பக்கம் எண் :

அருச்சுனன்றீர்த்தயாத்திரைச் சருக்கம்383

கொண்டு அமைத்துச்செய்த ஐவகைமெத்தை; இனி, வேறுவகையும் கூறுப: இவற்றை
ஒன்றன்மேலொன்றாக அடுக்கி அமைத்தல், மரபு. தவிர்கென-தொகுத்தல். விரஹம்-
பிரிவு.                                                         (662)

32.தங்கண்மலைச்சந்தனத்தைத் தழற்குழம்போவிதுவென்
                          னுந்தாபந்தோன்றத்,
தங்கள்கடற்றண்முத்தைக்கண்முத்தா னீறாக்
                          குந்தக்கோராய்ந்த,
தங்கடமிழ்க்குழலிசையைத்தன்செவிக்கு விட
                       மென்னுந்தபனனேகத்,
தங்கள்குலக்கலைமதியைத் தபனனெனுமென்
                     பட்டாடனிப்பொறாதாள்.

     (இ-ள்.) (சித்திராங்கதை),-தாபம் தோன்ற- (தாபபரிகாரம் எது செய்தாலும்
அதனால் தனது) விரகதாபம் (சிறிதுந்தணியாமல் மேல் மேல்) உண்டாக,- தங்கள்
மலை சந்தனத்தை தழல் குழம்புஓ இதுஎன்னும் - தங்கள் பொதியமலையிலுள்ள
சந்தனத்தின் குழம்பை 'இது அக்கினிக்குழம்போ!' என்று சொல்வாள்; தங்கள்
கடல்தண் முத்தை கண் முத்தால் நீறு ஆக்கும் - தங்கள் கடலிலுண்டாகிய
குளிர்ந்தமுத்தை முத்துப்போன்ற (தனது) கண்ணீர்த்துளியினாற் சாம்பராம்படி
செய்திடுவாள்;தக்கோர் ஆய்ந்த தங்கள் தமிழ் குழல் இசையை தன் செவிக்கு
விடம் என்னும் -(சங்கப்புலவர்கள் முதலிய) பெரியோர்கள் ஆராய்ந்த தங்கட்கு
உரிய தமிழ் நூலின்முறைமைப்படி பாடிய புள்ளாங்குழலின் கீதத்தைத் தனது
காதுக்கு விஷமென்றுசொல்வாள்; தபனன் ஏக தங்கள் குலம் கலை மதியை
தபனன் எனும்-தபிக்குந்தன்மையனான சூரியன் அஸ்தமித்தபின்பு (தோன்றிய)
தங்கள் குலத்துக்குஆதிபுருஷனான கலைகள்நிறைந்த பூர்ணசந்திரனை 'இது
சூரியன்' என்பாள்; தனிபொறாதாள் என்பட்டாள்- தனிமையைப் பொறாதவளாய்
(அவள்) என்னபாடுபட்டாள்! [மிகத் தவித்தா ளென்றபடி]; (எ-று.)

     இயல்பிற் குளிர்ச்சியையுந் இனிமையையுஞ் செய்கிற சந்தனக் குழம்பு,
முத்துமாலை, வேய்ங்குழலிசை, சந்திரன் என்பன பிரிவுத் துன்பமுடையார்க்கு
அத்தாபந்தீர்த்துக் குளிர்ச்சியையும் இனிமையையுஞ் செய்யமாட்டாமையோடு
காமோத்தீ்பகமாய் அத்தாபத்தை மிகுவிப்பனவு மாதலால், அவற்றை விரகிகள்
வெறுக்குந்தன்மை இங்கு உணரத்தக்கது. பாண்டியநாட்டைச்சார்ந்த கடலில்
முத்துக்கள் மிகுதியாக உண்டாவது, பிரசித்தம். தமிழ்பாஷைபாண்டியராசர்களாற்
போற்றிவளர்க்கப்பட்டமைபற்றி, 'தங்கள் தமிழ்' என்றார். 'கண்முத்து' என்றவிடத்து,
'முத்து' என்றது - நீர்த்துளிக்கு உவமையாகுபெயர். விரகிகளுடையகண்ணீர்த்துளி
அத்தாபத்தால் மிக வெவ்விதாயிருத்தலால் 'தண்முத்தைக் கண்முத்தால் நீறாக்கும்'
என்றார்.                                                    (663)

33.- அச்செய்தியைச் செவிலித்தாயர் அரசனிடஞ் சொல்லுதல்.

அங்குயிர்போலிருமருங்குமாயமட மகளிரிருந்தாற்றவாற்றக்,
கங்குலெனும்பெருங்கடலைக்கரைகண்டாள் கடற்புறத்தேக
                                  திருங்கண்டாள்,
இங்கிவள் போய்மலர்க்காவினெழில்விசயற் கீடழிந்தவின்ன
                                     லெல்லாம்,
சங்கெறியுந்தடம்பொருநைத்துறைவனுக்குச்செவிலியராந்
                                தாயர்சொன்னார்.