பக்கம் எண் :

அருச்சுனன்றீர்த்தயாத்திரைச் சருக்கம்367

புண்ணியகோடி விமானத்தில் தேவராசனான திருமால் பிரசன்னனாயின
னென்றும்,தெய்வத்தச்சரில் ஒருவனான மயன் பிரமன் கட்டளையால் அங்கு
எம்பெருமானுக்குத்திருக்கோயில் கட்டியமைத்தன னென்றும் அறிக. அயன் -
அஜன்என்றவடசொல்லின்திரிபு. ஹஸ்திகிரி - வடசொற்கள். இந்திரனது
யானையாகியஐராவதம் நெடுநாள் தவஞ்செய்து மலைவடிவங்கொண்டு
எம்பெருமானைத்தரித்தலால்அம்மலைக்கு 'ஹஸ்திகிரி' என்று பெயராயிற்றென்றும்,
கசேந்திராழ்வான் பூசித்துப்பேறுபெற்றமலையாதலால் அப்பெயர் நிகழ்ந்ததென்றுங்
காரணங் கூறுவர்; ஹஸ்தி -யானை.

     மாநீழலின்வைகெண்புயனார் - ஏகாம்ரநாதஸ்வாமி. காஞ்சீபுரத்தில்
வேதவடிவமான ஒருமாமரத்தின்கீழ்ச் சிவபிரான் சிவலிங்கவடிவமாய் எழுந்தருளி
யிருக்கின்றன னென்க. இது, பஞ்ச சிவலிங்க ஸ்தானங்களுள் பிருதிவிலிங்க
ஸ்தாந்ம்.நதியேழ்- கம்பை, பம்பை, மஞ்சனி, பிச்சி, கலிச்சி, மண்ணி, வெஃகா
என்பன.                                                    (645)

15.-திருவண்ணாமலையைத் தொழுதல்.

பெற்றாள்சகதண்டங்க ளனைத்தும்மவைபெற்றும்
முற்றாமுகில்முலையாளொடு முக்கண்ணர்விரும்பும்
பற்றாமெனமிக்கோரிகழ் பற்றொன்றினுமுண்மை
கற்றார்தொழுமருணாசல மன்போடுகைதொழுதான்.

     (இ-ள்.) சகத் அண்டங்கள் அனைத்துஉம் பெற்றாள் - உலக வுருண்டைக
ளெல்லாவற்றையும் பெற்றவளும், அவை பெற்று உம் முற்றா முகிழ் முலையாளொடு
- அவற்றையெல்லாம் பெற்றும் முதிராத அரும்புபோன்ற [இளமை மாறாத]
தனங்களையுடைய மங்கையுமாகிய உமாதேவியுடனே, முக்கண்ணர் -
மூன்றுதிருக்கண்களையுடையவரான சிவபிரான், விரும்பும் - திருவுள்ளமுவந்து
எழுந்தருளியிருக்கிற, பற்று ஆம் - ஸ்தலமாகும் (இது), என - என்ற காரணத்தால்,
உண்மை கற்றார் - மெய்ப்பொருளறிந்த ஞானிகள், மிக்கோர் இகழ் பற்று
ஒன்றின்உம்- (தக்கதன்றென்று) மேலோர் இகழ்கிற இவ்வுலகப்பற்று
பொருந்தியகாலத்திலும்,தொழும் - வணங்கப்பெற்ற, அருணாசலம் -
திருவண்ணாமலையை, அன்போடுகைதொழுதான் - பக்தியுடன் கைகூப்பி
வணங்கினான்; (எ-று.)- இத்தலத்துச்சிவபிரான் திருநாமம் - அருணாசலேசுவரர்;
அம்பிகை திருநாமம் -உண்ணாமுலையம்மை.

     ஜகதண்டம் - அண்டகோளம். சிவபிரான் தன்னுடைய பராசக்தியான
அம்பிகையினது உதவியைக்கொண்டே பிரபஞ்சங்களைப் படைத்தருளுதலாலும்,
இச்சாமாத்திரத்தால் அவையனைத்தும் உண்டாதல் பற்றி அவற்றைப் பெற்றதனாற்
கன்னித்தன்மை அம்பிகைக்கு மாறாததனாலும், 'பெற்றாள்சக தண்டங்களனைத்தும்
அவை பெற்றும் முற்றாமுகிழ் முலையாள்' என்றார்; இது முரண்விளைந்தழிவணி.
'முக்கண்ணன்' என்றும் பாடம்.

     உலகப்பொருட்பற்று முத்திபெறுதற்குத் தடையாதல்பற்றி
ஒழிக்கத்தக்கதாதலால் 'மிக்கோரிகழ்பற்று' எனப்பட்டது. பற்று ஒன்றினுந்
தொழுதலாவது - பிரபஞ்சசம்பந்தமான உண்ணல்,