பக்கம் எண் :

இந்திரப்பிரத்தச் சருக்கம்337

தகுதியாக விரித்துச்சொல்லுதற்கு எண்ணினால், சதுர்முகத்தவன்உம் மெய்தளரும்-
நான்கு முகங்களையுடையவனான பிரமனும் மனம் தளர்வான்; (அங்ஙனமாயின்),
நமர்களால் நவில முடியும்ஓ- எம்போலியரால்சொல்லமுடியுமோ? முடியாது;-
ஆயின்உம் -  ஆனாலும், வல்ல ஆ - (எமக்கு) இயன்றவளவு, நவில்வாம்-
வருணித்துக்கூறுவோம்; (எ-று.)- அதனை, அடுத்தபதினொருகவிகளிற் கூறுகிறார்.
மற்று - வினைமாற்று.

     மேற்கூறப்படும் நகரவருணனைக்குஇது ஓர் அவையடக்கமாய் அமைந்தது.
நான்குமுகங்களையுடையவனுக்கும் முடியாதசெயல் ஒருமுகத்தையுடைய நம்மவர்க்கு
(மனிதர்கட்கு) முடியாதுஎன்ற கருத்தை, 'சதுர்முகத்தவன்' என்ற பெயர்
உட்கொண்டதனால், கருத்துடையடைகொளியணி.                     (599)

16.- இதுமுதற் பதினொருகவிகள்-இந்திரப்பிரத்தவருணனை.

விதிமறைமுறையிற்சாந்திசெய்கடவுள் வேதியராரவமொருசார்
மதிமுறைதவறாவமைச்சர்சொல்விழையு மன்னவராரவமொருசார்
நிதிகெழுசெல்வத்தளகையோர்நெருக்கானிறைந்தபேராரவமொருசார்
பதிதொறுமுழவர்விளைபயனெடுக்கும் பறைகறங்காரவமொருசார்.

     (இ-ள்.) மறைவிதி முறையின் - வேதங்களிற்கூறிய விதிவாக்கியங்களின்
முறைமைப்படி, சாந்திசெய் - (நகரப்பிரவேசத்திற்காகச் சிலதோஷ)
சாந்திச்சடங்குகளைச் செய்கிற, கடவுள்வேதியர் - தெய்வத்
தன்மையையுடையபிராமணர்களது, ஆரவம் - மந்திர முழக்கம், ஒரு சார்-
ஒருபக்கத்திலும்,-மதி முறைதவறா -அறிவுடைமையால் நீதிதவறாத, அமைச்சர்-
மந்திரிகளுடைய, சொல் - சொற்களை, விழையும் - விரும்பிக்கேட்டொழுகுகிற,
மன்னவர் - அரசர்களுடைய, ஆரவம்-பேரொலி, ஒரு சார்-ஒருபக்கத்திலும்,- நிதி
கெழு செல்வத்து-நிதிபோல் நிறைந்த செல்வத்தையுடைய, அளகையோர் -
அளகாபுரிக்குஉரியோராகிய வைசியர்களுடைய, நெருக்கால்-நெருக்கத்தினால்,
நிறைந்த-, பேர் ஆரவம் - பெரிய ஆரவாரம், ஒரு சார்-ஒருபக்கத்திலும்,-
பதிதொறுஉம் - ஊரின்இடந்தோறும், உழவர் விளை பயன் எடுக்கும்-வேளாளர்
(ஆங்காங்கு) விளையும்பயன்களை யெடுத்துக்கொள்ளும்போது (களிப்பினால்)
முழங்குகிற, பறை-வாத்தியங்கள், கறங்கு-ஒலிக்கிற, ஆரவம்-முழக்கம், ஒரு
சார்-ஒருபக்கத்திலும், (அந்நகரிலுள்ளன); (எ-று.)- 'உள்ளன' என் வினைமுற்று
வருவிக்க; மேல்3-கவிகளிலும் இவ்வாறே.

     கவிகள் தாம் வருணிக்கும் நாடு நகரம் மலை முதலிய இடங்களில் பலவகை
முழக்கமுள்ளன என்று வருணனை கூறுதல், ஒருமரபு. இச்செய்யுளில் அடிதோறும்
ஈறெழுத்து ஒத்துவந்தது, இயைபுத்தொடை.

     இங்கே 'சாந்தி' என்றது, நகரப்பிரவேசகாலத்தில் தோஷநிவாரணமாகச்செய்யும்
சடங்கைக்குறிக்கும்.  குபேரனது இராசதானியான அளகாபுரியைச் செல்வமிகுதிக்கு
உரியவர்களாகிய வைசியர்க்கு உரியதெனக்கூறுதல், கவிசமயமாதலால், இங்குவைசியர்
'அளகை