பக்கம் எண் :

அருச்சுனன்றீர்த்தயாத்திரைச் சருக்கம்385

ஒழியப் பஞ்சமுற்று வருந்துதல் கண்டு, சேரசோழபாண்டியரென்னும் அரசர்
மூவரும்பொதியமலையிற்சென்று அகஸ்தியமுனிவரைக் அவரருளியபடி
நோன்புநோற்றுஆகாயமார்க்கமாகச் செல்லுந் திறம் பெற்று, மழைபெய்விப்பவனான
இந்திரனதுசுவர்க்கலோகத்திற் சென்று சேர, இவர்கள்வரவையறிந்து இந்திரன்
இவர்களிருக்கும்பொருட்டுத் தன்ஆசனத்தில் தாழத் தனியே மூன்றுசிங்காதனம்
இடுவித்தான்; இவர்களுட் சேரனும் சோழனும் இந்திரன் காட்டிய அவ்வாசனங்களில்
வீற்றிருக்க, உக்கிரபாண்டியினோ அங்ஙனமின்றி இந்திரனுடைய சிங்காசனத்தில் ஏறி
அர்த்தாசனத்திற் சமமாகவீற்றிருந்தான்; அதுகண்டு பொறாமைகொண்ட தேவராஜன்,
மற்றையிருவரையும் வந்த காரியம் விசாரித்து, உடனே அவர்கள்நாடுகளில்
மழைபொழியுமாறு வரங்கொடுத்து, அவர்கட்குப் பலசிறப்புகள் செய்து அனுப்பிய
பின்பு, பாண்டியனைச் செருக்கடக்குமாறு கருதி ஒருசூழ்ச்சிசெய்து அவனுக்கு
மிகஉயர்வாகிய வரிசைசெய்வான்போல, எண்ணிறந்த பலர் தாங்கி மிகமெலிந்து
வருந்தும்படியான மிக்கபாரமுள்ளதொரு பெரிய ஆரத்தை அவனுக்குக் கொடுக்க,
உடனே அவன் அதனைத் தனது திறமையால் எளிதில்வாங்கிப் பூமாலைப்போல்
தன்கழுத்திலே தரித்துக்கொள்ள, இந்திரன் அதுகண்டு அதிசயங்கொண்டு,
'இன்றுதொட்டுஉன்னை ஆரந்தாங்குபாண்டியனென்று உலகமெல்லாம்
நன்குமதிக்கக்கடவது' என்றுசொல்ல, பாண்டியன் மதுரைக்கு மீண்டனன் என்பது,
முன்னிரண்டடியிற் குறித்தகதை. 'மகோததியும் வணங்குத் தாளான்' என்ற
விவரம் - உக்கிரபாண்டியன் அநேகஅசுவமேதயாகங்கள் செய்ததுகண்டு
பொறாமைகொண்ட இந்திரன், கடலரசனானவருணனை யழைத்து 'நீ சென்று
மதுரையை யழிப்பாய்' என்ன, அங்ஙனமேநடுநிசியிற் கடல் பொங்கி மதுரையைச்
சமீபித்தபோது, பாண்டியன்,தனதுதந்தையினால் முன்பு தனக்குக் கொடுக்கப்பட்ட
வேற்படையை எறிய, அதுபட்டவுடனே கடல் வறண்டு வலிமைகெட்டு, தோற்ற
பகைவர் வென்றவன்காலில்விழுந்து வணங்குதல் போலப் பாண்டியனது காலின்
மட்ட மாயிற்று என்பது.இக்குலத்துமுன்னோனான உக்கிரபாண்டியனது வரலாற்றை
இவன்மே லேற்றிக்கூறினார்; இங்ஙனங் கூறுதல், ஒருவகைக் கவிமரபு.     (665)

35.-சித்திராங்கதைசென்றபின் அருச்சுனன் மனவேதனையில் இரவு
கழித்து அந்தணருடன் துயிலுணர்ந்து காலைக் கடனைச் செய்தல்.

வழுதிதிருமகள்கொடுத்தமையலினால் வடிவமுந்தன்மனமும்வேறாப்
பொழுதுவிடிவளவுமதன்பூசலிலே கருத்தழிந்துபூவாம்வாளி
உழுதகொடும்புண்வழியேயூசிநுழைந் தெனத்தென்றலூரவூர.
விழிதுயிலாவிசயனுமவ்விபுதருடன்றுயிலுணர்ந்துவிதியுஞ்செய்[தான்

     (இ-ள்.) வழுதி திருமகள் - பாண்டியன் குமாரியான சித்திராங்கதை,
கொடுத்த -உண்டாக்கிய, மையலினால் - காமமயக்கத்தினால், தன் வடிவம்உம்
மனம்உம்வேறுஆ-தன்மேனியும் மன