பக்கம் எண் :

திரௌபதி மாலையிட்ட சருக்கம்319

தன்மங்கலந்தமானத்தோனையத் தையலோடுந்
தென்மங்கலச்செஞ்சுடர்த்தீவலஞ் செய்வித்தாரே.

     (இ-ள்.) பல் மங்கலம்உம்-பலமங்களங்களும்,உடன் வைகிய-ஒரு சேரத்
தங்கிய,பண்பினாளை - தன்மையையுடையளான திரௌபதிக்கு, துகிலோடு -
புதியபட்டாடையுடனே, நல் மங்கலம் பூண் - திரு மங்கலியத்தை, நயந்துசாத்தி -
விரும்பியணிவித்து, தன்மம் கலந்த மனத்தோனை -தருமம்
பொருந்தியமனத்தையுடையனான தருமபுத்திரனை, அ தையலோடுஉம் -
அந்தப்பெண்ணினுடனே, தென்மங்கலம்செம்சுடர் தீவலம்செய்வித்தார்-
அழகியமங்களகரமான சிவந்த சுவாலையையுடைய
ஓமாக்கினியைப்பிரதட்சிணஞ்செய்வித்தார்கள்;

     பாணிக்கிரகணத்தின்பின் மணமகன் தன்கையால்மணமகளது
கையைப்பற்றிக்கொண்டு அக்கினியை வலம்வருதல், ஒருசடங்கு. துகில்-
கூறையென்றுசிறப்பித்துச்சொல்லப்படும். சாத்தி-சாத்துவித்து, 'தென்மங்கலஞ்
செஞ்சுடர்தீவலஞ்சூழுவித்தார்' என்றும், 'தொன்மங்கலச்
செஞ்சுடர்த்தீவலஞ்சூழுவித்தார்' என்றும்பாடம்.

95.கங்குற்பவளவனமீது கடற்றரங்கம்
பொஙகித்தரளத்திரள்சிந்திப் பொழியுமாபோல்
அங்கிப்புறத்துத்திருக்காப்பணி யங்கையேந்திச்
செங்கட்கரியகுழலாள்பொரி சிந்தினாளே.

     (இ-ள்.) கங்குல் - இராப்பொழுதில், கடல் தரங்கம் - கடலின் அலை,
பொங்கி- பொங்கியெழுந்து, பவளம் வனம்மீது-பவளக்கொடிகளின்தொகுதியின்மேல்,
தரளம்திரள் - முத்துக்களின் கூட்டத்தை, சிந்தி பொழியும் ஆபோல்-
வீசிச்சொரியும்விதம் போல,-செம்கண்கரிய குழலாள் - சிவந்தகண்களையும்
கரியகூந்தலையுமுடையளான திரௌபதி, திரு காப்பு அணி அம்கைஏந்தி -
மங்கலகரமான ரக்ஷாபந்தனத்தை யணிந்த அழகிய (தன்) கைகளில் எடுத்து,
அங்கிப்புறத்து பொரிசிந்தினாள் - அக்கினியில் நெற்பொரியைச்சொரிந்தாள்;
(எ- று.)

     லாஜஹோமம் (பொரிகொண்டு ஓமஞ்செய்தல்) என்றவிவாகச்சடங்கு, இதிற்
கூறப்பட்டது. கருநிறமுடைய திரௌபதிசெந்நிறமுடைய தீயில்
வெண்ணிறமுடையபொரியைக்கையாற்சொரிதற்குக் கருங்கடல் பவளக்காட்டில்
முத்துத்திரளை அலையாற் சொரிதலை உவமைகூறினார். திருக்காப்பு - கங்கணம்.
காப்பு - காவல்; பாதுகாவலுக்காக அணியப்படுவதான விவாககங்கணத்துக்கு இங்கு
ஆகுபெயர். 'கங்கிற் பவளவனம்' என்றும் பாடம்.                   (570)

96.-இவ்வாறே பின்பு திரௌபதிக்கும் வீமன் முதலிய நால்வர்க்கும்
தனித்தனிநிகழ்ந்த விவாகச் சடங்குகளை இதில் கூறுகிறார்.

இவ்வாறுமன்றலயர்வித்தபி னீன்றகாதல்
வெவ்வாரழலின்முறைமூழ்கினண் மீண்டுதோன்ற
மைவாரளகவடமீனிகர் கற்பினாளை
அவ்வாறுமற்றையொருநால்வரு மன்றுவேட்டார்.

     (இ - ள்.) இ ஆறு - இவ்வாகையாய், மன்றல் அயர்வித்த பின்- (தருமனுக்கும்
திரௌபதிக்கும்) விவாகஞ்செய்வித்தபின்பு.-