மிக்காள். தனக்கு ஒப்பில்லாத இல்லறவாழ்க்கையிலிருந்து செய்யுந்தவத்திற் சிறந்தவளான அவள், நின் நேயம் என்றுஉம் பிரியாநலன் நேர்க என்றாள் - உனதுஅன்பு எந்நாளும் நீங்காமையாகிய நல்லவரத்தை (எனக்கு) உடன்பட்டுத் தருவாயாக 'என்று (கணவனை வரம்) வேண்டினாள் (எ - று.) அவன் மிக்க அன்போடு அவளைக் கொண்டாடி 'நினக்கு வேண்டும் வரம் வேண்டுவாயாக' என்று சொல்ல, அவள் வேறொருவரத்தையும் வேண்டாமல் 'உன் அன்பு எப்பொழுதும் நீங்காதாகுக' என்று வேண்டினள் என்பதாம். (552) 78. | குன்றுந்நதியும்மரனும்பைங் கொடியுமாகித் துன்றுந்துணையாய்ப்பலயோனிக டோறுமெய்தி நின்றுஞ்சரித்துமரும்போக நெடிதுதுய்த்தார் என்றும்பிரியாதிருவோரு மிதயமொத்தே. |
(இ-ள்.) (அவன் அங்ஙனம் வரங்கொடுத்தபின்பு), -இருவோர் உம்- (கணவனும்மனைவியு மாகிய) அவ்விருவரும், 'இதயம் ஒத்து-மனங்கலந்து, குன்றுஉம் நதிஉம்மரன்உம் பைங்கொடிஉம் ஆகி-மலையும் (அதனைச்சார்ந்து பெருகுகிற) நதியும்மரமும் (அதன்மேற்படரும்) பசியபூங்கொடியுமாய், துன்றும்துணை ஆய் பலயோனிகள் தோறும் எய்தி - இங்ஙனமே இன்றியமையாது) பொருந்திய துணையாகிப்பலவகையுருவங்களிற் பொருந்தி, நின்றுஉம் சரித்துஉம் - (ஓரிடத்து) நின்றும்(பலவிடங்களிற்) சஞ்சரித்தும், என்றுஉம் பிரியாது - எப்பொழுதும் (ஒருவரையொருவர்) பிரியாமல், நெடிது - நெடுங்காலம், அரு போகம்-அரிய இன்பத்தை,துய்த்தார் - அனுபவித்தார்கள் (எ - று.) அவன் குன்றாக வடிவுகொள்ள இவள் நதியாகவடிவுகொண்டு அதனைச் சார்ந்தும், அவன் மரவடிவுகொள்ள இவள் கொடிவடிவு கொண்டு அதனைத் தழுவியும், இவ்வாறு பற்பல யோனிபேதங்களிற் புக்கு அவ்விருவரும் சுகானுபவஞ் செய்தன ரென்க. (553) 79. | இந்தப்பிறப்பினலமெய்தி யிறந்தபின்னும் சிந்தித்தவண்ணமிவளிந்திர சேனையாகி அந்தப்பதியையடைந்தாண் மற்றவனுமஞ்சி வந்தித்ததொல்லையருமாதவ மன்னிநின்றான். |
(இ-ள்.) இந்த பிறப்பில் - (நாளாயணயாகிய) இந்தச்சன்மத்திலே, நலம் எய்தி-(இப்படிப் பலவாறு) இன்பத்தை அனுபவித்து, இறந்த பின்னும்-, இவள்-, சிந்தித்தவண்ணம்-நினைத்தபடியே, இந்திரசேனை ஆகி-(அடுத்தபிறப்பில்) இந்திரசேனை யென்பவளாய், அந்த பதியை அடைந்தாள் -(முன்பிறப்பிற் கணவனான) அந்த மௌத்கலியனையே அடுத்தாள்; (அப்பொழுது) அவனும்-, அஞ்சி- (முத்திப்பேரின்பத்தில் விருப்பத்தால் இவளைச்சேர்ந்து சிற்றின்பம் நுகர்தற்குப்) பயந்து, வந்தித்த தொல்லை அரு மா தவம் மன்னி நின்றான்- (கடவுளை)வணங்கிச் செய்கிற தொன்றுதொட்டு வருகிற அரியபெரிய தவவொழுக்கத்திற்பொருந்திநின்றான்; (எ- று.) மற்று - வினைமாற்று. |