பக்கம் எண் :

334பாரதம்ஆதி பருவம்

தேவர்களும் மனிதர்களும் கண்டு அதிசயிக்க, மண்ணின்உம் புயங்கர் பாதலம்
முதல்ஆம் மற்று உள உலகின்உம் நமது ஆம் விண்ணின்உம் உவமை இலது
என -பூலோகத்திலும் சர்ப்பசாதியாரது பாதாளலோகம் முதலாகிய மற்றுமுள்ள
உலகங்களிலும் நம்முடையதாகிய சுவர்க்க லோகத்திலும் ஒப்பில்லை யென்று
சொல்லும்படி, ஓர் வியல் நகர்-ஒரு பெரிய நகரத்தை, நீ கடிது விதித்தி-நீ வரைவில்
இயற்றுவாயாக, ' என-என்று, திண்ணிதின் மொழிந்தான்-உறுதியாகக் கட்டளை
கூறினான்; ( எ-று.)

     கண்ணபிரானது திருவுள்ளத்தை அறிந்து அதற்குஏற்ப இந்திரன் கம்மியர்
தலைவனுக்குக் கட்டளையிட்டன னென்க. கண்ணனதுதிருவுள்ளமுவத்தலை
வேண்டுபவனாதலின், 'நமதாம்விண்ணினும் உவமை யிலதென
நகர்விதித்தி' என்றான்.                                          (594)

11.- அக்கட்டளைப்படி விசுவகர்மன் சிறந்ததொரு
நகரத்தையமைத்தல்.

தேவினுந்தேவயோனியிற்பிறந்த திரளினுஞ்சிறந்தயாவர்க்கும்
பூவினுமெவ்வெவ்வுலகினுமுன்னம் புந்தியாலியற்றியபுரங்கள்
யாவினுமழகும்பெருமையுந்திருவு மின்பமுமெழுமடங்காக
நாவினும்புகலக்கருத்தினுநினைக்கவரியதோர்நலம்பெறச்சமைத்தான்.

     (இ-ள்.) தேவின்உம் - தேவசாதியிலும், தேவயோனியில் பிறந்த திரளின்உம்-
அத்தேவசாதியிற் சம்பந்தப்பட்ட [அசுரர் முதலிய) கணங்களிலும், சிறந்த
யாவர்க்குஉம்-சிறப்புற்ற (இந்திரன் முதலிய) பலர்க்கும், (பயன்படும்படி), பூவின்உம்-
பூலோகத்திலும், எ எ உலகின்உம்-மற்றும் எந்தெந்த லோகங்களிலும், முன்னம் -
முன்பு, புந்தியால் இயற்றிய-(தனது) மனத்தால்நினைத்துநிருமித்த, புரங்கள்
யாவின்உம்-நகரங்கள் எல்லாவற்றைக்காட்டிலும், அழகு உம் பெருமைஉம் திருஉம்
இன்பம்உம் எழு மடங்கு ஆக-அழகும் பெருமையும் செல்வமும் 
இன்பமும்ஏழுமடங்குமிகுதியாக அமையும்படி, நாவின் புகலஉம் கருத்தின்
நினைக்கஉம் அரியது ஓர் நலம்பெற-நாவினாற்சொல்லுதற்கும்
மனத்தினால்நினைப்பதற்கும் அரியதான ஒப்பற்ற சிறப்பைப் பெற, சமைத்தான் -
(விசுவகர்மன் ஒரு நகரத்தை) உண்டாக்கினான்; (எ-று.)

     நினைத்தமாத்திரத்தில் தன்சக்தியால் நிருமிக்குந்தன்மையும், தனது
புத்திவிசேஷங்களை யெல்லாங் காட்டுமாறு செய்தமையும் தோன்ற,
'புந்தியாலியற்றிய' என்றார். தேவயோனியிற் பிறந்ததிரள். - அசுரர் கந்தருவர்
கின்னரர் வித்தியாதரர்யக்ஷர் கருடர்கிம்புருடர் சித்தர் உரகர் முதலியோர். (595)

12.- அந்நகரச்சிறப்பை அனைவருங்கொண்டாடுதல்.

மரகதங்கோமேதகந்துகிர்தரளம் வைரம்வைதூரியநீலம்
எரிமணிபுட்பராகமென்றிவற்றிற் காகரமிந்தமாநகரென்று
அரிமுதலிமையோரனைவரும்புகழ்ந்தா ராடகப்பொருப்பினையழித்துத்
தரணியினகரொன்றமைந்தவாவென்று தபதியர்யாவரும்வியந்தார்.

     (இ - ள்.) 'மரகதம் கோமேதகம் துகிர் தரளம் வைரம் வைதூரியம் நீலம் எரி
மணி புட்பராகம் என்றஇவற்றிற்கு-மரகதம் கோமே