மைந்தன் உம்ஏ-இந்திரனது சிறந்தகுமாரனாகிய அருச்சுனனும் வாயுவினது செல்வப்பிள்ளையான வீமனும் ஆகிய இருவருமே, அமர் முருக்கும் ஆறு புரிந்திட்டார்-போர்செய்து (அப்பகைவர்களை) அழிக்கும்படி சித்தரானார்கள்; (அதற்குள்ளே), மறையோர் உள்ளார் - (அங்கு) உள்ளவர்களான அந்தணர்கள்,உருந்து-கோபங்கொண்டு, (அக்கோபமிகுதியால்), வளர்த்த கனல்ஏ அன்னார்-(தாந் நாள்தோறும் வைதிகமாக நெய்ம்முதலியன கொண்டு வளர்க்கிற அக்கினியையே போன்றவர்களாய், வாய் மடித்து-உதட்டைமடித்துக்கொண்டு எழுந்து- போர் செய்யப்புறப்பட்டு, கோகு தட்டிட்டு - (வீராவேசத்தால்) தோள்தட்டிஆரவாரஞ்செய்துகொண்டு, ஊன்றிய தண்டு எதிர் ஓச்சி - (தாங்கள்) ஏந்தியதண்டங்களை எதிரேஉயரஎடுத்து, உடன்ற வேந்தர் கருத்து வார் தக வெரு கொண்டுஓட ஓட - பகைத்த அரசர்கள் மனத்தில் மிகுதியாக அச்சங்கொண்டு விரைந்தோடும்படி, கை உரம் காட்டினர் - (தங்கள்) கைவலிமையைக் காட்டத் தொடங்குபவரானார்கள்; ( எ- று.) ஓரந்தணன் கன்னிகையைக் கைக்கொண்டதற்காகப் பொறமைகொண்டு அரசர்கள் போர்க்குஎழுவதை நோக்கி, சாதியபிமானத்தால் அந்தணரெல்லாரும் கோபங்கொண்டு அரசரை எதிர்ப்பாராயினரென்க. கோகுஎன்பது புயமென்ற பொருளில்வருதலை "கொற்றவன்றன் கோகின்மேல் வீரவாளின் வீசினான்" என்றசூளாமணியிலும் காண்க. இனி கோகு தட்டிட்டு - தங்கள் குடுமியைத் தட்டிமுடிந்துகொண்டு என்று உரைப்பாருமுளர். அந்தணர் கோபாவேசங் கொள்ளுங்கால் தமது சிறியகுடுமிநெகிழ்ந்து அவிழ்தலைத் தட்டி உறுதியாக முடிந்துகொண்டு எதிர்க்கச்செல்லுதல் சாதியியல்பு, வளர்த்தகனலேயன்னார்' - தாம் வளர்க்கிற ஆகவனீயம் காருகபத்தியம் தக்ஷிணாக்கினி என்ற வைதீக அக்கினிகள் போலப் பரிசுத்தமூர்த்திகளாகிய என்றுஉரைத்த, மறையோர்க்கு அடைமொழியாக்கினுமாம். மருத்வான் - தேவர்களை யுடையவனென்று உறுப்புப்பொருள்படும் வடசொல். மருத்-தேவர். (535) 61.- அந்தணரை விலக்கி அருச்சுனன் கர்ணனை வெல்லல். மிகைத்தமுனிவரர்முனிந்தவுறுதிநோக்க வென்றெடுத்தவிற்றடக் கைவிசயன்சற்றே, நகைத்துநகைத்தவரவரைவிலக்கியென்முன் னமன்வரினும் பிளப்பலெனநவிலாநின்றான், புகைத்தகனல்விழிக்கன்னன்றருக்காலெள்ளிப்பூசுரனென்றவ மதித்துப்புனைவில்வாங்கி, உகைத்தபகழியுமுகைத்தானுரனுந்தன்கை யொருகணையாலுடன் பிளந்தானுருமேறொப்பான். |
(இ-ள்.) உரும் ஏறு ஒப்பான் - (பகைவர்க்குப்) பேரிடிபோல்பவனாகிய, வென்றுஎடுத்த வில் தட கை விசயன் - (எல்லா வரசர்களையுங்) கீழ்ப்படுத்தித் தான்எடுத்த வில்லையேந்திய பெரிய கையையுடைய அருச்சுனன்,-மிகைத்த முனிவரர்முனிந்த உறுதி நோக்கி-மிக்க அந்தப்பிராமணசிரேஷ்டர்கள் கோபங்கொண்டதுணிவைப் பார்த்து, சற்றுஏ நகைத்து நகைத்து - சிறிது சிரித்துச் சிரித்து, அவரவரைவிலக்கி - அவர்களையெல்லாம் தடுத்து, என் முன் நமன் வரின்உம் பிளப்பல் எனநவிலாநின்றான் - 'என்எதி |