அடுக்கிச்சொல்லிவேண்ட, சிவபிரானும் 'அப்படியே ஆகுக' என்று ஐந்துதரம்கூறி, அவள் ஐந்துகொழுநரைப் பெறும்படி அனுக்கிரகித்தனன் என்பதாம். 'வேண்டும் வரம் வேண்டும்' என்று மௌற்கலியன் சொன்னபோது 'ஐந்து' வடிவுகொண்டு கிரீடிப்பாய்' என்று நாளாயணி வரம் வேண்ட, மௌற்கலியன் அவ்வாறே கிரீடித்தா னென்பதை முதனூலா லறியலாம். சதாசிவமூர்த்தியாகிய சிவபிரானுக்குச் சத்தியோசாதம், வாமதேவம், அகோரம், தற்புருடம், ஈசாநம் என் ஐந்துமுகங்க னென்று அறிக. 82. | முன்னின்றதேவன்மொழியின்படி கங்கைமூழ்கித் தன்னந்தனிநின்றழுகின்றவத் தையல் கண்ணீர் பொன்னங்கமலவனமான புதுமைநோக்கி என்னென்றிவளையிமையோர்பதி யெய்தினானே. |
(இ - ள்.) முன் நின்ற தேவன் மொழியின்படி - தனக்கு முன்னே எழுந்தருளிநின்றுகாட்சி தந்த சிவபிரான் கட்டளை கூறியபடி, கங்கை மூழ்கி- கங்காநதியில் நீராடி,தன்னந் தனி நின்று அழுகின்ற - ஒரு துணையுமில்லாமல் தனியேநின்று அழுகின்ற,அதையல் - அந்தப்பெண்ணினுடைய, கண் நீர், கண்களினின்று சொரியும்நீர்த்துளிகள், பொன் அம் கமலம் வனம்ஆன - பொன்மயமான அழகியதாமரைமலர்களின் தொகுதியாய்ப் பரிணமித்த, புதுமை- அதிசயத்தை, நோக்கி-பார்த்து, இமையோர் பதி-தேவராசனான இந்திரன், என் என்று இவளை எய்தினான் -இது என்னவென்று வினவிக்கொண்டே இவளைச் சமீபித்தான்; (எ - று.) சிவபிரான் ஐந்துகொழுநரைப் பெறும்படி அனுக்கிரகித்ததற்கு இவள் மகிழாமல் தக்கஒருநாயகனைப் பெறும்படி பிரார்த்திக்க, பரமசிவன் 'நீ ஐந்துதரம் வேண்டியபடி நான் உனக்கு ஐந்துதரம் அருளியது தவறாது; ஆனால் அவ்வரத்தை மறுபிறப்பில் அனுபவிக்கும்படி அருள்செய்கிறோம்' என்று அனுக்கிரகித்து அவளைக் கங்காநதியில் மூழ்கிவரும்படியும் அங்ஙனம்மூழ்கி வரும்பொழுது எதிரில்தோன்றும் புருஷனைத் தன்னிடம் அழைத்துவரும்படியும் கூறியனுப்ப, அவ்வாறே சென்ற அவள் அப்பொழுதே ஒருபதியைப் பெறாமல் மறுபிறப்பில் ஐந்துபதிகளைப் பெறவேண்டுமேயென்று கொண்ட சோகத்தோடு கங்கையில் முழுகியெழுகையில், அவளது விழிகளினின்றுபெருகிய கண்ணீர் கங்கையில்விழுந்து பொற்றாமரையானசெயலை அங்குவந்ததேவேந்திரன் பார்த்து 'இது என்ன?' என்று வினாவிக்கொண்டு அவளை அடுத்தனனென்பதாம். முன்னொருகாலத்தில் நைமிசாரணியத்திலே தேவர்கள் யாகஞ்செய்கையில், யமன்தீட்சிதனாய் நெடுநாள் வைதிகச்சடங்கிலிருந்ததனால் தனது அதிகாரத்தொழிலைச்செலுத்தாதொழியவே, பூமியில் சனங்கள் மரணமில்லாமல் மிகுதிப்பட்டுக் கொழுத்திட,அதுகண்டு அஞ்சிய இந்திரன் சந்திரன் வருணன் குபேரன் முதலிய தேவர்கள்பிரமனைச் சரணமடைந்து செய்தி கூறலும், அக்கடவுள் 'உங்கள் வீரியத்தால்வளர்ந்த யமனுடைய வேறொரு சொரூபம் அச்சனங்களைக் கொல்லும்' என்றுகூறியனுப்பியவுடனே அவர்கள் மேலுலகிலிருந்து பூலோகத்து நைமிசாரணியத்தைக்குறித்து வரு |