பக்கம் எண் :

394பாரதம்ஆதி பருவம்

வலியப்போர் செய்யச்சொல்லி, அங்ஙனம் அவ்விருவரும் பொரு கையில்
மறைவிலிருந்து அம்புதொடுத்து வாலியை வதைத்தனன்.

     இராமலக்ஷ்மணரை அநுமான் மூலமாகச்சுக்கிரீவன் சிநேகித்த பிறகு,
தனதுபகைவனான வாலியைக் கொல்லும் வல்லமை இராமனுக்கு உண்டோ
இல்லையோ என்று ஐயமுற்றுத் தன்சந்தேகந் தீரும்படி 'எதிரிலிருந்த
ஏழுமராமரங்களையும் ஏககாலத்தில்தொளைபடும்படி எய்யவேண்டும்' என்று
சொல்ல, உடனே இராமபிரான் ஒரே அம்புதொடுத்து அம்மரங்களேழையும்
தொளைப்படுத்தினன்.

     இராவணனாற் கவரப்பட்ட சீதாபிராட்டி இலங்கையிலிருக்கிற செய்தியை
அநுமான் சென்று அறிந்துவந்து சொன்னபின்பு இராமபிரான் வாநரசேனையுடனே
புறப்பட்டுச் சென்று கடற்கரையையடைந்து, கடலைக்கடக்கஉபாயஞ்சொல்ல
வேண்டுமென்று அக்கடலரசனாகிய வருணனைப் பிரார்த்தித்துஅங்குத்
தருப்பசயனத்திலே படுத்து ஏழுநாளளவும் பிராயோபவேசமாகக் கிடக்க,
சமுத்திரராஜன் அப்பெருமானது மகிமையை அறியாமல் உபேக்ஷையாயிருக்க,
ஸ்ரீராமன் அதுகண்டு கோபங்கொண்டு, அனைவரும் நடந்துசெல்லும்படி கடலை
வற்றச்செய்யவேனென்று ஆக்நேயாஸ்திரத்தைத்தொடுக்கத் தொடங்கியவளவிலே,
அதன்உக்கிரத்தால் வருணன் அஞ்சி நடுங்கி ஓடிவந்து அப்பெருமானைச்
சரணமடைந்து கடல்வடிவமான தன்மேல் அணைகட்டுதற்கு உடன்பட்டு ஒடுங்கி
நிற்க, பின்பு இராமமூர்த்தி, வாநரங்களைக்கொண்டு மலைகளாற் சேதுபந்தனஞ்
செய்தனன்.                                                   (676)

46.-சேதுவின் வருணனை.

வன்றிரைவெங்களிற்றினங்களிரண்டுபாலு மலையாம
                         லிடுங்கணையமரனேபோலும்,
தன்றலைகளமிழாமலெடுப்பான்மேருத் தாழ்கடலினீட்டியதோர்
                                 தடக்கைபோலும்,
அன்றியிருபூதலமுமிருதட்டாகவகத்தியன்வாழ்குன்றினையுமணி
                                    முக்கோணக்,
குன்றினையுஞ்சீர்தூக்கிநிறுப்பதாகக் கோகநதனமைத்ததுலைக்
                                 கோலும்போலும்.

     (இ-ள்.) (அந்தச்சேதுவானது) வல் திரை - பெரிய அலைகளாகிய, வெம்
களிறுஇனங்கள் - வெவ்வியமதயானைகள், இரண்டு பால்உம் மலையாமல் -
இரண்டுபக்கத்திலும் (ஒன்றோடொன்று) போர்செய்யாதபடி, இடும் - (இரண்டுக்கும்
நடுவிலே) இட்ட, கணையம் மரன்ஏ -கணையமரத்தையே, போலும் - ஒக்கும்;
(மற்றும்), மேரு - மகாமேருமலை, தன் தலைகள் அமிழாமல் எடுப்பான் -
(வாயுவினாற் பறித்தெறியப்பட்ட) தனது சிகரங்கள் அமிழாமல் (அவற்றை)
எடுத்தற்கு,தாழ் கடலில் நீட்டியது- ஆழமான கடலில் நீட்டியதான, ஓர் தட கை -
ஒருபெரியகையை, போலும் - ஒக்கும்; அன்றி - இவைகளல்லாமல், இரு
பூதலம்உம் இருதட்டு ஆக - (ஜம்பூத்வீபமும் இலங்காத்வீபமும் என்னும்) இரண்டு
பூமியினிடங்களும்இரண்டு தட்டுக்களாக அமைய, (அவற்றின்மேல் வைத்து),
அகத்தியன் வாழ்குன்றினைஉம் அணி முக்கோணம் குன்றினைஉம் சீர்தூக்கி
நிறுப்பதுஆக -அகஸ்தியமுனிவன் வாழிடமான பொதிய