பக்கம் எண் :

320பாரதம்ஆதி பருவம்

(திரௌபதி), ஈன்ற காதல் வெவ் ஆர் அழலில் - (தன்னைப்)பெற்றதான
அன்பையுடைய வெவ்வியநிறைந்த ஓமாக்கினியில், முறை மூழ்கினள் -  முறையே
மூழ்கி, மீண்டுதோன்ற-மீண்டும்எழுந்துவர, மை வார் அளகம் வடமீன் நிகர்
கற்பினாளை - கரிய நீண்ட கூந்தலையுடைய அருந்ததிபோன்ற
கற்புநிலையையுடையளான திரௌபதியை, அ ஆறு - கீழ்க்கூறியபடியே, மற்றை
ஒருநால்வர்உம் - (வீமன் முதலிய) மற்றைநான்குபாண்டவர்களும், அன்று -
அன்றைத்தினத்திலேயே, வேட்டார்-மணஞ்செய்துகொண்டார்கள்;

      'முறை' என்றதனால், நால்வரையும் மணஞ்செய்யும்போது ஒவ்வொருவர்க்கு
ஒவ்வொருமுறை அக்கினிபிரவேசஞ்செய்து மீண்டு எழுந்தனளென்க.
அக்கினிபிரவேசஞ்செய்து மீண்டசெய்கை, வியாசபாரதத்திலாவது
பாலபாரதத்திலாவதுகாணப்படவில்லை. "பபூவகந்யைவகதேகதேஹநி" என்று
வியாசபாரதத்தில்வருவதையொட்டி இங்ஙன்கூறினர்போலும். ஒவ்வொருவரையும்
மணஞ்செய்யும்போது கன்னிகையாயிருத்தல் வேண்டுமாதலால், அதன் பொருட்டு,
தீக்குதித்து எழுந்தன ளென்க. முன்பு தீயினின்றுபிறந்தவள் மீண்டு மீண்டும்
தீயினின்றே - பிறந்த தன்மை தோன்ற 'ஈன்ற அழல்' எனப்பட்டது. இவள்
தீக்குதித்தபொழுது இவளுடம்பைத் தீ எரித்துஒழித்திடாமைபற்றி, 'காதலழல்'
என்றார்.பல ஆடவரை மணஞ்செய்தவிடத்தும் அதனால் அவள்கற்பிற்குக்
குறைவில்லையென்பார்' வடமீனிகர்கற்பினாள்' என்றார்.                (571)

97.- துருபதன், மருமக்களுக்குப் பலவகைவரிசைகளை
அளித்தல்.

மாரன் கரும்பு வளரும்படி வார்த்த நீரால்
ஈரம் புலராக் கரத்தோருக்கி யாக சேனன்
தேரும் பரியுங் களிறுந்திரள் சேனை யாவும்
பாருந் தனமு முமதென்று பலவு மீந்தான்.

     (இ-ள்.) மாரன் கரும்பு வளரும்படி - மன்மதனுடைய(வில்லாகிய) கரும்பு
வளரும்படி,வார்த்த - (தான்) தாரைவார்த்துத் தத்தஞ்செய்து, நீரால் - நீரை
ஏற்றுக்கொள்ளுதலால், ஈரம் புலரா-ஈரம் நீங்காத, கரத்தோருக்கு - கையையுடைய
பாண்டவர்க்கு, யாகசேனன் - துருபதன், தேர்உம் - தேர்த் தொகுதியையும்,
பரிஉம் -குதிரைக்கூட்டத்தையும், களிறுஉம் - யானைத்திரளையும், திரள்சேனை -
திரண்டகாலாட்சேனையையும், யாஉம் - ஆகச் சதுரங்கசேனைகளையும், பார்உம் -
பூமியையும், தனம்உம்-செல்வத்தையும், பலஉம்-மற்றும் பலவற்றையும், உமது
என்று - உங்கட்கு உரிய தென்று (தனித்தனி) கூறி, ஈந்தான் - கொடுத்தான்;
(எ- று.)

     கன்னிகையின் தந்தை மந்திரபூர்வமாகத் தானநீரைத் தன்கையால் மருமகன்
கையில் வார்த்துக் கன்னிகா தானஞ்செய்ய, அதனை அவன் ஏற்றல் இயல்பு. ஒருவன்
தன்மகளை ஒருவனுக்குக் கன்னிகாதானஞ்செய்தபின், அவர்கள் தம்மிற்கூடி
வாழ்தலால், 'மாரன் கரும்பு வளரும்படி வார்த்த நீர்' என்றார்;  மன்மதனது
வில்லின்தொழில், வாழ்க்கையின்பமாம்.                            (512)