களில் இந்திரனது சம்பந்தத்தின் ஒற்றுமையும், மற்றை நகர மனைத்தினுஞ் சிறந்திருத்தலும் இவ்விரண்டிற்கும் உள்ளதனால், 'இனத்தினாலுயர்ந்த இந்திரபுரியும் இந்திரப்பிரத்தமுமிரண்டும்' என்றார், வசிப்பவரது உணர்வும் கேள்வியும் நகரின்மேல்வைத்துக்கூறப்பட்டன, நிறுக்க என்றவினையைநோக்கி, மனமாகிய துலாக்கோலினால்என்று உருவகமாகப்பெருள் காண்க. இச்செய்யுள், உருவகத்தை அங்கமாகக்கொண்டதற்குறிப்பேற்றவணி. 25. | நிறக்கவல்லிரும்பைச்செம்பொனாம்வண்ண நிகழ்த்திய விரதமேநிகர்ப்பப், பிறக்கமும்வனமுமொழித்தவணமைத்த பெரும்பதிக்கு வமையும்பெறாமல், மறக்கடுங்களிற்றுக்குபேரன்வாழளகை வடக்கிருத்தது நெடுவானில், துறக்கமுமொளித்ததிலங்கையும்வெருவித்தொடுகடற்சுழிப் புகுந்ததுவே. |
(இ-ள்.) வல் இரும்பை - வலிய இரும்பை, நிறக்க செம் பொன் ஆம் வண்ணம்-மாற்றுயர்ந்து சிவந்ததாய் விளங்கச்சிறந்த பொன்னாகும்படி, நிகழ்த்திய- செய்த, இரதம்ஏ நிகர்ப்ப-இரசகுளிகையே போல, வனம்உம் பிறக்கஉம் ஒழித்து அவண் அமைத்த- (விசுவகருமன்) காண்டவவனத்தையும் அதைச்சார்ந்த மலையையும் அழித்து அவ்விடத்தில் தகுதியாக நிருமித்த, பெரும்பதிக்கு - பெரிய அந்தநகரத்துக்கு, உவமைஉம் பெறாமல்-(தான்) ஒரு புடையொப்பும் ஆகமாட்டாமல், மறம் கடு களிறு குபேரன் வாழ் அளகை-வலிமையையுடைய உக்கிரமான மதயானையையுடைய குபேரன் வாழ்கிற அளகாபுரி, வடக்கு இருந்தது-; துறக்கம்உம் - சுவர்க்கலோகமும், நெடுவானில் ஒளித்தது - நெடுந்தூரத்ததான ஆகாயத்தில் மறைந்துவிட்டது; இலங்கைஉம் - இலங்காபுரியும், வெருவி - அஞ்சி, தொடு கடல் சுழி புகுந்தது-தோண்டப்பட்ட கடலினிடை யிடத்தை யடைந்தது; (எ-று.) இயல்பில் வடதிசையில் நெடுந்தூரத்திலுள்ளதான அளகாபுரியையும், வானத்தில்நெடுந்தூரத்துக்கு அப்பாலுள்ள தாய் மனிதர் கண்ணுக்குப்புலனாகாத அமராவதிநகரையும், தென்கடலில் நூறுயோசனைக்கு அப்பாலுள்ளதான லங்காபுரியையும், இந்நகரத்திற்குத் தாம் ஒப்பாகமாட்டாமல் தோற்றுவெள்கி அஞ்சி வடக்கிருத்தலும் வானத்திற்சேர்ந்துவிடுதலும் தென்கடலினி டைவிழுந்திடுதலும் செய்தனவாக வருணித்தார்; ஏதுத்தற்குறிப்பேற்றவணி. வடக்கிருத்தல் என்றதொடர்-வடதிசையிலேதங்குதலென்றபொருளோடு, உயிரைத்துறப்ப தென்றதுணிவுடன் வடதிசைநோக்கித் தருப்பைப்புல்லிற் கிடத்தலாகிய பிராயோபவேசமென்ற பேர் பூண்டஒருவிரதத்தையுங் காட்டவல்லதாதலறிக. இரும்பைப் பொன்னாக்குதல் -இரசவாதமென்னும்வித்தை; ஸ்பர்ஸவேதி யென்னும் மகா மூலிகையின் இரசத்தைஇரும்பின் மேற்பிழிந்தால் அதுபொன்னாகுமென்பர். இரசம்=ரஸம்: சாறு.இரும்பைப்பொன்னாக்கு மிரசம் போல, வனத்தை நகராக்கின விசுவகருமனென்க.பிறக்கம்-நெடுந்தூரத்திலுள்ளாருங் காணும்படி விளங்குவது: மலை, 'வடக்கிரிந்தது' எனவும் பாடம். (609) |