பக்கம் எண் :

இந்திரப்பிரத்தச் சருக்கம்343

     யமுநாநதியின் நீர்ப்பெருக்குக் கருதிநிறமுடைய தாதலால்,
நீலரத்தினக்கற்கொண்டு வட்டமாக அமைத்த சாளரம் யமுனையின் நீர்ச்சுழி
போலுமெனவும், அச்சாளரத்தில் விளங்கும் மகளிர் கண்ணிணை அச்சுழியில்
விளையாடும் இணைக்கயல் போலு மெனவும் வருணித்தார்: தற்குறிப்பேற்றவணி,
சலாகை-நாராசம். அரிமணி - இந்திரநீலம்: அரி - இந்திரன்.           (607)

24.இனத்தினாலுயர்ந்தவிந்திரபுரியு மிந்திரப்பிரத்தமிரண்டும்,
தனத்தினாலுணர்வாற்கேள்வியாலழகாற்றக்கதொன்றியா
                              தெனத்துலைகொள்,
மனத்தினானிறுக்கவுயர்ந்ததொன்றொன்று மண்மிசை
                                யிருந்ததுமிகவும்,
கனத்தினாலன்றித்தாழுமோயாருங் கண்டதுகேட்ட
                                    தன்றிதுவே.

     (இ-ள்) இனத்தினால்உயர்ந்த - (ஒன்றுக்கு ஒன்று) இனமாய்
(மற்றையெல்லாநகரங்களினுஞ்) சிறந்த, இந்திரபுரிஉம் இந்திரப்பிரத்தம்உம்
இரண்டுஉம்- இந்திரனது அமராவதிநகரமும் இந்த இந்திரப்பிரத்தநகரமும்
ஆகிய இரண்டனுள், தனத்தினால் உணர்வால் கேள்வியால் அழகால் தக்கது
ஒன்று யாது - செல்வம்அறிவு நூற்கேள்வி அழகு என்னும் இவற்றுக்கு
இடமாதலால்மேன்மையுடையதுஎது? என-என்று,  துலைகொள் மனத்தினால்
நிறுக்க-(இந்திரன்) தராசின்தன்மையைக்கொண்டமனத்தினால் நிறுத்துப் பார்க்க,
ஒன்று உயர்ந்தது - (அமராவதியாகிய) ஒரு நகரம் உயர்ந்தது: ஒன்று மண்மிசை
இருந்தது-மற்றொன்றாகியஇந்திரப்பிரத்தநகரம் பூமியில் தங்கியது:  மிகஉம்
கனத்தினால் அன்றி தாழும்ஓ - மிகவும்பாரமுடைமையாலன்றி ஒன்று தாழ்வது
உண்டோ? இது யார்உம் கண்டது - இது எவரும் கண்ணாற்கண்டதே: கேட்டது
அன்று - காதினாற் கேள்வியுற்றதுமாத்திரமன்று;

     பெரிய நகரங்கள் பலவற்றுள்ளும் சிறந்தவையென்று ஓரினப்படுத்தி ஒருங்கு
கூறப்படுகிற அமராவதி இந்திரப்பிரஸ்தம் என்ற இரண்டனுள் மகிமைவாய்ந்தது
எதுவோ என்ற தன் ஐயத்தை அகற்றக்கருதி நடுநிலைமை தவறாத இந்திரன் தன்
மனத்தையே தராசுக்கோலாக நாட்டி அதன் தட்டு இரண்டிலும் இவ்விரண்டு
நகரங்களையும் வைத்துத் தூக்கிப்பார்க்கையில், அமராவதி பெருமைக்குறைவால்
மிகஇலேசுபட்டு வானத்தின்மீது நெடுந்தூரம் உயர, இந்திரப்பிரத்தம்
பெருமைமிகுதியால் அதிககனம் பெற்று நிலத்தில் தாழ்ந்து நின்றதென்க.
இவ்விரண்டனுள் ஒன்று மேலும் ஒன்று கீழுமாக இருத்தலை ஆதாரமாகக்கொண்டு
இக்கற்பனையைக் கூறுகின்றா ராதலால், 'மிகவுங்கனத்தினா லன்றித் தாழுமோ'
என்றார். கனம் குறையக்குறைய உயர்தலும், கனம் அதிகப்பட அதிகப்படத்
தாழ்தலுமாகிய இயல்பைவிளக்கியவாறு. பிரதியக்ஷப்பிரமாணத்தால் தெளியக்கூடியது
இது,  ஆப்த வாக்கியப்பிரமாணங்கொண்டே நம்பவேண்டிய தன்று என்றபடி. 'இது'
என்பதற்கு- மிகவும் கனத்தினாலன்றித் தாழ்தல்எனப்பொருள் கொண்டால், 'யாருங்
கண்டது கேட்டதுஅன்று' என்பதற்கு - (அத்தன்மை) எவரும் கண்டது மன்று
கேட்டது மன்று என்று உரை கூறலாம். இந்திரபுரி, இந்திரப்பிரத்தம் என்றபெயர்