பக்கம் எண் :

அருச்சுனன்றீர்த்தயாத்திரைச் சருக்கம்377

                                      போந்து,
மைதவழ்தன்றடங்கோயிலவரோதமனைப்படப்பை வைத்த
                                      காவில்,
கைதவர்கோன்மற்றவர்க்குப்போனகஞ்செய்தருந்துமிடங்கற்
                                     பித்தானே.

     (இ-ள்.) வெய்தின் - விரைவாக [அல்லது கடுமையாக], மகபதி முடியில்
வளைஎறிந்து - (உக்கிரகுமாரபாண்டியன்) இந்திரனுடைய முடியிலே வளை
யென்னும்ஆயுதத்தை வீசி, (அதனால் அவனை மகுடபங்கப்படுத்து வென்றது),
மீண்ட நாள்-(தனது நகரத்துக்குத்) திரும்பியகாலத்தில், விண்ணின் மாதர் கொய்து
மலர்தொலையாத குளிர் தருக்கள் ஒரு கோடி கொண்டு போந்து-தேவ மகளிர்
(பூக்களைக்) கொய்தும் பூக்கள் குறைவுபடாத [மேன்மேற் பூக்கும் மிக்கமலர்களை
யுடைய] குளிர்ந்த (கற்பகம் முதலிய) மிகப் பல தேவதருக்களை (ச்
சுவர்க்கலோகத்திலிருந்து) பெயர்த்துக் கொண்டுவந்து, மை தவழ் தன் தட
கோயில்அவரோதம் மனை படப்பை வைத்த - (மிக்க உயர்ச்சியால்) மேகங்கள்
தவழப்பெற்றதனது பெரிய அரண்மனையின் அந்தப்புரத்துத்தோட்டக்கூறாக
வைக்கப்பெற்றதான,காவில்-சோலையிலே, கைதவர் கோன் - பாண்டியர்
தலைவனான சித்திரவாகனன், அவர்க்கு - அந்த அருச்சுனன் முதலானவர்க்கு,
போனகம் செய்து அருந்தும் இடம்கற்பித்தான் - உணவுசித்தஞ்செய்து
உண்ணுமிடத்தை நியமித்தான்; (எ-று.)

     மலயத்துவசபாண்டியனது மகளாகிய தடாதகைப்பிராட்டியைச்
சுந்தரபாண்டியவடிவாகி மணம்புரிந்துகொண்ட சிவபெருமான் அவளிடந் தனக்குப்
பிறந்த குமாரனாகிய உக்கிரபாண்டியனுக்கு முடிசூட்டி அவனுக்குப் பகையாகும்
கடலையும் இந்திரனையும் மேருமலையையும் முறையே வெல்லுமாறு அவனுக்கு
வேலும் வளையும் செண்டும் அளித்துப்போயினன்; பின்பு
உக்கிரபாண்டியன்ஒருகாலத்தில்தன் நாட்டில்மழை பொழியவில்லையென்ற
காரணத்தாற்கோபங் கொண்டு, பொதியமலையில் மேய்ந்திருந்த மேகங்களைப்
பிடித்துத்தளைசெய்து சிறையி லிட, அதனையறிந்த இந்திரன் எதிர்த்து வந்து
கொடும்போர்புரிய, அப்போரிற்பாண்டியன் தன்கையிலிருந்த வளையைச் சுழற்றி
இந்திரன்மேல்வீச, அது இந்திரனுடைய வச்சிராயுதத்தை வீழ்த்தி அவனது
கீரிடத்தைக்கீழேதள்ளிச் சிதைக்க இந்திரன் அஞ்சித் தோற்றோடினனென்பது,
இங்குக்குறித்தகதை. அங்ஙனம் அவன் இந்திரனைவென்ற நாளில் இந்திரனது
செல்வமானகற்பகம் முதலிய  தேவதருக்களைத் தேவலோகத்தினின்று
வலியக்கவர்ந்து தனதுநகரத்து அரண்மனையைச்சார்ந்த பூஞ்சோலையில்
நாட்டினனென்பதை, கண்ணன் இந்திரனைவென்றுபாரிசாத தருவைச்
சுவர்க்கத்தினின்றுவலியக்கொணர்ந்து துவாரகையிற்சத்தியபாமை
வீட்டுப்புறங்கடைத் தோட்டத்தில்நாட்டினமைபோலக்கொள்க.

     மகபதி -வடசொல்: யாகங்கட்குத் தலைவன்; (நூறு அசுவமேத) யாகஞ்
செய்துஇந்திரபதவிபெற்றவன். 'கோயில்வரூத மதனொருமருங்கு' எனவும் பாடம்:
வரூதம் -தங்குமிடம். கை தவர் - பாண்டியர். மற்று, ஏ - அசைகள்.    (654)