கூட்டத்துக்குத் தலைவனான வாலி மனங்கலங்கி விழவும், மரம் ஏழ் உம் உததிஏழ்உம் ஒன்றுபடஊடுருவ - ஏழுமராமரங்களும்ஏழுகடல்களும் ஒருசேர ஊறுபடவும், சரம் தொடுத்த - அம்பைச் செலுத்திய, ஒரு வில் வீரன் - ஒப்பற்ற வில்வீரனான ஸ்ரீராமபிரான், எழுபது வெள்ளம் குரங்கின் சேனை துன்றி சூழ் போத- எழுபது வெள்ளமென்னுந் தொகையுள்ளவானரசேனைநெருங்கி (த்தன்னைச்) சூழ்ந்து வர, வாய்த்த திரு துணைவனோடுஉம் - (தனக்கு) இயைந்த சிறந்த தம்பியான இலக்குமணனுடனே, சென்ற - கால்களால் நடந்து போன, வழி - வழியாதலால், இன்று அளவும் துளவம் நாறும் - (அவ்விராமபிரானது திருவடிகளில் அன்பர்கள் அர்ச்சித்த) திருத்துழாயின்வாசனை இன்றைவரையிலும் வீசப்பெற்ற, சேது- சேதுவை, திறல் வல்லோன் - போர்த்திறத்தில் வல்லவனான அருச்சுனன், தரிசனம்செய்தான் - பார்த்தான்; (எ-று.) சேது தன்னைத் தரிசித்தமாத்திரத்திலே எல்லாப்பாவங்களையும் போக்கி எல்லாநன்மைகளையும் தருந் தன்மைய தாதலால், 'சேது தரிசனஞ்செய்தான்' என்றார்.சேது - இராமபிரான் வாநர சேனையுடன் இலங்கைசேருரம் பொருட்டு இடையிலுள்ளதென் கடலைக் கடத்தற்காக அதில் வானரர்களைக் கொண்டு மலைகளைக்கொணர்வித்து அவற்றாற் கட்டுவித்த அணை. இராமபிரான் அன்பர்களிட்டதிருத்துழாயின் நறுமணம் நீங்காத திருவடிகளால் மிதித்து நடந்து சென்றதனால்,அத்துழாயின்நறுமணம் இப்பொழுதும் ஒழியாது அங்குச் செறிந்திருக்கு மென்றார்.திருத்துழாய் திருமாலுக்கு உரியது. கரன் என்ற வடமொழிப்பெயர் - கொடியவனென்று பொருள்படும்; இவன்- இராவணனுக்குத் தம்பிமுறையாகும் ஓர் அரக்கன்: தண்டகாரணியத்திலே இராவணன்தங்கையான சூர்ப்பணகை வசித்தற்கென்று அவ்விராவணன் குறித்த ஜநஸ்தாநமென்னுமிடத்தில் அவளுக்குப் பாதுகாவலாக அவனால் நியமித்துவைக்கப்பட்டபெரியஅரக்கர்சேனைக்கு முதல் தலைவன். சூர்ப்பணகை தனது சில உறுப்புக்களையறுத்திட்ட இராமலக்ஷ்மணர்மீது கறுக்கொண்டு சென்று கரன்காலில்விழுந்துமுறையிட, அவன் மிகப்பெரியசேனையோடும் அறுபதுலக்ஷம் படைவீரரோடும் சேனைத்தலைவர் பதினால்வரோடும் தூஷணன் திரிசிரா என்னும் முக்கியசேனாதிபதிகளோடும் புறப்பட்டுவந்து போர்தொடங்குகையில், இராமன் லக்ஷ்மணனைச் சீதைக்குக் காவலாகப் பர்ணசாலையில் நிறுத்தித் தான் தனியே சென்று எதிர்த்துப் பெரும்போர்செய்து பலரையும் அழித்து முடிவிற் கரனையுந் துணித்து வெற்றிகொண்டனன். வாலி - இந்திரன்மகன்; சுக்கிரீவனது தமையன். சீதையைத் தேடிக்கொண்டுவந்த இராமலக்ஷ்மணர்களோடு அநுமான் மூலமாக நண்புகொண்ட சுக்கிரீவன் தனக்குப் பல இடையூறியற்றிய தன் தமையனான வாலியைக்கொன்று உதவிபுரியுமாறு இராமனைவேண்ட, அதற்கு இரங்கிய பெருமான், சுக்கிரீவனை வாலியோடு |