26. | வாவியும்புறவுஞ்சோலையுமலர்ந்த மலர்களுமணிகளின் குழாமும், மேவியெங்கெங்குமயங்கலிற்றத்தம் வேரியும்வாமுந்தூதாப், பூவினஞ்சுரும்பையழைக்கும்வண்பழனப்புதுவளஞ்சுரக்கு நாடனைத்தும், ஓவியங்குறித்துப்பூமகள்வடிவை யொப்பனைசெய்தவா றொக்கும். |
(இ-ள்.) பூ இனம் - பலவகை மலர்களாகிய மகளிர், தம்தம் வேரிஉம் வாசம்உம்தூது ஆ - தம்தமது தேனையும் நறுமணத்தையும் தூதாகக்கொண்டு, (அவற்றால்),சுரும்பை அழைக்கும் - வண்டுகளாகிய தம்கணவரை அழைக்கப்பெற்ற, வண்பழனம்- வளப்பமுள்ள மருதநிலத்தின், புது வளம் - புதுமையான வளப்பங்கள், சுரக்கும் -மேன்மேல் மிகப்பெற்ற, நாடு அனைத்துஉம் அந்நாடுமுழுவதிலும்,-வாவிஉம் -குளங்களும், புறவுஉம் - கொல்லைகளும், சோலைஉம் - சோலைகளும், மலர்ந்தமலர்கள்உம்- மலர்ந்த பூக்களையும், மணிகளின் குழாம்உம் - இரத்தினங்களின்கூட்டத்தையும், மேவி - பொருந்தி, எங்கு எங்குஉம் மயங்கலின் -எல்லாவிடங்களிலுஞ் செறிந்திருத்தலால், (அச்செறிவு), பூமகள்வடிவை ஓவியம்குறித்து ஒப்பனை செய்த ஆறு ஒக்கும்-பூமிதேவியின் வடிவைச் சித்திரமெழுதிஅலங்கரித்த தன்மையைப் போலும்; அந்நாடுமுழுவதிலும், குளங்களும் கொல்லைகளும் சோலைகளும், பலவகைமலர்களையும் பலவகையிரத்தினங்களையும் உடையனவாயிருத்தல், பூமிதேவியின்வடிவத்தைச் சித்திரமெழுதி அலங்கரித்தாற்போலுமென்பதாம்: தற்குறிப்பேற்றவணி. மணிகள், மலையருவியாற் கொணர்ந்து கொழிக்கப்பட்டவை. தூதா அழைக்கும் என்ற சொற்களின்குறிப்பால், பூவினத்தினிடத்து மகளிரினத்தின் தன்மையும், சுரும்பினிடத்து நாயகரின் தன்மையும் ஏற்பட்டன; இது, குறிப்புருவகம். தூதுபோலத் தேனும் மணமும் நெடுந்தூரமளவுஞ் செல்கின்ற வியல்பை யறிக. (610) 27.- பாண்டவர் நகரப்பிரவேசஞ் செய்தல். பரிமள மதுப முரல்பசுந் தொடையற் பாண்டவ ரைவருங் கடவுள் எரிவலம் புரிந்து முறைமுறை வேட்ட வின்னெழி லிளமயிலன்றி வரிசையி னணுகி யுரிமையா லவனி மயிலையு மன்றலெய்தினர்போற் புரிவளை தரளஞ் சொரிபுன லகழிப் புரிசைசூழ் புரங்குடி புகுந்தார். |
(இ-ள்.) பரிமளம்-வாசனையையுடையனவும், மதுபம் முரல் - வண்டுகள் ஒலிக்கப்பெறுவனவும் ஆகிய, பசுந் தொடையல்-பசியபூமாலைகளையணிந்த, பாண்டவர் ஐவர்உம் - பாண்டவர்கள் ஐந்து பேரும், கடவுள் எரி வலம் புரிந்து முறை முறை வேட்ட இன்எழில் இள மயில் அன்றி - தெய்வத்தன்மையையுடைய அக்கினியைப் பிரதட்சிணஞ்செய்து (அக்கினிசாட்சியாக) முறையே தாங்கள் மணஞ்செய்துகொண்ட இனிய அழகையுடைய இளமையானமயில்போலுஞ் சாயலுள்ள திரௌபதியையே யல்லாமல், உரிமையால் அவனி மயிலைஉம் வரிசையின் அணுகி மன்றல் எய்தினர்போல் - உரிமையினால் பூமிதேவியையும் முறையே அடைந்து மணஞ்செய்துகொண்டவர்போல்,-புரி வளை தரளம் சொரி புனல் அகழி புரிசை சூழ்புரம் குடி புகுந்தார் - உட்சுழிதலை |