(இ-ள்,) 'என் நினைந்து-என்ன நினைந்து, என் சொன்னேன் - யாதுசொன்னேன்! என் செய்தேன்-என்னகாரியஞ்செய்திட்டேன்,' என்று - என்றுசொல்லி, சோரும்-(பின்பு மனந்) தளர்கிற, அன்னையை - தாயான குந்தியை, தன்நிகர் இலாத கேள்வி சான்ற சீர் தருமன் என்பான்- தனக்கு ஒப்பில்லாத நூற்கேள்விமிக்க புகழையுடைய தருமபுத்திரன், வணங்கி-நமஸ்கரித்து, (அவளை நோக்கி), நின் சொல்-உனது வார்த்தை, ஆரணம் படியது ஆகும் - வேதத்தின் தன்மையதாம்; 'நின் நினைவு அன்று - (இது) நீ நினைத்துக் கூறியது அன்று (தற்செயலாய் உன்வாயில்வந்த வார்த்தை); (அன்றியும்), எங்கள் நெஞ்சில்உம் நினைவுஉண்டு-எங்கள்மனத்திலும் இந்த எண்ணம் உண்டு,' என்றான் - என்று சொன்னான்; (எ- று.) 'என்செய்கேன்' என்றும் பாடம். தாய்வார்த்தை வேதவாக்கியம்போலக் காரணங்கருதாமலே விதிரூபமாக அங்கீகரிக்கத்தக்கதென்பான், 'நின்சொல் ஆரணப்படியதாகும்' என்றான். சாஸ்திர விரோதமானதைச் சொல்லத்தக்கவனல்லாத தருமன் ஒரு பெண்ணை நாங்கள் ஐவரும் மணஞ்செய்துகொள்ளக் கருதுகின்றோமென்றல் அப்பெண்ணினிடத்து வைத்த காதல்பற்றியேயன்று விதிவயத்தனா யென்பது விளங்க, 'தன்னிகரிலாதகேள்விசான்ற சீர்த்தருமனென்பான்' என்றார். மற்று-அசை; விளைமாற்றுமாம், (541) 67.- குந்தி ஒருவாறுதேறுதலும், இரவுகழிதலும். பாரனைத்தினுந்தன்னாமம் பரப்பியபார்த்தனென்னும் வீரனைப்பயந்தபாவை விதிவழியிதுவென்றெண்ணி மாரனுக்கரசுநல்கு மங்கையுந்தானுமந்தக் காரிருட்கங்குன்மைந்தர் கட்டுரைகசிந்துகேட்டாள். |
(இ-ள்.) பார் அனத்தின்உம் - பூமி முழுவதிலும், தன் நாமம் - தனது பெயரை,பரப்பிய - (புகழாற்) பரவச்செய்த, பார்த்தன் என்னும் வீரனை- அருச்சுனனென்கிறவீரனை, பயந்த-பெற்ற, பாவை-பெண்ணாகியகுந்திதேவி, இது விதிவழி என்று எண்ணி - (தான் கூறியதும் தருமன் கூறுகிறதுமாகிய இச்செயல்) ஊழ்வினைவசத்ததாமென்று நினைத்து,-மாரனுக்கு அரசு நல்கும் மங்கைஉம் தான்உம்-மன்மதனுக்கு அரசாட்சியைக்கொடுக்கின்ற இளம்பெண்ணான திரௌபதியும்தானுமாக, அந்த கார் இருள் கங்குல்- கரிய இருளையுடைய அவ்விரவில், மைந்தர்கட்டு உரை கசிந்துகேட்டாள் - தன்) பிள்ளைகளான அப்பாண்டவர்கள் கூறும்பொருளுள்ள மொழிகளை அன்புகொண்டு கேட்டாள்; (எ-று.) விற்றிறம் போர்த்தொழில் முதலிய வீரர்க்குஉரிய வார்த்தைகள் பலவற்றை அவர்கள் இரவிற் சொல்லிக்கொண்டிருக்க, அவற்றைக் குந்தியும் திரௌபதியும் கேட்டனரென்க. பாவைதானும் மங்கையும் கேட்டாள்-இரண்டு பெண்பாற்பெயர்கள்சிறப்பினால் ஒரு முடிபை ஏற்றன; (நன் பொது-27.) (542) 68.- அங்குநிகழ்ந்த செய்திகளைத் துருபதன் ஒற்றரால் அறிந்து மறுநாள் அவர்களைத் தன்மனைக்கு அழைத்தல். பொற்றொடிக்கனகமாலைப் பொலங்குழைப்பூவைதன்னைப் பெற்றபூபதியவ்வீரர் பெருமிதவாய்மையெல்லாம் |
|