பக்கம் எண் :

இந்திரப்பிரத்தச் சருக்கம்331

     (இ-ள்.) ஒற்றையோடு இரட்டைவலம்புரி மிழற்ற-மூவகைச் சங்க
வாத்தியங்கள் முழங்க, ஒரு குடை மதிஎன நிழற்ற-ஒற்றை வெண்கொற்றக்குடை
சந்திரமண்டலம்போல ஒளிசெய்ய, கொற்றவர் முன் பின் போதர-வெற்றியையுடைய
அரசர்கள் முன்னும் பின்னும் போக, மடவார் குழு பொரிசிந்தி வாழ்த்துஎடுப்ப-
மகளிர் கூட்டம் (மங்களார்த்தமான) நெற் பொரிகளைச்சிந்தி வாழ்த்துக் கூற,
எவர்உம்இற்றை நாள் வாய்த்த ஆ என்ன - 'இந்தநாள் வாய்ந்த வகை
(வியக்கத்தக்கது) 'என்று அனைவரும் கொண்டாட, மற்றை நால்வர்உம் தன்
சூழ்வர - வீமன் முதலியதம்பியர் நால்வரும் தன்னைச் சுற்றிலும்வர,
தருமன்மைந்தன் - தருமபுத்திரன்,ஏழ்உயர் இராச குஞ்சரம்மேல் -
ஏழுமுழம்உயர்ந்தபட்டத்து யானையின்மேல் ஏறி,மா நகர் வலம்வந்தான் -
பெரிய அந்நகரைப் பிரதஷிணமாகப் பவனிவந்தான்; (எ-று.)

     ஒற்றையோடிரட்டை வலம்புரி-வெற்றிச்சங்கு மங்கலச்சங்குகொடைச்சங்கு
என்பன; முன்னொற்றை யிருசங்க முடனூத" என்பர், விராடபருவத்தும். இனி,
ஒற்றையோடு - ஊதுகொம்புகளுடனே, இரட்டை வலம்புரி - மங்கலச்சங்கும்
வெற்றிச்சங்கும் எனினும் அமையும். குஞ்சரம்-மலைப்புதர்களிற் சஞ்சரிப்பதென்று
உறுப்புப்பொருள்படும்; குஞ்சம் - புதர். இராசகுஞ்சரம் -
அரசுவாவெனப்படும்.                                          (590)

7.- பின்பு திருதராட்டிரனேவலால் தருமன் காண்டவப்
பிரத்தம் சேரத் துணிதல்.

மாநகர்வலமாய்வந்துதன்குரவர்மலர்ப்பதமுறைமையால்வணங்கிக்
கோநகரிருக்கையடைந்தனனொருநாட் கொற்றவனேவல்கைக்கொண்(டு
பேய்நகரெனுமாறியாவரும்வழங்காப் பிறங்குநீள்கானிடையழிந்த
தூநகர்முன்னோரிருந்ததொன்றந்தத்தொன்னகர்வைகுமாதுணிந்தா(ன்.

     (இ-ள்.) மா நகர் வலம் ஆய் வந்து - (இவ்வாறு பெரிய அந்நகரத்தைப்
பிரதட்சிணமாக ஊர்கோலம் வந்து, தன் குரவர் மலர் பதம் முறைமையால்
வணங்கி -தனக்குஉரிய பெரியோர்களுடைய தாமரைமலர்போன்ற பாதங்களை
முறைப்படிவணங்கி, கோ நகர் இருக்கை அடைந்தனன் - தலைமையான
அவ்வத்தினாபுரியில் அரசு வீற்றிருத்தலைப் பொருந்தினான், (தருமன்); (அவன்),
ஒருநாள் - பின்பு ஒருநாள், கொற்றவன் ஏவல் கைக்கொண்டு -
திருதராட்டிரனுடையகட்டளையைப் பெற்று, பேய் நகர் எனும் ஆறு-பேய்கள்
எவரும் சஞ்சரியாமலுள்ள,பிறங்கு நீள்கானிடை-அடர்ந்த பெரிய காட்டில்,
முன்னோர் இருந்தது அழிந்த தூநகர் ஒன்று அந்த தொல் நகர் - பழைய
அரசர்கள் இருந்ததான நல்ல நகரமொன்று(பின்பு) அழிபட்டதாக
அந்தப்பழையஊரில், வைகும் ஆக-இருக்கும்படி, துணிந்தான்- நிச்சயித்தான்;
(எ-று.)

     துரயோதனாதியரின் துர்ப்போதனையினாற் பாண்டவரைக்
காண்டவப்பிரத்தத்திற்குச் செல்லுமாறு திருதராட்டிர னேவினானென்பது,
முதனூலால்விளங்கும். இங்கு 'தன்குரவர்' எனப்பட்டவர் - கிருபன் துரோணன்
வீடுமன்திருதராட்டிரன் விதுரன் குந்தி காந்தாரி யென்பவர். முறைமையால்
வணங்குதல்-ஒருவரை வணங்கியபின் ஒருவரையாக முறையே வணங்குதலும்,
அஷ்டாங்க