பக்கம் எண் :

357

யைத்தருவது, என்று-,வண்ணம் வில் திறலினார்க்கு வாய்மலர்ந்து அருளி-அழகிய
வில்லின் வலிமையையுடைய அப்பாண்டவரகட்குச் சொல்லியருளி, மீண்டு-பின்பு,
பண் உடை கீதம் நாத பண்டி தன் - சுரங்களையுடைய பாட்டினிசையில்
வல்லவனான நாரத முனிவன், விசும்பின் போனான்-ஆகாய மார்க்கமாகச்
சென்றான்; (எ-று.)

     ருது - வடசொல்; இரண்டு மாதங் கொண்ட பொழுது. அது-ஆறாகும்;
அவற்றிற்கு முறையே, சித்திரை முதல் இவ்விரண்டு மாதங்கொள்க. அவை முறையே
இளவேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பனி, பின்பனி எனப்படும்.     (630)

47.-அங்ஙனம் முறைப்படி ஐவரும் மனைவியும் வாழ்தல்.

சொன்னநாட் டொடங்கி யைந்து சூரருந் தேவர் நாளுக்கு
இன்னநா ளவதி யென்றே யெண்ணியங் கிரதி கேள்வன்
அன்னநாண் மலர்ப்பைந் தாமத் தறன்மக னாதி யாக
மின்னான டன்னை வேட்ட முறையினான் மேவி னாரே.

    (இ-ள்)சொன்ன நாள் தொடங்கி - (இந்த நாரத மாமுனிவன்) சொன்ன தினம்
முதலாக, ஐந்து சூரர்உம்-(அந்த) ஐந்துவீரர்களும், தேவர்களுக்குஒருநாளாகிய
மானுடவருஷம்ஒன்றுக்கு இன்னநாள் எல்லை யென்று அறிந்து, அங்கு -
அவ்விடத்தில் (இந்திரப்பிரத்தத்தில்), இரதிகேள்வன் அன்ன நாள் மலர் பைந்
தாமத்து அறன் மகன் ஆதி ஆக - ரதீ தேவிக்குக் கணவனான மன்மதன் போன்ற
(மிக்கஅழகையும்) அன்றுமலர்ந்த (புதிய) மலர்களாலாகிய பசிய மாலையையு முடைய
தருமபுத்திரன் முதலாக, மின் அனாள்தன்னை வேட்ட முறையினால் மேவினார்
-மின்னல்போன்ற திரௌபதியை (த் தாம்) விவாகஞ்செய்த முறைப்படியே
கூடிவாழ்ந்தார்கள்.

இந்திரப்பிரத்தச்சருக்கம் முற்றிற்று.

------

ஏழாவது

அருச்சுனன் றீர்த்தயாத்திரைச் சருக்கம்.

    அருச்சுனன்தீர்த்தயாத்திரைவரலாற்றைக் கூறுஞ்சருக்கமென்று பொருள்.
தீர்த்த யாத்திரை - புண்ய தீர்த்தங்களில் நீராடுதலை உத்தேசித்துப் பிரயாணஞ்
செய்தல்.

    இச்சருக்கத்திலும்* கடவுள்வாழ்த்து காணப்படவில்லை.


*    "அருமாமறையுணரா தலமருசேவடியருளால்
      இருமாநிலமிசைதோய்வுறவியலானிரைவழிபோய்த்
      திருமாநிகரிடைமாதர்கடிகழ்வேல்விழிமகிழ
      வருமாதவன் விளையாடலைமறவா தெனதுளமே"

என்ற ஒருசெய்யுள் இச்சருக்கத்துக்கடவுள்வாழ்த்தாகச் சில பிரதிகளிற்
காணப்படுகிறது.