்படுபவன் சராசந்த னாதலால். தனுவும் உம்மை-அசைநிலை: உயர்வு சிறப்புமாம். எச்சவும்மையாக, வில்லுந்தகரஎன உரைத்தலாகாது தனுவுடனே வீழ்ந்தானென இயையும். (526) 52.- | பூகதனாகியவன்றேபகைவரெல்லாம் போற்றவளர்ந்துல காளப் புனைந்த மௌலி, மாகதனும்வில்லெடுத்துவரிநாண் வில்லின்மார்பளவும் போக்கினான்வன்போர்நீலன், சாகதனென்றவைதுதிக்கநெடுநாண்கொற்றத்தனுவொருசாணெனக் கொணர்ந்தான்சாணேயல்ல, வேகதனுநால்விரலென்றுரைக்கநாணி வீக்கினான் வலம் புரித்தார் வேந்தர்வேந்தே. |
(இ-ள்.) பூ கதன் ஆகிய அன்றுஏ - பூமியைஅடைந்தவனான அப்பொழுதே(பிறந்தபொழுதே தொடங்கி என்றபடி), பகைவர் எல்லாம் போற்ற - பகைவர்களெல்லோரும் கீழ்ப்படிந்துவணங்கித் துதிக்கும்படி, வளர்ந்து-, உலகு ஆள-உலகத்தை அரசாளுமாறு, புனைந்த - அணிந்த, மௌலி-கிரீடத்தையுடைய, மாகதன்உம் - மகததேசத்து அரசனான சராசந்தனும்,வில்எடுத்து-(ஒரு கையால்) வில்லையெடுத்து நிறுத்தி, (மற்றொருகையால்), வரி நாண்- நீண்ட நாணியை, வில்லின் மார்பு அளவுஉம் போக்கினான் - அவ்வில்லின் நாணிபூட்டுங் கோடியின் ஒருமார்புதூரம்வரையிலும் கொண்டுபோய் அதற்குமேல் இயலாதவனானான்; வல்போர் நீலன்- வலிய போரையுடைய நீலனென்னும் அரசன், சாகதன் என்று அவை துதிக்க - அருஞ்செயல்செய்பவ னென்று சபையிலுள்ளோர் தன்னைக் கொண்டாடும்படி, நெடு நாண் - நீண்டநாணியை, கொற்றம் தனு ஒரு சாண் என கொணர்ந்தான் - வெற்றியையுடைய அவ்விற்கோடி ஒருசாண்தூரத்திலுள்ளதென்ற அளவும் கொண்டுபோய் அதற்குமேல் இயலாதவனானான்: வலம்புரி தார்வேந்தர் வேந்து - நஞ்சாவட்டைப் பூமாலையையணிந்த அரசர்க்கரசனாகிய துரியோதனன், வேகம் தனு - உக்கிரமானஅவ்வில்லின் |