இருசெவிபடைவீடாக வெம்பிரானளிக்கப்பெற்ற பெருமுனியவர்க்கோர்காதை பெட்புறப்பேசுவானே. |
(இ-ள்.) (இங்ஙனம் வணங்கிவழிபட்ட பாண்டவர்களுடனே), வரம் மிகுகற்பினாள்உம் - மேன்மைமிக்கபதிவிரதா தருமத்தையுடையவளான திரௌபதியும்,மாமிஉம் - (இவளுக்கு) மாமியாரான குந்திதேவியும், வணங்கிநிற்ப -(அம்முனிவனை) நமஸ்கரித்துநிற்க,- சரிகமபதநி பாடல் தண்டு தைவரு செம்கையோன் - சரிகமபதநி என்னும் ஏழுசுரங்களையும் அமைத்துப்பாடுதற்கு உரியவீணாதண்டத்தைத் தடவி இயக்குகின்ற சிவந்த கைகளை யுடையவனும். எம்பிரான்இரு செவி படை வீடு ஆக அளிக்கப்பெற்ற பெருமுனி - நமக்கெல்லாந்தலைவனான திருமால் (தமது) இரண்டு திருச்செவிகளையும் (தனது) இசைப்பாட்டிற்குத் தங்குமிடமாகக்கொடுக்கப்பெற்ற பெருமையுடைய முனிவனுமானநாரதன், அவர்க்கு ஓர் காதை பெட்புஉற பேசுவான் - அவர்கட்கு ஒருகதையைவிருப்பமிகக் கூறுபவனானான்; (எ-று.)- அதனை, மேலிரண்டுகவிகளிற் காண்க. 'ஓர்வார்த்தை' என்றும் பாடம். ஸரிகமபதநி என்பன-ஷட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்யமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்ற ஏழுசுரங்களுக்கும் முறையே உரிய அக்ஷரங்களாம். தண்டு- தண்டமென்ற வடசொல்லின் விகாரம். படைவீடு - சேனை தங்குமிடம்; இங்கு,தங்குமிடமென்ற மாத்திரமாய் நின்றது. 'எம்பிரான்' - சிவபிரானெனினுமாம். (626) 43.-இதுவும் அடுத்த கவியும் - சுந்தோபசுந்தர் வரலாறு. முராரியைமுராரிநாபி முளரிவாழ்முனியைமுக்கட் புராரியைநோக்கிமுன்னாட் புரிபெருந்தவத்தின்மிக்கார் சுராரிகடம்பிற்சுந்தோ பசுந்தரென்றிருவர்தங்கள் திராரியேவலினால்வந்த திலோத்தமைதன்னைக்கண்டார். |
(இ-ள்.) முராரியை - திருமாலையும், முராரி நாபி முளரி வாழ்முனியை - அத்திருமாலின் திருநாபித்தாமரைமலரில் வாழ்கிற பிரமனையும், முக்கண் புராரியை -மூன்றுகண்களையுடையவனான சிவபிரானையும், நோக்கி - குறித்து, முன் நாள் -முற்காலத்தில் [இளமையில்], புரி-செய்த, பெரு தவத்தில் - பெரிய தவத்தில், மிக்கார்-சிறந்தவர்களான, சுராரிகள் தம்மில் சுந்தஉபசுந்தர் என்ற இருவர் - அசுரர்களுள்சுந்தனும் உபசுந்தனு மென்றஇரண்டுபேர்,- தங்கள் திர அரி ஏவலினால்வந்ததிலோத்தமைதன்னை கண்டார் - தங்களுக்குவழிப்பகையாகிய இந்திரனதுகட்டளையினால் (தங்களெதிரில்) வந்த திலோத்தமை யென்பாளை (ஒருசமயத்தில்)பார்த்தார்கள்; (எ-று.) முராரி, புராரி, ஸு ராரி, ஸ்திராரி - தீர்க்கசந்திபெற்ற வட சொற்கள். சுந்தோபசுந்தர் - குணசந்திபெற்ற வடமொழித் தொடர்; பன்மைவிகுதிபெற்ற உயர்திணையும்மைத்தொகை. என்றிருவர் - விகாரம். திலோத்தமை=திலோத்தமா; உலகத்தில் |