பொன்னுருவமெனமலர்ந்துபொலிந்ததொரு சண்பகத்தின்பூந் தண்ணீழன், மின்னுருவநுண்ணிடையாள்விழிகளிக்கும் படிநின்றான்வீரரேறே. |
(இ-ள்.) முகில் வாகன் திரு மதலை - மேகத்தை வாகனமாகவுடையவனான
இந்திரனுடைய சிறந்தகுமாரனும், வீரர் ஏறு - வீரர்கட்குச் சிங்கம் போன்றவனுமான
அருச்சுனன், மோகி ஆகி-(அச்சித்திராங்கதையினிடம்) மோகங்கொண்டவனாய்,
முன்உருவம்தனை மாற்றி- முன்பு தான் கொண்டுள்ள தவவேடத்தையொழித்து,
தன்உருவம்தனை கொண்டு - தனது நிஜவடிவத்தைக்கொண்டு, சாமனில்உம்
காமனில்உம் தயங்கும் மெய்யோன்-சாமனைக்காட்டிலும் (அவனது தமையனான)
மன்மதனைக் காட்டிலும் அழகியதாய் விளங்குகிற வடிவத்தை யுடையவனாய்,
பொன்உருவம் என மலர்ந்து பொலிந்தது ஒரு சண்பகத்தின் பூ தண்நீழல்-
பொன்னின்வடிவம்போல மலர்ந்துவிளங்குகிற ஒருசண்பகமரத்தினது அழகிய
குளிர்ந்த நிழலில், மின் உருவம் நுண் இடையாள் விழி களிக்கும்படி நின்றான் -
மின்னலின்வடிவம்போன்ற நுண்ணிய இடையை யுடையவளான அவள்
(தன்னைக்கண்டு) கண்கள் களிக்கும்படி நின்றான்;
மோஹம் - ஆசைமயக்கம்; அதனையுடையவன், மோஹீ: வடசொல்.
சிந்தாமணியில் "காமனுஞ் சாமனு மென்னுங் காட்சியே" என்றவிடத்து
நச்சினார்க்கினியர் 'சாமான், காமன் தம்பி' என்றதை உணர்க. (658)
28.-சித்திராங்கதை தனிப்பட்டு அருச்சுனனைக் காணுதல்.
வண்டானந்திரிதடத்துவரிவண்டினினம்பாட மயில்களாடத், தண்டார்மெய்க்கிளிக்கூட்டஞ்சான்றோர்களுரைபயிற்றத் தமிழ்கண்மூன்றும், கொண்டாடியிளம்பூவைக்குழாந்தலைசாய்த்துளமுருகுங் குன்றினாங்கண், கண்டாளக்குமரனைத்தங்கொடிக்கயலைப் புறங்காணுங் கண்ணினாளே. |
(இ-ள்.) வண்டானம் திரி தடத்து-வண்டானமென்னும் ஒரு சாதி நாரைகள்
(நீர்வள மிகுதியால்) திரியப்பெற்றபக்கங்களில், வரி வண்டின் இனம்பாட-
உடற்புள்ளிகளையுடைய வண்டுகளின் கூட்டம் பாட, மயில்கள் ஆட-மயில்கள்
கூத்தாட, தண் தார் மெய் கிளி கூட்டம் சான்றோர்கள் உரை பயிற்ற -
குளிர்ச்சியான[கண்ணுக்குஇனிய] ஆரம்போன்றகழுத்தினிரேகையுள்ள
உடம்பையுடைய கிளிகளின்கூட்டம் தண் தமிழ்ச் சான்றோர்களான சங்கப்
புலவர் முதலியோருடையசொற்களைப் பழகிச்சொல்ல, இளம் பூவை குழாம்
தமிழ்கள்மூன்றுஉம்கொண்டாடிதலை சாய்த்துஉளம் உருகும் - இளமையான
நாகணவாய்ப்பறவைகளின் கூட்டம் அந்த மூவகைத்தமிழையுங்
கொண்டாடித்தலையைச்சாய்த்துமனமுருகப் பெற்ற, குன்றின் - அந்தச்செய்குன்றில்,
ஆங்கண் - அவ்விடத்தில் [சண்பகநிழலில்], தம்கொடி கயலை புறங்காணும்
கண்ணினாள்-தங்கள்கொடியாகியகயல்மீனைவென்று முதுகுகாணுங்கண்களையுடைய
அச்சித்திராங்கதை, அ குமரனைகண்டாள்-இளவீரனான அவ்வருச்சுனனைக்
கண்டான்; (எ-று.)