பக்கம் எண் :

336பாரதம்ஆதி பருவம்

வந்தது பொருட்பின்வருநிலையணி. இயக்கர்-யக்ஷர் என்ற வடசொல்லின் திரிபு,
நாரணாதி - நாரயாணாதி என்ற  வடமொழித் தொடரின் விகாரம்.          (597)

14.- அந்நகரத்துக்குக் கண்ணன் இந்திரப்பிரத்தமென்று
பேரிடுதல்.

சந்திராபதமுந்தினகராபதமு மிருபொழுதினுமெழச்சமைத்த
மந்திராதிகளுமஞ்சமுமதிலு மகரதோரணமணிமறுகும்
கொந்திராநின்றசோலையுந்தடமுங் கொற்றவன்கோயிலுநோக்கி
இந்திராபதியவ்விந்திரன்பெயராலிந்திரப்பிரத்தமென்றிட்டான்.

     (இ - ள்.) சந்திர ஆபதம்உம் - சந்திரனுக்கு ஆபத்தும், தினகர
ஆபதம்உம் -சூரியனுக்கு ஆபத்தும், இருபொழுதின்உம் எழ - (இராபகல்என்ற),
இரண்டுகாலங்களிலும் உண்டாகும்படி, சமைத்த- (விசுவகர்மன்) நிருமித்த, மந்திர
ஆதிகள்உம் - மாளிகை முதலியவற்றையும், மஞ்சம்உம் - கட்டில்களையும்,
மதில்உம்-மதில்களையும், மகர தோரணம் மணி மறுகுஉம்-மகரதோரணங்கள்
அடர்ந்த அழகிய விதிகளையும், கொந்து இராநின்ற சோலைஉம் - பூங்கொத்துக்கள்
பொருந்திய சோலைகளையும், தடம்உம் - தடாகங்களையும், கொற்றவன்
கோயில்உம்- அரசன் வசித்தற்குஉரிய அரண்மனையையும், இந்திராபதி -திருமகள்கணவனானகண்ணபிரான், நோக்கி-பார்த்து, அ இந்திரன் பெயரால்
இந்திரப்பிரசித்தம் என்றுஇட்டான் - அந்நகரத்தைச் செய்வித்த இந்திரனுடைய
பெயரினால் (அதற்கு)இந்திரப்பிரஸ்த மென்று பெயரிட்டருளினான்; (எ-று.)

     பிரஸ்த மென்ற வடிசொல் - தங்குமிடமென்று பொருள்படும். இந்நகரம்
அமைத்தற்கு இந்திரன் ஏவுதற்கருத்தாவாயினாதலால், அவன்பெயரால் இதற்கு
இந்திரப்பிரஸ்த மென்று பெயரிடப்பட்டதென்க. இந்நகரத்து உபரிகைமுதலியன
மிகவும் உயர்ந்துள்ளதனால் சந்திரசூரியர்களுக்கு எப்பொழுதும் தடையுண்டாகின்ற
தென்பது, முதலடியின் கருத்து: தொடர்புயர்வுநவிற்சியணி. சந்த்ராபதம்,
திநகராபதம்,மந்திராதி, மகரதோரணம், இந்திராபதி, இந்திரன் - வடசொற்றிரிபுகள்.
திந கரன் -பகலைச் செய்பவன். மகரதோரணம் - கறாமீன்வடிவமையச்
சித்திரரிக்கப்பட்டதோரணம். கொந்து=கொத்து: மெலித்தல்.             (598)

15.-அந்நகரச்சிறப்பைக் கூறத்தொடங்கல்.

இமையவர்பதியிலுள்ளனயாவு மிங்குளவிங்குமற்றுள்ள
அமைவுறுபொருள்களங்கிலவெனுமாறமைத்தவான்றொல்பதியழகைச்
சமைவுறவிரித்துப்புகழ்வதற்குன்னிற் சதுர்முகத்தவனுமெய்தளரும்
நமர்களானவிலமுடியுமோமுடியா தாயினும்வல்லவாநவில்வாம்.

     (இ-ள்,) 'இமையவர்பதியில் உள்ளன யாஉம் - தேவலோகத்திலுள்ள
சிறந்தபொருள்களெல்லாம், இங்குஉள - இந்நகரத்தில் உள்ளன: மற்று-, இங்கு
உள்ளஅமைவு உறு பொருள்கள் - இந்நகரத்திலுள்ள சிறந்தபொருள்கள் (பல),
அங்கு இல- அத்தேவலோகத்தில் இல்லை,' எனும் ஆறு - என்று சொல்லும்படி,
அமைத்த-உண்டாக்கிய, 'வான் தொல் பதி - சிறந்த பெரிய அந்நகரத்தினது,
அழகை-,சமைவுஉற விரித்து புகழ்வதற்கு உன்னில்-