பக்கம் எண் :

378பாரதம்ஆதி பருவம்

24.-பாண்டியனது மகள் அச்சோலையில் விளையாடவருதல்.

வேதியரொடக்காவிலிளைப்பாறி யிருந்தளவின்மின்குழாம்போல்
தாதியருஞ்சேடியருந்தற்சூழச்சிலைமதனன்றனிசேவிக்கச்
சோதியரிச்சிலம்பரற்றத் துணைநெடுங்கண் செவியளப்பத்
                                 தொடித்
[தோள்வீசி
ஆதியரவிந்தையெனநிருபன்மகள் விளையாடற்காங்குவந்தாள்.

     (இ-ள்.) வேதியரொடு அ காவில் இளைப்பு ஆறி இருந்த அளவில்-
(விருந்துண்ட அருச்சுனன்) பிராமணர்களுடன் அந்தச்சோலையில் இளைப்புத்
தணிந்துகொண்டிருந்த சமயத்தில்,- நிருபன் மகள் - பாண்டியராசனுடையபெண்,
மின்குழாம்போல் தாதியர் உம் சேடியர்உம் தன்சூழ - மின்னற்கூட்டம்போல
அடிமைப்பெண்களும் தோழிப்பெண்களும் தன்னைச் சூழ்ந்து வரவும், சிலைமதனன்
தனி சேவிக்க-(கரும்பு) வில்லையுடைய மன்மதன் தனியே வழிபடவும், சோதி அரி
சிலம்பு அரற்ற - ஒளியையும் பரலையுமுடையசிலம் பென்னுங்காலணிகள் ஒலிக்கவும்,
துணைநெடுங்கண்செவி அளப்ப - (வேறுஒப்புமைஇல்லாமல்) ஒன்றோடொன்றுஒத்த
நீண்டகண்கள் காதுகளை யளாவவும், தொடி தோள் வீசி -
தொடியென்னும்வளையலை யணிந்த கைகளை வீசிக்கொண்டு, ஆதி அரவிந்தை
என- மேன்மையையுடைய திருமகள்போல, விளையாடற்கு ஆங்குவந்தாள் -
விளையாடும்பொருட்டு அவ்விடத்திற்கு வந்தாள்; (எ-று.)

     மிக்க அழகும் உரிய பருவமும்பெற்றுக் கண்டவர்கண்கவர்ந்து அவர்கட்குக்
காதல்விளைக்குந் தன்மையிற் சிறத்தலால், அவளைக் காமக்கடவுள் வழிபடுவ
னென்க. அரி - சிலம்பின் பருக்கைக்கல். அரிச்சிலம்பு - தவளையினொலிபோன்ற
ஒலியையுடைய சிலம்பு எனினுமாம். சீவகசிந்தாமணியில் "வஞ்சியிடைநுடங்க மயில்
கைவீசி நடந்ததே" என்றாற்போல 'தொடித்தோள் வீசி வந்தாள்' என்றார்;
அங்குநச்சினார்க்கினியர் 'கைவீசியென்று வருந்தாமைகூறினார்' என்றதை உணர்க.
அரவிந்தம் - தாமரை: அரவிந்தை - தாமரை மலரில் வாழ்பவள். சிந்தாமணியில்
"தாமரைத்திருமகளிவளென" என்றவிடத்துநச்சினார்க்கினியர் 'திருஉவமம்-வடிவிற்கும்,
நல்வினையுடையோனிடத்து ஏகுந் துணையும் பொதுவாயிருத்தற்கும்' என்றார்.
பாண்டியன்மகள்பெயர், சித்திராங்கதை யென்பது.                       (655)

25.-அருச்சுனன் அவளைக்கண்டு பெருங்காதல் கொள்ளுதல்.

பச்சென்றதிருநிறமுஞ்சேயிதழும் வெண்ணகையும்பார்வையென்னும்
நச்சம்புமமுதூறநவிற்றுகின்ற மடமொழியு நாணும்பூணும்
கச்சின்கணடங்காதகனதனமு நுண்ணிடையுங்கண்டுசோர்ந்து[றான.்
பிச்சன்போலாயினனப்பெண்கொடிமெய்ந் நலமுழுதும் பெறுவானின்

     (இ-ள்.) அ பெண் கொடி மெய் நலம் முழுதுஉம் பெறுவான் நின்றான் -
அந்தப்பூங்கொடிபோன்ற பெண்ணினது உடம்பைத் தழுவுதலாலாகும் இன்பம்
முழுவதையும் இனிப் பெறுபவனாய் நின்றவனான அருச்சுனனானவன்,-
(அவளுடைய), பச்சென்ற திரு நிறம்உம் - பசுமையான அழகிய நிறத்தையும், சேய்
இதழ்