பக்கம் எண் :

342பாரதம்ஆதி பருவம்

     (இ-ள்.) கயல் தட செம் கண் கன்னியர்க்கு-கயல்மீன்போலப் பிறழ்கிற
பெரியசெவ்வரிபரந்த கண்களையுடைய இளம்பெண்கள் வினையாடுதற்பொருட்டு,
வார்இந்துகாந்தம் சிலையினால் உயர செயல்படு - பெரியசந்திரகாந்தக்கற்களால்
உயரமாகச் செய்யப்பட்ட, பொருப்பின்-செய்குன்றுகளின், சாரலில் - பக்கங்களிலே,
கங்குல் - இராப்பொழுதில், தெள்நிலா எறித்தலின்-தெளிவான சந்திரகாந்தி
வீசுதலினால், உருகி - (அக்கற்கள்) உருக (அவற்றினின்று), வியப்பொடு குதிக்கும்-
(காண்பவர்) அதிசயிக்கும்படியான தன்மையோடு பாய்கிற, தாரை கொள் அருவி -
தாரையாகவுள்ள நீரருவிகளில், விழைவுடன்படிவன - விருப்பத்தோடு
முழுகுகின்றனவான, சகோரம் - சகோரபட்சிகளை, நயப்பு உடை அன்னம்
சேவல் - விருப்பத்தையுடைய ஆணன்னப்பறவைகள், பேடு என்று
நண்ணலால் - (தம்) பேடையாகிய அன்னப்பறவைக ளென்று எண்ணிச்
சமீபித்ததனால், உளம் மிக நாணும் - (அவ்வன்னங்கள்) மனம் மிகவெள்கும்;

     சந்திரகாந்தம் - சந்திரனொளிபட்டதனால் நீரை யுமிழுங் கல்; சகோரம் -
நிலாவை வாயிலேற்று உண்ணும் பறவை. சகோரம் நிலவையுண்டு வாழும் பறவை
யாதலால், நிலாத்தோற்றத்தால் சந்திரகாந்தக் கல்லினின்றுபெருகும்நீரில்
களிப்போடுமூழ்கி விளையாடிக்கொண்டிருந்தன. வெண்ணிறமான அந்நீரில்படிந்து
வெண்ணிறமாகக் காணப்படுதலாலும், நீரில் விளையாடுதலாலும், அவற்றைப்
பெண்ணன்னங்களென்று  ஆணன்னங்கள் மாறுபடக்கருதி ஆதரத்தோடு
அருகில்வந்து தாம் கருதிக் காதலித்த அன்னப்பேடுகளல்லவென்று 
தெரிந்ததனால்,நாணமுற்றன; மயக்கவணி.

23.அரிமணிச்சிலையின்சலாகையால்வட்ட மாகவேயமைத்த
                                  சாலகந்தோறு,
எரிமணிக்குழையார்வதனமண்டலத்திலெழிலுடன்
                            மிளிருமைத்தடங்கண்,
விரிமணிக்கதிரோனளிக்கமுன்களிந்த வெற்
                             பிடைவீழுமாநதியின்,
புரிமணிச்சுழியிற்றுணையொடுமுலாவிப் பொரு
                            வனகயல்களேபோலும்.

     (இ-ள்.) அரிமணி-நீலரத்தினமாகிய, சிலையின்-கல்லினுடைய, சலாகையால்-
சலாகைகளை வைத்து, வட்டம் ஆகவே அமைத்த - வட்டவடிவமாகவே
செய்யப்பட்ட, சாலகம் தோறு-(அந்நகரத்து மாளிகைகளின்) பலகணிகள் தோறும்,
எரிமணி குழையார் வதன மண்டலத்தில்-சொலிக்கிற இரத்தினங்கள் பதித்த
குழையென்னுங் காதணியையுடைய மகளிரதுமுகமண்டலத்திலே, எழிலுடன்மிளிரும்,-
அழகோடு பிறழ்ந்து விளங்குகிற, மை தடகண்-மையிட்ட பெரியகண்கள்,-விரி மணி
கதிரோன் முன் அளிக்க - பரந்த அழகிய கிரணங்களையுடைய சூரியன்
முற்காலத்திற் பெற, களிந்த வெற்பிடை வீழும் - களிந்தமலையினின்று விழுகிற, மா
நதியின்-பெரியயமுநாநதியினது, புறமணிசுழியில்-சுற்றுதலையுடையநீலநிறமுள்ள
சுழியிலே, துணையொடுஉம் உலாவி பொருவன-ஆணும்பெண்ணுமாக
(ஒன்றோடொன்று) மோதி விளையாடுவனவான, கயல்கள்ஏ-கயல்மீன்களையே,
போலும் - ஒக்கும்; (எ-று.)