பக்கம் எண் :

356பாரதம்ஆதி பருவம்

சென்று அவளுடைய வலக்கையைச் சுந்தனும், இடக்கையை உபசுந்தனுமாகப்
பிடித்துக்கொண்டார்கள். இயல்பில் மிக்ககொழுப்புடைய அவ்விருவரும்
காமக்களிப்புற்றுத் தம்மில்மாறுபட்டு அண்ணன் தம்பியைநோக்கி 'தமையனாகிய'
என்னாற் காதலிக்கப் பட்ட இவள் உனக்குத் தாய்முறையன்றோ? இவளை நீ
விரும்புதல் தகுதியோ?  என்ன, அதற்கு ஏற்பத் தம்பி தமையனைநோக்கி
'தம்பியாகிய என்னாற் காதலிக்கப்பட்ட இவள் உனக்கு மருமகள் முறையன்றோ?
இவளை நீ வீரும்பாலாமோ?' என்று கூறிக் கோபங் கொண்டு தம்கையிலுள்ள
கதாயுதத்தால் ஒருவரை யொருவர் அடித்துக்கொண்டு போர்செய்து இருவரும்
ஒருங்கே ஒருவரால் ஒருவர் அழிந்தனர் எனக் காண்க.

     இவ்வரலாற்றைநாரதமுனிவன் இங்குப் பாண்டவர்க்கு எடுத்துக்கூறினது,
திரௌபதியொருத்தினிடம் காதல்கொள்ளுகிற பாண்டவரைவரும் ஒருவர்க்கொருவர்
எக்காலத்தும் மனவொற்றுமை கெடாதிருக்கும்படி ஒருநியமத்தைச்
செய்துகொள்ளவாகும்.

45.-இரண்டுகவிகள்-ஒருதொடர்: நாரதன் திரௌபதி
சம்பந்தமாகப் பாண்டவர்க்குக் கூறிய ஒருநியமம்.

நீவிரும்விதியால்வேட்ட நேயமுண்டேனுமன்றல்
ஓவியமனையாடன்னை யோரொராண்டொருவராக
மேவினிர்புரியுமங்கன் மேவுநாளேனையோரிக்
காவியங்கண்ணினாளைக் கண்ணுறல்கடனதன்றே.

     (இ-ள்) நீவிர்-நீங்கள்ஐவிரும், உம் விதியால்-உங்கள் முற்பிறப்பின் வினையால்,
வேட்ட-(ஒருங்கு) விவாகஞ்செய்துகொண்ட, நேயம்-காதல், உண்டு ஏன்உம் -
(திரௌபதியொருத்தியினிடத்தே) உள்ளதானாலும், ஓவியம் அனையாள்
தன்னை-சித்திரத்திலெழுதிய பாவைபோல மிக்க அழகையுடையளான
அத்திரௌபதியை, ஓர் ஓர் ஆண்டு ஒருவர் ஆக மேவினிர் மன்றல் புரியும்.
ஒவ்வொரு வருடத்துக்கு (உங்களில்) ஒவ்வொருவராக விரும்பிக் கூடி வாழுங்கள்:
அங்கன் மேவும் நாள்-அவ்வாறு (ஒருத்தரோடு) சேர்ந்திருக்கும்போழுது,
ஏனையோர்-மற்றைநால்வரும், இ காவி அம் கண்ணினாளை
கண்ணுறல்-கருங்குவளைமலர்போன்ற அழகிய கண்களையுடைய இவளைக்
காணுதல், கடனது அன்று-முறைமை யுடையதன்று; (எ-று.)               (629)

46. எண்ணுறக்காணிலோராறிருதுவும்வேடமாறிப்
புண்ணியப்புனல்களாடப்போவதேயுறுதியொன்று
வண்ணவிற்றிறலினார்க்கு வாய்மலர்ந்தருளிமீண்டு
பண்ணுடைக்கீதநாத பண்டிதன்விசும்பிற்போனான்.

     (இ-ள்) எண் உற மனம் பொருந்த, காணில்-(அப்பொழுது இவளைக்)
கண்டால், (கண்டவர்), ஓர் ஆறுஇருதுஉம் - ஆறுஇருது (ஒரு வருஷம்) அளவும்,
வேடம் மாறி-வடிவம் மாறி, புண்ணியம் புனல்கள் ஆடபோவதுஏ -
(அத்தோஷத்துக்குப் பரிகாரமாகப் புண்ணிய தீர்த்தங்களில் நீராடச் செல்லுதலே,
உறுதி - நன்மை