பக்கம் எண் :

திரௌபதி மாலையிட்ட சருக்கம்301

ரிலேநமன் (போர்க்கு) வந்தாலும் (அவளை நான்) பிளந்துவிடுவேன் '
என்று (அவர்கட்குத் துணிவு) கூறிநின்றவனாய்,-புகைத்த கனல் விழி கன்னன்-
புகைகின்ற கோபாக்கினியை வெளிப்படுத்துகின்ற கண்களையுடைய கர்ணன்,
தருக்கால்எள்ளி-செருக்கினால் இகழ்ந்து, பூசுரன் என்று அவமதித்து-
பிராமணனென்று(தன்னை) அலட்சியஞ்செய்து, புனை வில் வாங்கி-
அழகியவில்லை வளைத்து,உகைத்த- (தன்மேற்) செலுத்தின, பகழிஉம் -
அம்புகளையும், உகைத்தான் உரன்உம்- (அம்பு) செலுத்தினவனான அவனுடைய
மார்பையும், தன் கை ஒரு கணையால் -தனதுகையினா லெய்யப்பட்ட
ஓரம்பினால், உடன் பிளந்தான் - ஒருசேரப்பிளந்திட்டான்; (எ-று.)- 'மிகைத்து'
என்றும் பாடம்; அளவுகடந்து என்றுபொருள்.                        (536)

62.-வீமன் சல்லியனை வெல்ல, அவனும் கர்ணன்
போலவே ஓடுதல்.

குன்றான்மெய்வகுத்தனையவீமன்றன்மேற்கொல்லியல்செய்சல்லி
                               யனைக்குத்திவீழ்த்திக்,
கன்றான்முன்விளவெறிந்தகண்ணனென்னக்கான்முடியோடுற
                            வளைத்து வான்மேல்வீசி,
நின்றான்மற்றவனயலேதெறித்துவீழ்ந்துநெஞ்சொடிந்தா 
                            னிருவருமுன்னில்லாராகி,
வென்றாலுத் தோற்றாலும் வசையே வெம்போர் வேதியரோ 
                         டுடற்றலெனமீண்டு போனார்

     (இ-ள்.) குன்றால் மெய் வகுத்து அனைய வீமன் - மலையினால் உடம்பைச்
செய்தமைத்தாற்போன்ற (மிகவலிய பேருடலையுடைய) வீமசேனன், தன்மேல் கொல்
இயல் செய் சல்லியனை குத்திவீழ்த்தி - தன்னைஎதிர்த்துப் பெரும்போரைசெய்த
சல்லியனைக் (கையினாற்) குத்திக்கீழேதள்ளி, கன்றால்முன் விளவுஎறிந்த
கண்ணன்என்ன - (முன்பு பசுவின்) கன்றைக்கொண்டு விளாமரத்தின்மே  லெறிந்த
கிருஷ்ணன் போல, கால் முடியோடு உற வளைத்து வான்மேல் வீசி நின்றான் -
கால்தலையோடு பொருந்த அவனுடம்பை வளைத்து அதனை வானத்தில்
வீசிநின்றான்;(அதனால்), அவன் - அச்சல்லியன், அயல் தெறித்து வீழ்ந்து -
பக்கத்திலே தெறித்துவிழுந்து, நெஞ்சு ஒடிந்தான் - நெஞ்சமுறிந்தான்: (உடனே),
இருவர்உம் -(அந்தக்கர்ணண்சல்லியன் என்ற) இரண்டுபேரும், முன் நில்லார்
ஆகி - எதிரில்நிற்கமாட்டாதவர்களாய், வென்றால்உம் தோற்றால் உம்
வெம்போர் வேதியரோடுஉடற்றல் வசைஏ என - 'சயிப்பதானாலும்
தோற்பதானாலும் கொடியபோரைஅந்தணர்களோடுசெய்தல் இகழ்ச்சியேயாம்'
என்றுசொல்லிக் கொண்டே,மீண்டுபோனார் - திரும்பிச்சென்றார்கள்; (எ-று.)-
மற்ற - அசை.

     அந்தணவடிவத்தி லிருக்கும் வீமார்ச்சுனரிடம் தம்வலிமையைக்
காட்டமாட்டாதுதோற்ற சல்லியகர்ணர்கள் வெம்போர் வேதியரோடுடற்றலால்
வென்றாலும் தோற்றலும்வசையே என்று முன் நில்லாராகிச் சென்றனரென்க.
'குன்றால் மெய் வகுத்தனைய' என்றது - தன்மைத்தற்குறிப்பு. 'கொல்லியல்'
என்றது - கொல்லுந்தன்மையுடையதென வினைத்தொகையன்மொழியாய்ப்
போரைக் குறிக்கும். இங்குப்பாலபாரதத்தில், கர்ணனோடு அருச்சுனனும்
சல்லியனோடு வீமனும்,பொருகையில், மற்றையரசர் அவர்கள்
திறத்தைக்கொண்டாடியவண்ணம்வானவரைப்போலப் போரைக்