பக்கம் எண் :

அருச்சுனன்றீர்த்தயாத்திரைச் சருக்கம்363

நாகாதிபன்வண்சாரலி னன்னீர்கள்படிந்து
நாகாதிபன்விடுமும்மதநாறுந்திசைபுக்கான்.

     (இ-ள்.) நாக அதிபன் மகன் -சுவர்க்கலோகத்துக்குத் தலைவனான
இந்திரனதுமகனாகிய அருச்சுனன், நாக அதிபன் மகள் மைந்தன் நலம் கண்டு
மகிழ்ந்து-ஒருநாகராசனது மகளான உலூபியிடத்துத் தோன்றிய அந்தப்புத்திரனது
அழகைக் கண்டுசந்தோஷித்து, மீளஉம் நதியின் வழி வந்து- மீண்டு பிலவழியாய்க்
கங்காநதிக்குவந்து, நாக அதிபன் வண் சாரலின் நல்நீர்கள் படிந்து-மலையரசனாகிய
இமயமலையினது அழகிய சாரலிலுள்ள சிறந்த புண்ணிய தீர்த்தங்களில் நீராடி,
(அவ்வடதிசையினின்று), நாக அதிபன் விடு மும்மதம் நாறும் திசை புக்கான் -
யானைகளுக்குத் தலைவனான ஐராவதமென்னும்யானை சொரிகிற மூன்றுவகை
மதஜலங்கள் மணம்வீசப்பெற்ற கிழக்குத்திசையையடைந்தான்;

     கிழக்குத்திசையென்ற பொருளை 'நாகாதிபன்விடுமும்மத நாறுந்திசை'
எனவேறுவகையாற் கூறினது - பிறதினவிற்சியென்னும் பொருளணி; இச்செய்யுளின்
அடிதோறும் 'நாக' என்ற சொல் வெவ்வேறுபொருளில்வந்தது - யமகமென்னுஞ்
சொல்லணி. நாக மென்ற வடச்சொல் - மலையென்ற பொருளில் சலியாதது என்றும்,
யானை யென்ற பொருளில் நகத்தில் [மலையில்] வாழ்வது என்றுங்
காரணப்பொருள்படும்.                                          (641)

11.- யமுனை முதலிய தீர்த்தங்களில் நீராடுதல்.

நெளிந்தாடரவணையைய னிறம்போலநிறக்கும்
களிந்தாநதிமுதலாகிய கடவுண்ணதிபலவும்
முளிந்தாரழலெழுகானெறி முக்கோலினராகித்
தெளிந்தாறியபெரியோரொடு சென்றாடினனன்றே.

     (இ-ள்.) முக்கோலினர் ஆகி - திரிதண்டத்தை யேந்தியவர்களாய்,
தெளிந்து-(தத்துவஞானத்தால்) மனந்தெளிந்து, ஆறிய- (சாந்தகுணத்தால்)
அடங்கியிருக்கிற, பெரியேரொடு- சிறந்த முனிவர்களுடனே, முளிந்து ஆர் அழல்
எழு கான் நெறி சென்று - கொதித்துவளர்கிற நெருப்பு ஓங்கியெரியப்பெற்ற
[கொடிய]காட்டு வழியிலே போய், நெளிந்து ஆடு அரவு அணை ஐயன் நிறம்
போல நிறக்கும்- உடல்நெளிந்து படமெடுத்தாடுந் தன்மையுள்ள ஆதிசேஷனைச்
சயனமாகக்கொண்ட திருமாலினது திருநிறம்போலக் கருநிறங்கொண்டுள்ள, களிந்தா
நதி முதல் ஆகிய-யமுனாநதி முதலிய, கடவுள் நதி பலஉம் - தெய்வத்தன்மையுள்ள
நதிகள் பலவற்றிலும், ஆடினன்- நீராடினான்; (எ-று.)

     யமுனை, களிந்த மென்னும் மலையினின்றுந் தோன்றிக் காளிந்தி யென
ஒருபெயர் பெறுதலால், 'களிந்தாநதி' எனப்பட்டது. 'முளிந்தாரழல்' என்றது-
காட்டுத்தீயை; இதனால், அக்காட்டின் செல்லுதற்கு அருமை கூறியவாறு.
திரிதண்டம்-மூன்றுகோல் ஒன்றாகச் சேர்த்துக்கட்டப்பட்டது, இதுமுதல் 35-ஆம்
பாடல்வரையிலுள்ள தலங்கள் பாலபாரதத்துக் கூறப்படவில்லை, அன்றே=ஈற்றசை.
                                                               (642)