108.-திருதராட்டிரன் பாண்டவர்களை அத்தினாபுரிக்கு வரவழைத்தல். தாதினாற்பொலி தார்வரைமார்பரைத் தூதினாற்றங்க டொல்பதிசேர்த்தினான் காதினாற்பய னின்றெனக்கண்கள்போற் கோதினாற்றெரி யாமனக்கோளினான். |
(இ-ள்.) கண்கள் போல் - (தன்) கண்கள் (இயல்பில் எவற்றையும் உணராமை)போலவே, கோதினால் தெரியா - குற்றமுடைமையால் (நன்மை தீமைகளைப்)பகுத்தறியாத, மனம் கோளினான் - மனத்தின்தன்மையை யுடையவனானதிருதராட்டிரன்,-தாதினால் பொலி தார் வரை மார்பரை - பூந்தாதினாற்பொலிகின்றமாலையை யணிந்த மலைபோன்ற மார்பையுடைய பாண்டவர்களை, காதினால் பயன்இன்று என - கொலைசெய்ய முயலுதலாற் பயனில்லையென்று (எந்தஉபாயத்தினாலும்வெல்லத்தக்கவரல்லரென்று) நிச்சயித்து, (தருமபுத்திரனை அவனுக்கு உரியஅர்த்தராச்சியத்திற் பட்டாபிஷேகஞ்செய்யத் தீர்மானித்து), தூதினால் தங்கள் தொல்பதி சேர்த்தினான் - தூதனைக்கொண்டு தங்களுடைய பழமையான அத்தினாபுரிக்குவருவித்தான்; (எ-று.) விதுரனையனுப்பி வரவழைத்ததாகப் பாரதங்களி லுள்ளது. 109. - பாண்டவர் அரசுபெறுமாறு அத்தினாபுரியில் நெடுநாள் வாழ்தல். வீடு மற்கும் விதுரற்கு மேற்கவந் நாடு முற்று நரபதி நல்கவே ஆடு பொற்கொடி யந்நகர் வைகினார் நீடு விற்றிற லோர்நெடுங் காலமே. |
(இ-ள்.) நர பதி - திருதராட்டிமகாராசன், வீடுமற்குஉம் விதுரற்குஉம் ஏற்க -வீடுமனுக்கும் விதுரனுக்கும் இயைய, அ நாடு முற்றுஉம்நல்க - (பாண்டவர்க்குஉரிய)அந்நாட்டின்பகுதிமுழுவதையும் (அவர்கட்குக்) கொடுக்குமாறு,-நீடு வில் திறலோர் -நீண்ட வில்லின் வலிமையையுடைய அவர்கள், ஆடு பொன் கொடி அ நகர்நெடுங்காலம் வைகினார்-அசைகிற அழகிய கொடிகளையுடைய அந்தஅத்தினாபுரியில் நெடுங்காலம் இருந்தார்கள்; (எ - று.) வீடுமற்கும் விதுரற்கும் ஏற்க - அவ்விருவர்மனத்திற்கும் திருப்தியாக என்றபடி;இதனால், திருதராட்டிரன் அவர்களுடைய மனக்கருத்திற்கு ஏற்பப் பாண்டவர்க்குஅரசு தரப்போகிறானே யன்றித் தன்மனமொப்பித் தருபவனல்ல னென்பதுதொனிக்கும். இனி, இப்பாடலுக்கு - திருதராட்டிரன் தருமபுத்திரனுக்கு மீண்டும்இளவரசுகொடுத்தானென்று முதலிரண்டு அடிகள் கூறும் என உரைவகுப்பாருமுளர்.ஏகாரம் இரண்டும்-ஈற்றசை. திரௌபதி மாலையிட்ட சருக்கம் முற்றிற்று. ------------ ஆறாவது இந்திரப்பிரத்தச் சருக்கம். பாண்டவர்கள் இந்திரப்பிரத்த மென்னும் நகரத்தை யமைத்துக்கொண்டு அதனில் வசித்த செய்தியைக் கூறும் சருக்கமென்று |