சிவபிரான் இந்திரனை நோக்கி 'இனி இப்படி ஒருபொழுதும் உபேக்ஷை செய்யாதே' என்று அறிவுகூறி ஒருமலையிடையிலுள்ள ஒருகுகையைக் காட்டி 'உன்னைப்போன்றவர்கள் அடங்கிய இதற்குள் நீயும் செல்' என்றுசொல்ல, அவன் அப்பிலவாயிலைத்திறந்து அதனுள் அடைபட்டிருப்பவர்களை நோக்கி 'நான் இங்ஙனம் ஆகாதிருக்க வேண்டும்' என்று கருதுமளவிலே, உருத்திர 'மூர்த்தி சினங்கொண்டு உறுக்கி விழித்துப்பார்த்து 'நீ இளமையினால் என்னை அவமதித்ததுபற்றி, இதற்குள் நுழை' என்று அதட்டி வலியப்புகுத்த, கூப்பியகையனாய்அவன் உட்புகுவானாயினன் என முதனூலில் விவரம் காண்க. பிலம்-பாதாளஅறை. (559) 85. | வன்பாதலத்தில்வருநால்வரும் வானின்வந்த புன்பாகசாதனனுந்தன்னடி போற்றிநிற்ப அன்பான்மகிழ்நரிவட்கைவரு மாதிரென்று மென்பாவைபங்கன்விதிக்கப் புவிமீதுவந்தார். |
(இ-ள்.) வல் பாதலத்தில் வரும்-கொடியபிலத்தில் முன்னமே பொருந்திய, நால்வர்உம்-நான்குஇந்திரர்களும், வானில் வந்த புல் பாகசாதனன்உம் - (அப்பொழுது) சுவர்க்கலோகத்தினின்று வந்த எளிமையையுடைய இந்திரனும், தன் அடி போற்றி நிற்ப - தனது திருவடிகளை வணங்கிநிற்க, மெல் பாவை பங்கன்- மென்மையையுடைய அழகிய உமாதேவியை வாமபாகத்திலுடைய சிவபெருமான், (அவர்களை நோக்கி), அன்பால் ஐவர்உம் இவட்கு மகிழ்நர் ஆதிர்என்று விதிக்க - 'அன்போடு நீங்கள் ஐந்துபேரும் இவளுக்குக் கணவராவீர்' என்று கட்டளையிட, (அவ்வாறே அந்தஐந்து இந்திரர்களும்), புவிமீது வந்தார்- பூமியில் வந்து பிறந்தார்கள்; அங்ஙனமே அந்த இந்திரர்கள் ஐவரும் பிறப்பவராயின ரென்பதாம். அங்ஙனம்பிலத்தினுட் புகுகிற இந்திரன் சிவபிரானைத் துதிக்க, அப்பெருமான் அவனையும்மற்றைநால்வரையும் நோக்கி, "என்னைமதியாத குற்றத்தால், நீங்களைவரும்பூலோகத்தில் மனுஷ்யராசராய்ப் பிறந்து, இராசகன்னிகையாக மறுபிறப்பெடுக்கும்இவளொருத்தியை மணம்புரிந்துகொண்டு, துஷ்டநிக்கிரகசிஷ்டபரிபாலனஞ் செய்துகுற்றந்தீர்ந்து மீண்டும் விண்ணுலகமடைவீர்" என்று கட்டளையிட,அவ்விந்திரர்ஐவரும் 'நாங்கள் மானுடப் பிறப்பெடுக்கையில் எங்கட்கு யமனும்வாயுவும் இந்திரனும் அசுவிநீதேவர்களும் தந்தையராகுக' என்றுவேண்ட, முக்கட்கடவுள் அங்ஙனமே அருள்செய்து அவர்கட்கு இம்மங்கையைமனையாளாகுமாறு நியமித்தான் என்ற விவரத்தை முதனூலிற் காணலாம். முந்தியஇந்திரர்நால்வர் விஸவபுக், பூததாமா, ஸிபி, ஸாந்தி எனபவர்; பிந்திய இந்திரன் பெயர்,தேஜஸ்வீ என்பது. பாகஸாஸநன் என்ற பெயர்-பாகனென்ற அசுரனைஅழித்தவனென்று பொருள்படும்; பாகன் விருத்திராசுரனுடன் பிறந்தவன். 86. | தருமன்பவனன்றினநாதன் றனயர்தம்பால் வருமிந்தநால்வரவர்நால்வரு மாலைமார்பா தெருமந்தவிந்தச்சிலைவீரனித் தேவர்க்கெல்லாம் பெருமன்பிறப்பிற்கவனேமுன் பிதாவுமானான். |
|