பெயர் உரியதாதலை, "மீனேறுயர்த்த கொடிவேந்தன்" என்ற சிந்தாமணியாலும் அறிக. 'வானமீன்கொடிபோல் என்ற உவமையால், சிலவாளைமீன்களின் பின்னே சிலவாளைமீன்களாக வரிசையாகச்சென்றமைபெறப்படும். மாலையிற்பயிலும் எனவும் பாடம். (604) 21.- | புரிசையிற்குடுமிதொறுநிரைதொடுத்த பொற்கொடியாடை யினிழலைக், கிரிமிசைப்பறக்குமன்னமென்றெண்ணிக்கிடங்கில்வாழோ திமக்கிளைகள், விரிசிறைப்பறலின் கடுமையாலெய்திமீதெழுமஞ்செனக் கலங்கிப், பரிசயப்படுதண்சததளப்பொகுட்டுப் பார்ப்புறைபள்ளி விட்டகலா. |
(இ-ள்.) புரிசையின்-(அந்நகரத்து) மதில்களின், குடுமிதொறுஉம் - சிகரங்களிலெல்லாம், நிரை தொடுத்த - வரிசையாகக் கட்டப்பட்ட, பொன் கொடி ஆடையின்நிழலை - அழகியகொடிச்சீலைகளின் தோற்றத்தை, கிரிமிசை பறக்கும் அன்னம் என்று எண்ணி-மலைகளின்மேற் பறக்கிற அன்னப்பறவைகளென்று கருதி, கிடங்கில் வாழ் ஓதிமம் கிளைகள்-அகழியில்வாழ்கின்ற அன்னப்பறவைகளின் கூட்டங்கள், விரி சிறை பறலின் கடுமையால் எய்தி-விரிந்த சிறகுகளைக்கொண்டு பறத்தலின் விசையால் எழுந்துமேற்சென்று (அங்கு அக்கொடித்தோற்றத்தைக் கண்டவுடனே), மீது எழும் மஞ்சு என கலங்கி - மலைமீதுஎழுகிற வெண்ணிறமேகமென்றுஎண்ணிக் கலக்கமுற்று, பரிசயம் படு தண் சததளம் பொகுட்டுபார்ப்பு உறை பள்ளி விட்டு அகலா - (தாம்) பழகுதல் பொருந்திய குளிர்ந்ததாமரைமலர்களின் பொகுட்டாகிய தம்குஞ்சுகளிருக்கின்ற சயனத்தைவிட்டு நீங்காவாயின; (எ-று.) அந்நகரத்துமதிற்புறத்திலுள்ள அகழியில் வசிக்கின்ற அன்னப்பறவைகள் அம்மதிலின்சிகரங்களில் அசைந்து விளங்குங்கொடிச்சீலைகளைத் தங்களினமான அன்னப்பறவைகளென்று மாறுபடக்கருதி அவற்றோடு கூடிக்குலாவலா மென்றகருத்தினால் சிறகுகளை அடித்துக்கொண்டு விசையோடு மேலெழுந்தன; அங்ஙனம் சென்று நோக்குகையில் அக்கொடிவரிசையை மேகமென்று மீண்டும் வேறுவகையாக மாறுபடக்கருதி அச்சங்கொண்டு மீண்டு தாமரைப்பொகுட்டில் தங்குகிற தம்குஞ்சுகளை விட்டு நீங்காது காப்பனவாயின வென்பதாம். வெண்ணிறமேகத்தைக் கண்டு அஞ்சி யொடுங்குதல், அன்னத்திற்கு இயல்பு. மயக்கவணி. கொடியாடையின் நிழல் - நீரிற் காணப்படும் கொடிச்சீலையின் பிரதிபிம்பமுமாம்; மதில்மீதுள்ளகொடிச்சீலையின்சாயையை நீரிற்கண்டு அவற்றைமலைமீதுபறக்கும் அன்னங்களின் நிழலென்று கருதின வென்க. பறல்-பறத்தலென்பதன் விகாரம். சிறைப்பாலின் எனவும் பாடம். (605) 22. | கயற்றடஞ்செங்கட்கன்னியர்க்கிந்து காந்தவார் சிலையினாலுயரச், செயற்படுபொருப்பின்சாரலிற்கங்குற் றெண்ணிலாவெறித் தலினுருகி, வியப்பொடுகுதிக்குந்தாரைகொளருவி விழைவுடன்படிவன சகோரம், நயப்புடையன்னச்சேவல்பேடென்று நண்ணலாலுளமிக நாணும். |
|