ஒற்றராலுணர்ந்துநெஞ்சத் துவகையோடையமின்றி மற்றைநாள்வந்துகொற்ற வாழ்மனைகொண்டுபுக்கான். |
(இ-ள்.) பொன் தொடி - பொன்னலாகிய தொடியென்னும் வளையையும், கனகம் மாலை-பொன்னாலாகிய ஆரத்தையும், பொலம்குழை - பொன்னலாகிய குழையென்னுங் காதணியையுமுடைய, பூவைதன்னை - பூவைபோன்ற திரௌபதியை, பெற்ற-, பூபதி - அரசனாகிய யாகசேனன், அ வீரர் பெருமிதம் வாய்மை எல்லாம்- அந்தப்பாண்டவர்களுடைய வீரத்தைவிளக்கும் வார்த்தைகளையெல்லாம், ஒற்றரால் உணர்ந்து - ஒற்றர்களால் அறிந்து, ஐயம் இன்றி-சந்தேகமில்லாமல், நெஞ்சத்து உவகையோடு - மனமகிழ்ச்சியுடனே, மற்றை நாள் - மறுநாளில், வந்து -(அவர்கள் தங்கியிருக்கும் இடம்) வந்து, கொற்றம் வாழ் மனை கொண்டு புக்கான் - வெற்றியையுடைய (தான்) வாழ்கிற மாளிகைக்கு (அவர்களை) உடன்கொண்டு சென்றான்; (எ- று.) -வாண்மனை என்றுமாம். ஒற்றராவார் - வேண்டிய இடங்களில் உரியபடி சென்று உள்ளபடி செய்தியறிந்துவந்துகூறுபவர். திருஷ்டத்யும்நன் தானே மறைவாக அவர்கள் பின்சென்று பதிவிருந்து அங்குநிகழ்ந்தவையனைத்தையும் அறிந்துவந்து தந்தைக்குக் கூறின னென்றும், பின்னும் ஐயந்தீர்தற்பொருட்டுத் துருபதன் தனதுபுரோகிதனை அனுப்பிப் பின்பு தூதன்மூலமாக அவர்களைத் தன்மனைவிக்கு வருவித்தானென்றும் முதுனூல் கூறும். அரசனது வெற்றியை அவனது அரண்மனைமேலேற்றி 'கொற்றமனை ' என்றார். (543) 69.-அவர்களைச் சோதனையால் துருபதன் பாண்டவர்களென்றே நிச்சயித்து உபசரித்தல். அடுத்தபல்பொருளும்வைக்க வாயுதமன்றிவேறொன்று எடுத்திலரென்றும்வேத முனிவரரல்லரென்றும் கொடுத்தனசிறப்பினோடுங் குறுமணித்தவிசினேற்றித் தொடுத்ததார்க்குருக்களென்றே துணிந்தனன்யாகசேனன். |
இதுவும், அடுத்த கவியும் - குளகம். (இ-ள்.) அடுத்த பல் பொருள்உம் வைக்க-பொருந்திய பல பொருள்களையும் (கொணர்ந்து அவர்கள் முன்னிலையில்) வைக்க, (அவர்கள்), ஆயுதம் அன்றி வேறு ஒன்று எடுத்திலர் - ஆயுதங்களையேயன்றி வேறொருபொருளையும் எடுத்தார்களில்லை, என்றும்-, (அதனால்), வேதம் முனிவரர் அல்லர் என்றுஉம்- வேதத்துக்கு உரிய அந்தணர்களல்லரென்றும், (அறிந்து),-யாகசேனன் - துருபதன்,- தொடுத்த தார் குருக்கள் என்றுஏதுணிந்தனன்-தொடுக்கப்பட்ட மாலையையணிந்த குருகுலகுமாரர்களாகிய பாண்டவர்களென்றே (அவர்களை) நிச்சயித்து, கொடுத்தனசிறப்பினோடுஉம் - (தான்) கொடுத்த பலவகைச்சிறப்புக்களுடனே, குருமணிதவிசின் ஏற்றி-நிறம் விளங்குகிற இரத்தினங்கள் பதித்த ஆசனத்தில் (அவர்களை) வீற்றிருக்கச்செய்து,-(எ-று.)- 'என்ன' (70) என்க. துருபதன் பின்னும்தெளிந்து கொள்ளுதற்பொருட்டுத்தனது பரிசனர்களை யேவி அவர்களெதிரில்பலவகைப் பொருள்களைக் கொணர்ந்துவைக்கச் சொல்ல, அவர்கள் அவற்றில் படைக்கலங் |