பக்கம் எண் :

குருகுலச் சருக்கம்39

60.கோனிடநினைவொடு குறுகிநீயுநன்
மானிடமடந்தையாய் மணந்துமீள்கென
வானிடைநதியையும் வழுவினாலவள்
தானிடருறும்வகை தந்தையேவினான்.

     (இ - ள்.) 'நீஉம்-, கோன் இடம் - அரசனாகப்பிறக்கும் வருணனிடம்,
நினைவொடு - (அன்புகொண்ட) மனத்தொடு, நல் மானிடம் மடந்தை ஆய் -
அழகியமானிடமகளாய். குறுகி- கிட்டி, மணந்து - (அவனைக்) கூடி (ச்சில
காலந்தங்கியிருந்து),மீள்க - மீண்டு (உன்சுய) வடிவத்தையடைவாய், ' என -
என்று, வானிடை நதியைஉம்- ஆகாயத்திற் செல்லும் கங்கைநதியின்
பெண்தெய்வத்தையும், வழுவினால் - (அவள்செய்த) தவற்றினால், அவள் இடர்
உறும் வகை - அக்கங்கை மனத்துயரமடையும்படி,தந்தை - படைத்தற் கடவுளான
அந்தப்பிரமன், ஏவினான் - (சாபமிட்டு) அனுப்பினான்;(எ - று.)

     வானிடைநதியின் வழு - தன்னைக் காதல்கொண்டுநோக்கின வருணனைப்
பிரமசபையிற் காதலோடு தானும் பார்த்தது. நினைவொடு குறுகி என்பதற்கு -
முற்பிறப்புணர்ச்சியோடு கிட்டி என்று உரைத்தலும் ஏற்கும். தந்தை -
யாவற்றையும்தந்தவன் என்ற காரணத்தினாற் படைத்தற்கடவுளைக் காட்டிற்று.
தான் - அசை,                                             (68)

61.பாரினுநமக்கொரு பதமுண்டென்றவள்
ஈரமுற்றிழிதரு மெல்லைவானகத்து
ஓரிடையுடன்விழு முற்கைபோன்முக
வாரொளிமழுங்கினர் வசுக்கடோன்றினார்.

     (இ - ள்.) 'பாரின் உம் - பூமியிலும், நமக்கு-, ஒரு பதம் - ஒரு ஸ்நாதம்,
உண்டு- இருக்கின்றது,' என்று-, அவள் - அந்தக்கங்கா தேவி, ஈரம்உற்று -
கசிவுகொண்டு.இழிதரும் -(பூலோகத்தை நோக்கி) இறங்குகின்ற, எல்லை -
போதினில்,- வானகத்து -ஆகாயத்திலே, ஓரிடை - ஓரிடத்திலே, உடன் விழும்
உற்கை போல் -ஒருசேரவிழுகின்ற கொள்ளிக்கட்டைபோல, முகம் வார்ஒளி
மழுங்கினர் -முகத்தினுடைய மிக்கவொளி மழுங்கினராகி, வசுக்கள் -
வசுக்களென்னும்தேவகணங்கள், தோன்றினார் - காணப்பட்டார்;

     இது, கங்கை பூமியிலிறங்கும்போது, வானகத்திலே ஓரிடத்திலே வீழும் பல
விண்வீழ்கொள்ளிபோல முகவொளி மழுங்கி வானத்திலிருந்து இறங்கும் வசுக்கள்
அந்தக் கங்காதேவியாற் காணப்பட்டமை கூறுகின்றது.ஆகாசகங்கையா
யிருந்தவளுக்குப் பூமியிலும் பகீரதனாற்கொணரப்பட்டு இருக்குமிடம்
ஏற்பட்டதனால், 'பாரினும் நமக்கு ஒருபதமுண்டு' எனக்கருதினாள்;
அங்ஙனங்கருதியதனால் மனத்திற் சிறிது தேறுதலுண்டாயிற் றென்க.     (69)

62.என்னையிங்கிழிந்தவா றெங்கண்மாநதி
யன்னையென்றவளடி யவர்வணங்கலும்
தன்னையங்கயனிடு சாபங்கூறினாள்
பின்னையங்கவருந்தம் பெற்றிபேசுவார்.