பக்கம் எண் :

338பாரதம்ஆதி பருவம்

யோர்? எனப்பட்டனர்; திருவிளையாடற்புராணத்து,வன்னியுங் கிணறு
மிலிங்கமுமழைத்தபடலத்தில் "பொன்னாட்டின் மடவாரைப்புணர்வதற்கோ
நம்மளகாபுரத்துவேந்த, னன்னாட்டின்மடவாரை மணப்பதற்கோ"
என்றதுகொண்டும் இதனையுணர்க; பந்தனந்தாதியில், பந்தனென்ற வைசியன்
"பொன்னளகைப்பந்தன்," "அளகை்கோன்," "அளகைச்சேய்" என்று
கூறப்படுதலுங்காண்க;  ஆதியில் அளகாபுரியினின்றுவைசியர்கள் பிறஇடங்கட்கு
வந்தனரென ஒருகதைகூறுதலும்உண்டு. பதிதொறும்உழவர் விளைபயன் எடுத்தல்-
"கதிர்படுவயலினுள்ள கடிகமழ்பொழிலி னுள்ள, முதிர் பலமரத்தினுள்ள, முதிரைகள்
புறவினுள்ள, பதிபடுகொடியினுள்ள படிவளர்குழியினுள்ள மது வனமலரிற்
கொள்ளும்வண்டெனமள்ளர்கொள்வார்" எனக் கம்பர்கூறியவாறுகாண்க.
அங்ஙனம்பயன்கொள்ளுபொழுது களிப்புமிகுதல்காரணமாகப்பறைகறங்குதல்
இயல்பு, நெருக்கு-நெருங்குஎன்றமுதனிலை திரிந்த தொழிற்பெயர்.      (600)

17.தோரணமஞ்சத்தலந்தொறுநடிக்குந் தோகையர்நாடகமொருசார்,
பூரணபைம்பொற்கும்பமுமொளிகூர் புரிமணித்தீபமுமொருசார், 
வாரணமிவுளிதேர்முதனிரைத்த வாகமுஞ்சேனையுமொருசார்,
நாரணன்வனசபதயுகம்பிரியா நலம்பெறுமாதவரொருசார்.

     (இ - ள்.) தோரணம் - தோரணங்களையுடைய, மஞ்சம் தலம் தொறுஉம்-
மாளிகைகளின் உபரிகையிடங்களிலெல்லாம், நடிக்கும்- நாட்டியஞ்செய்கிற,
தோகையர்-அழகியமகளிர்களுடைய, நாடகம் -நர்த்தனங்கள், ஒரு சார்-
ஒருபக்கத்திலுள்ளன: பைம்பொன்பூரணகும்பம்உம்-பசும்பொன்னாலாகிய
நிறைகுடங்களும், ஒளி கூர் புரி மணி தீபம்உம்-ஒளிமிக்க அழகியஇரத்தின
தீபங்களும், ஒருசார்-ஒருபக்கத்திலுள்ளன: வாரணம் இவுளி தேர் முதல்-யானை
குதிரை தேர்முதலாக, நிரைத்த-அணியணியாகத்தொகுக்கப்பட்ட, வாகம்உம் -
வாகனங்களும், சேனைஉம் - காலாட்சேனையும், ஒருசார்-ஒரு பக்கத்திலுள்ளன:
நாரணன்-திருமாலினுடைய,  வனசம் பத யுகம்- தாமரைமலர்போன்ற
திருவடியிணையை, பிரியா - இடைவிடாது தியானிக்கிற, நலம் பெறு-நன்மையைப்
பெற்ற, மா தவர்-சிறந்த தவத்தையுடைய முனிவர்கள், ஒருசார்-
ஒருபக்கத்திலுள்ளார்கள்;

     தோரணம்-கட்டுவாயில்: மங்களார்த்தமாக மாவிலைமுதலியவற்றாற்
கட்டப்படுவனவுமாம். மஞ்சம் - மேனிலை. 'நாடகம்-கதை தழுவிவருங் கூத்து'
என்பது சிலப்பதிகாரவுரை. பூர்ணகும்பமும், தீபமும் -அஷ்டமங்கலங்களிற்
சேர்ந்தவை. நால்வகைப்படையுள்முந்தினமூன்றும்முதலிற்கூறப்பட்டதனால்.
பின்புசேனையென்றது- பதாதியைக்குறிக்கும்.நாராயண னென்றதிருநாமம்-
நாரஅயநஎனப்பிரிந்து, சிருஷ்டிப்பொருள்களுக்கெல்லாம் இருப்பிடமான
வனென்றும், சிருஷ்டிப்பொருள்களைத் தனக்குஇருப்பிடமாகவுடையவனென்றும்,
பிரளயப்பெருங்கடலைத் தனக்குஇடமாகக்கொண்டவனென்றும்.
மற்றும்பலவாறும்பொருள்படும். வநஜம்-நீரிற்பிறப்பதெனக்காரணப்பொருள்
படுவது: தாமரைக்கும் காரணவிடுகுறி.                            (601)