ஆவணம் - உரிமைப்பத்திரம். ஆகமம் -ஆதிகாலத்தில் சிவபிரானது ஐந்து திருமுகங்களினின்று தோன்றியவையும், அச்சிவபிரானைப்பூசித்தல் முதலியவைகளை விவரமாகக்கூறுபவையுமான காமிகம் முதலிய இருபத்தெட்டு நூல்கள். சிவபிரானது பராக்கிரமம் விளங்கும் இடமான எட்டுத் தலங்கள் அட்டவீரட்ட மென்றும், அட்டவீரட்டான மென்றும் பெயர் பெறும். வீரட்டம், வீரட்டானம்=வீரஸ்தாநம். அவற்றில் திருவதிகை திரிபுரத்தையெரித்த தலம்; (திருநாவுக்கரசு நாயனாரைச் சூலைநோய் தவிர்த்து ஆட்கொண்ட தலம் இதுவே.) "பூமன்சிரங் கண்டியந்தகன் கோவல் புரமதிகை, மாமன் பறியல் சலந்தரன் விற்குடி மா வழுவூர், காமன் குறுக்கையமன்கடவூர் இந்தக்காசினியில், தேமன்னுகொன்றையுந் திங்களுஞ் சூடி தன்சேவகமே" என்றதனால் அட்டவீரட்டத்தின் தன்மை யறிக. ஆகமம், நேமி, அஹீந்த்ரபுரம் - வடசொற்கள். அஹி-நாகங்களுக்கு, இந்திரன் - தலைவனான ஆதிசேடன்: ஆதியில் ஆதிசேடனால் நிருமிக்கப்பட்டதால், இவ்வூர்க்கு அகீந்திரபுரமென்று பெயர்; இது, கருடநதியின் கரையது; விஷ்ணுதலம். சுந்தரமூர்த்திநாயனாரென்ற நம்பியாரூரர், புத்தூரிலிருக்கிற சடங்கவி சிவாசாரியருடைய புத்திரியை விவாகஞ்செய்து கொள்ளுஞ் சமயத்தில், சிவபிரான் அவரைப் பிரபஞ்சவாழ்க்கையில்மயங்க விடாமல் தடுத்து ஆட்கொள்ளும் பொருட்டுஅவர் தமக்குப் பரம்பரையாக அடிமையென ஓர் அடிமையோலையைக் கற்பித்துக்கொண்டு ஒருகிழப்பிராமணவடிவத்தோடு அவ்விடத்தில் எழுந்தருளி விவாகத்தைத்தடுத்து 'இந்த நம்பியாரூரன் எனக்கு அடியவன்' என்று வழக்குக் கூறிஅதற்கு ஆதாரமாக நம்யாரூரருடைய பாட்டனார் தமக்கு எழுதித்தந்த அடிமையோலையின்படி எழுதிய பிரதியோலையென்று ஓர் ஓலையை அவ்விவாகசபையார் முன்னிலையிற்காட்டி மெய்ப்பிக்கத் தொடங்கும்போது, அவ்வோலையை அந்த ஆரூரர் பறித்துக் கிழித்துவிட, பின்பு சிவவேதியர் வாதிட்டுஆதியிலெழுதிய மூலவோலையைக் காட்டிச் சாதிப்பதாகச்சொல்லி அவரைத்திருவெண்ணெய்நல்லூர்க்கு அழைத்துக்கொண்டுபோய் அங்கு உள்ள அந்தணர்சபைமுன் மூல வோலையைக் காட்ட, அதில், 'திருநாவலூரிலிருக்கின்ற ஆதிசைவனாகிய ஆரூரனென்கிற நான், 'திருவெண்ணெய்நல்லூரிலிருக்கிற பித்தனுக்குப்பரம்பரைத்தொண்டு செய்வதற்கு உள்ளும்புறமும் ஒப்ப உடன்பட்டு எழுதிக் கொடுத்தேன்: இப்படிக்கு ஆரூரன்' என்று எழுதியிருந்ததை வாசித்துப் பார்த்த அவ்வந்தணர்கள், அதில் இட்ட கையெழுத்து அவர் பாட்டனாரின் கையெழுத்தே யென்றும் அதிலிருந்த சாட்சிகளின் கையெழுத்துக்களும் சரியானவையேயென்றும் நிச்சயித்து, 'இப்பித்தனுக்கு இவ்வாரூரன் அடிமைசெய்வதேகடமை ' என்றுமுடிவு செய்தபின், கிழவந்தணரை நோக்கி 'இவ்வூரில் உமது இருப்பு எங்கே? ' என்று வினாவ, பிராமணவடிவங்கொண்ட கடவுள் 'காட்டுகிறேன, வாருங்கள்' என்று சொல்லி, சுந்தரமூர்த்தியும் அந்தணர்களும்பின்னே வர, தாம் அவ்வூரிலிருக்கின்ற திருவருட்டுறை யென்னும் திருக்கோயிலுட்புக்கு மறைந்தருள, அனைவரும் |