பக்கம் எண் :

திரௌபதி மாலையிட்ட சருக்கம்299

59.-துரியோதனன் தூண்டுதலால் அரசர்கள் போர்க்கு
எழுதல்.

பார்ப்பான்வந்தொருகோடியரசைச்சேரப் பரிபவித்துப்பாஞ்
                             சாலன்பயந்ததெய்வச்,
சீர்ப்பாவைதனைவலியாற்கொண்டுபோகச் செய
                       லின்றியிருந்தீரென்செய்தீரென்று,
வேர்ப்பாடுநுதல்சிவந்தவிழியனாகிவிழியிலான்மகன்
                          கழறவெகுண்டுமேன்மேல்,
ஆர்ப்பாகக் கொதித்தெழுந்ததுகாந்தகாலத்தார்க்குமகராலயம்
                                 போலரசரீட்டம்.

     (இ-ள்.) விழி இலான் மகன் - கண்களில்லாத (பிறவிக்குருடனாகிய)
திருதராட்டிரனது புத்திரனான துரியோதனன், வேர்ப்பு ஆடுநுதல் சிவந்த விழியன்
ஆகி - (பொறாமையாலாகிய கோபத்தால்) வேர்வைநீர் தளும்புகிற நெற்றியையும்
சிவந்தகண்களையுமுடையவனாய், (மற்றையரசர்களைநோக்கி), 'பார்ப்பான்-
பிராமணனொருவன், வந்து-,ஒருகோடி அரசை-கோடிக்கணக்கான (மிகப்பல)
அரசர்களை, சேர பரிபவித்து-ஒருசேர அவமானப்படச்செய்து, பாஞ்சாலன் பயந்த
தெய்வம் சீர் பாவைதனை- பாஞ்சாலராஜன்பெற்ற தெய்வத்தன்மையுள்ள சிறந்த 
பாவைபோன்ற திரௌபதியை, வலியால் கொண்டு போக-(தன்) வலிமையால்
உரிமையாக்கிக்கொண்டு செல்ல, செயல் இன்றி இருந்தீர்- (அதற்கு மாறான)
செய்கை யொன்றுஞ்செய்யாமல் இருந்தீர்கள்; என்செய்தீர்-என்ன
காரியஞ்செய்தீர்கள், என்று-, கழற - உறுத்திக்கூற,-(அத்தூண்டுதலால்,
அரசர்ஈட்டம் - அரசர்களுடையகூட்டம், வெகுண்டு - கோபங்கொண்டு, உக
அந்தகாலத்து ஆர்க்கும் மகராலயம்போல்- கல்பாந்தகாலத்திற் கொதித்தெழுந்து
ஆரவாரிக்கிற கடல்போல, மேல்மேல் ஆர்ப்பு ஆக கொதித்து எழுந்தது-
மேல்மேல் ஆரவாரமுண்டாக (மனங்) கொதித்து (ப்போருக்கு) எழுந்தது; (எ- று.)

      'பரிவித்து' என்னும் பாடத்துக்கு வருத்தி யென்றுபொருள்.
சுயம்வரத்தில்மாலைசூட்டியபின் மற்றையோர் மணமாலை பெற்றவனை
எதிர்த்துப்பொருதலும், அங்ஙன் பொருவாருள் எவனேனும் அவனை
வெல்வானாயின் அவன் அக்கன்னிகைக்கு உரியனாதலும்,  அங்ஙனம்
பொருவாரையெல்லாம் வென்றிபின்பே மாலைசூட்டப்பெற்றவன் அவளை
மணஞ்ெ்சய்துகொள்ளுதலும், இயல்பு,                             (534)

60.- வீமனும், அருச்சுனனும் அரசர்களை எதிர்க்க
 இருக்கையில், அந்தணர் போர்செய்யத்தொடங்கல்.

முருத்துவாணகைத்துவர்வாய்முகத்தினாளை மூத்தோன்பின்னி
                                றுத்தியமர்முருக்குமாறு,
மருத்துவான்றிருமகனுமருத்தின்செல்வ மைந்தனுமே
                        புரிந்திட்டார்மறையோருள்ளார்,
உருத்துவாய்மடித்தெழுந்துகோகுதட்டிட்டூன்றியதண்டெ
                            திரோச்சியுடன்றவேந்தர்,
கருத்துவார்தகவெருக்கொண்டோடவோடக்கையுரங்காட்டினர்
                             வளர்த்தகனலேயன்னார்.

     (இ-ள்.) முருந்து  - மயிலிறகின் அடிக்குருத்தைப் போன்ற, வான் நகை-
ஒள்ளிய பற்களையும், துவர்வாய்-பவழம்போன்றவாயையுமுடைய, முகத்தினாளை -
முகத்தையுடையவளான திரௌபதியை, மூத்தோன் பின் நிறுத்தி - தமையனாகிய
தருமனுக்குப் பின்னேநிற்க வைத்து, மருத்துவான் திருமகன்உம் மருத்தின்செல்வம்