புத்திரனது வலத்தோளும், திடத்தோடு உரைத்த குறியின் பயன் சேர்ந்து- உறுதியாகச்சொல்லப்பட்ட உத்தமஇலக்கணங்களுக்கு உரிய பயனை யடைந்து, தோய -(ஒன்றோடொன்று) பொருந்தும்படி,-விடத்தோடு அமுதம் கலந்து என்ன மிளிரும்வேல்கண் வடத்தோடு விம்மும் முலையாளை - விஷத்துடனே அமிருதங் கலந்தாற்போலவிளங்குகிற வேல்போலுங் கண்களையும் ஆரத்தோடுபூரிக்கிற தனங்களையுமுடையவளான திரௌபதியை, வலத்தில் வைத்தார்-(தருமபுத்திரனது) வலப்பக்கத்தில் இருக்கவைத்தார்கள்; (எ- று.) மணமகனது வலப்பக்கத்தில் மணமகள் இருக்கும்போதுமணமகனது வலத்தோளும் மணமகளது இடத்தோளும் ஒன்றோடொன்று பொருந்துகிற இயல்பைவிளக்குவார், 'இடத்தோளிவட்கும் வலத்தோளிவ்விறைவனுக்குந்தோய முலையாளைவலத்தில்வைத்தார்' என்றார். ஆடவருக்கு வலப்பக்கத்து உறுப்புக்களிலும் மகளிர்க்குஇடப்பக்கத்து உறுப்புக்களிலும் உத்தமவிலக்கணம் சிறத்தலாகிய இயல்பின்படிஇவர்கள்தோள்களிற் காணப்பட்ட நல்லிலக்கணங்கள் இப்பொழுது பலிக்க என்றது, 'குறியின் பயன்சேர்ந்து' என்றதன் கருத்து. திடத்தோடு உரைத்த குறி-சாமுத்திரகசாஸ்திரலக்ஷணம் அறிந்தவர்கள் நன்குஆராய்ந்து இவை இன்னபயன்தருமென்று எடுத்துக்கூறியஉத்தமலக்ஷணங்கள். கண்களிற் சுற்றிலு மிருக்கிறவெண்ணிறத்தையும், இடையிலுள்ள விழியின் கருநிறத்தையுங் கருதி, 'விடத்தோடமுதங்கலந்தென்ன மிளிருங் கண்' என்றார். (567) 93. | கேள்விக்கொருவன்னெனுந்தௌமியன் கீதவேத வேள்விக்குவேண்டுவனயாவும் விதியினீட்டி மூள்வித்தசெந்தீக்கரியாக முரசுயர்த்த தாள்வித்தகற்குவரமான சடங்குசெய்தான். |
(இ-ள்.) கேள்விக்கு - நூாற்கேள்வியில், ஒருவன் எனும் - ஒப்பில்லாதவனென்று சொல்லப்படுகிற, தௌமியன் - தௌமியமுனிவன்,-கீதம் வேதம் வேள்விக்கு வேண்டுவன யாஉம்-சுவரங்களோடுகூறப்படுகிற வேதங்களின் விதிப்படி செய்யப்படுகிற விவாகத்துக்கு வேண்டுவனவான பொருள்களை யெல்லாம், விதியின் ஈட்டி - சாஸ்திரவிதிப்படி தொகுத்துவைத்துக்கொண்டு, மூள்வித்த செம் தீ கரி ஆக - (மந்திரபூர்வமாகச்) சுவலிக்கச்செய்த சிவந்த அக்கினி சாட்சியாக (ஓமாக்கினியின் முன்னிலையிலே), முரசுஉயர்த்த தாள் வித்தகற்கு-முரசவாத்தியத்தின் வடிவத்தையெழுதினகொடியை உயரநாட்டிய முயற்சியையும் ஞானத்தையுமுடையவனான தருமபுத்திரனுக்கு, வரம் ஆன சடங்கு செய்தான் - மேன்மையான விவாகத்துக்கு உரியதான மங்கலச்சடங்கைச் செய்வித்தான்; (எ- று.) வேள்விக்கு வேண்டுவன - சமித், தர்ப்பம், பொரி, தீர்த்தம், நெய், அக்ஷதை, அம்மி, பாலிகை முதலியன. வாள்வித்தகற்கு எனவும்பாடம். (568) 94. | பன்மங்கலமுமுடன்வைகிய பண்பினாளை நன்மங்கலப்பூண்டுகிலோடு நயந்துசாத்தித் |
|