பக்கம் எண் :

324பாரதம்ஆதி பருவம்

104.- துரியோதனாதியர் நூற்றுவரையும் வீமன் வெல்லல்.

தண்மதிக்குடைத் தம்முனுந்தம்பியும்
எண்ணுமற்றை யிளைஞர்கள்யாவரும்
கண்ணுறக்களங் காணுமுன்றீயினால்
வெண்ணெயொத்துடைந் தார்விறல்வீமனால்.

     (இ-ள்.) தண் - குளிர்ந்த, மதி - சந்திரமண்டலம்போன்ற, குடை -
ஒற்றைவெண்கொற்றக்குடையையுடைய, தம்முன்உம் - தமையனான துரியோதனனும்,
தம்பிஉம் - (அவனுக்கு) அடுத்த தம்பியாகிய துச்சாதனனும், எண்ணும் மற்றை
இளைஞர்கள் யாவர்உம் - மற்றும்(வரிசையாக) எண்ணப்படுகிற
தொண்ணுற்றெட்டுப்பேரும்,-கண்உற களம் காணும் முன்-கண்களினால் நன்றாகப்
போர்க்களத்தை (எதிரிற்) காண்பதற்குமுன்னே, விறல் வீமனால் -
வலிமையையுடையவீமசேனனால், தீயினால்வெண்ணெய் ஒத்துஉடைந்தார்-
நெருப்பினால் வெண்ணெய்உடையுந்தன்மைபோல உடைந்தோடினார்கள்; (எ-று.)

     நெருப்பு அடுத்தவுடனே வெண்ணெய் உடைந்து நெகிழ்ந்து
உருகியோடுதல்போல, வீமன் அருகில்வந்தவுடனே துரியோதனாதியர் உறுதிகெட்டு
நெகிழ்ந்துஓடின ரென்பதாம்; உவமையணி. அத்தன்மையையே,
கண்ணுறக்களங்காணுமுன் உடைந்தாரென்று அதிசயோக்திதோன்றக்
கூறினார்.                                                    (579)

105.- இங்ஙனந் தோற்ற பகைவரனைவரும் தம்ஊருக்கு
மீளுதல்.

விரோசனக்கதிர் மைந்தனும்வேந்தனும்
சரோசனத்திறற் றம்பியுமாமனும்
புரோசனப்பெயர்ப் புன்மதிதன்னைநொந்து
அரோசனத்துட னத்தினநண்ணினார்.

     (இ-ள்.)  விரோசனன் கதிர் மைந்தன்உம் - விரோசனனென்று
ஒருபேரையுடைய சூரியனது மகனான கர்ணனும், வேந்தன்உம்-இராசராசனான
துரியோதனனும், சரோசனன் திறல் தம்பிஉம் - கோபத்தோடுகூடிய
வலிமையையுடைய தம்பியான துச்சாதனனும், மாமன்உம் - (துரியோதனாதியர்க்கு)
மாமனான சகுனியும்,-புரோசனன் பெயர் புன்மதி தன்னை நொந்து -
புரோசனனென்னும்பெயருள்ள துர்ப்புத்தியையுடைய மந்திரியை வெறுத்துக்
கொண்டே,அரோசனத்துடன் - பிரகாசமில்லாமையோடு, அத்தினம் நண்ணினார்-
அத்தினாபுரியைஅடைந்தார்கள்; (எ-று.)- 'அந்நகர்கண்ணினார்' என்றும் பாடம்.

     பாண்டவர்களை அரக்குமாளிகையில் எரிக்கும்படிஏவியனுப்பப்பட்ட
புரோசனனென்ற துர்மந்திரி அங்ஙனஞ்செய்துமுடிக்காமல் அஜாக்கிரதைப்பட்டு
இறந்துபோய்விட்டதைப்பற்றி இப்பொழுது துரியோதனாதியர்கள் கழிவிரக்கத்தோடு
வெறுப்பாராயினர். மனவருத்தத்தாலும் உடல் புண்பட்டதனாலும்
ஒளிமழுங்கச்சென்றனரென்க. துஷ்டசதுஷ்டர் நகர்கண்ணியதையே தலைமைபற்றி
இங்குக்கூறின ராயினும், மற்றைத் தம்பியர் நகர்நண்ணியதையும் இங்